சாதித் திமிறு,
ஆணவம், சாதிப் பெருமை, சாதிய வன்மம், சாதிய அடக்குமுறை, சாதிய அடிபணிதல், உடலுழைப்பை
மட்டமாகப் பாக்குற உயர்சாதி மனப்பான்மை, நாங்க தான் ஒசத்தி, நாங்க தான் பிறவி அறிவாளிகள்,
நாங்க வெச்சது தான் சட்டம், நாங்க எல்லாம் ஆண்ட பரம்பரை, நீங்கள்லாம் எங்களுக்குக்
கீழ தான். எங்களுக்கு பண்ணையடிமைகளா தான் நீங்க வாழனும் என்கிற உயர்சாதி மனநிலை, சாதிய
உயர்வு மனப்பான்மை, சாதிய தாழ்வு மனப்பான்மை, இவை எல்லாமே சாதிய உணர்வுநிலையின் கூறுகள்
தான். இன்னைக்கு இருக்குற சாதிய முதலாளித்துவத்துலயும் ஒருத்தரோட வர்க்க உணர்வுநிலையானது
அவரோட சாதியாலயும், அவரோட சொத்துநிலையாலயும், வேலைநிலையாலயும் தீர்மானிக்கப்படுது.
சரி சாதிய முதலாளிகளோட உணர்வுநிலை எப்படிப்பட்டதா இருக்கு. உயர்சாதி முதலாளிகள் என்ன
சொல்லுறாங்களோ அதை வெச்சு அவங்கள எடை போடமுடியாதுங்க. ஏன்னா முதலாளிகள் எல்லாருக்குமே
ரெட்டை நாக்கு தான், அடி நாக்குல விசம், நுனி நாக்குல தேனா சொட்டும், இல்லாட்டி அவுங்களால
பிஸினஸே பண்ணமுடியாதே. இப்புடி இருக்கேல உயர்சாதி முதலாளிகளை பத்தி கேக்கவா வேணும்.
அவங்க என்ன நெனைக்கிறாங்க, அவங்க மனசுல என்ன தான் இருக்குண்ணு கண்டுபிடிக்குற மனக்கண்ணாடி
என்கிட்ட இல்லைங்கோ, ஆனா அவங்களோட செயல்பாடுகளை வெச்சே அவங்களோட எண்ணங்களையும், நோக்கங்களையும்
கண்டுபிடிச்சுடுவேன். அப்புடிப் பாத்தா உயர்சாதி முதலாளிகளோட உணர்வு நிலை எப்புடிப்பட்டதா
இருக்கு தெரியுமா, எப்புடியாவது சாதியை கட்டிக் காப்பாத்தனும் ஓய், சாதி தான் நம்ம
லாபத்துக்கு கேரண்டி. ஆனா அதுக்கு அறிவியல்ல தடையா இருக்கு. இருக்கட்டுமே அதுனால என்ன,
அறிவியலையும் புராணக் குப்பைகளா மாத்திடுவோமோல்லியோ. இதோ பாருங்கோ நம்ம உயர்ச்சாதியினர்
மட்டும் தான் ஆட்சிப் பொறுப்புல இருக்கனும், உயர் பதவிகளை வகிக்கனும், நிர்வாகப் பதவிகள்
எல்லாத்தையுமே தெறமைக்கு காப்புரிமை வாங்குன நம்ம அவா தான் வகிக்கனும், எக்காரணம் கொண்டும்
அதை இடைச்சாதி பயல்கள்கிட்டயோ, கீழ்ச்சாதி பயல்கள்கிட்டயோ விட்டுடப்புடாது. ஆனா முடியலையேடிம்மா
சமூக நீதி, சமூக நீதின்னு கூவுறாளே, சரி போனாப் போகுதுன்னு நாய்க்கு எலும்புத்துண்டை
போடுற மாதிரி அடையாளத்துக்கு ஒரு சில பதவிகளை வேணா விட்டுக்கொடுத்துடலாம். ஆனா தலைமை
நம்மகிட்ட தான் ஓய் இருக்கனும். அய்யோ இந்த இட ஒதுக்கீடு நம்மவாளை இப்புடி படுத்தறதே,
பெரிய எழவால்ல இருக்கு, பிராணனை போறதே, அதை எப்புடியாவது ஒழிச்சுக்கட்டுனா தான் நம்மவா
நிம்மதியா மூச்சுவிடமுடியும், அப்போத்தான் நம்மவாளோட பிறவித் தெறமைக்கும் கேரண்டி கெடைக்கும்.
இல்லைனா எல்லாமே கையை விட்டுப் போயிடுமேடிம்மா. அதுக்குப் போய் ஏன்னா பயப்படறேள், அதான்
நம்மவா இப்ப காங்கிரஸை கைவிட்டுட்டாளே, உயர்சாதி முதலாளிகளோட பினாமியா புரோக்கரேஜ்
பண்ணுற ஹிந்து பொலிடிக்கல் கஃபேய இப்போ பாஜககிட்ட இல்ல விட்டுருக்கா. எலெக்ட்டோரல்
பாண்ட்ஸ் கணக்குல காட்டமலே நம்மவா பாஜகவுக்கு வாரி இரைச்சுருக்காளே. இனிமே சாதிவாரி
கணக்கெடுப்பாவது மண்ணாவது, இட ஒதுக்கீடு வாயுலயும் மண்ணு தான் போங்கோ. ஏண்டிம்மா அதை
கஃபேயின்னு சொல்லுறே, கஃபேயிலயாவது காபி, டீ கெடைக்கும், இங்க சொட்டு பச்சைத்தண்ணீ
கூட கொடுக்கமாட்டாளே. கவலைப்படாதேள், அதெல்லாம் நமக்கு கீழ உள்ளவாளுக்குத் தான் அப்படி,
நம்மவாளுக்கு அங்க எல்லாமே கெடைக்குண்ணா. நாம மோடியை நம்பாட்டியும் கூட மோஹனை நம்பாம
இருக்கப்புடாது. நீ எந்த மோஹனை சொல்லுறே, மைக் மோஹனா?. இல்லண்ணா, நம்ம மோஹன் பஹவத்
மாமாவை தான் சொல்லுறேன். சாதியையும், நம்மவாளையும் நன்னா கவனிக்கலைனா மோஹன் மாமா, மோடி
தோல உரிச்சுடுவாரோல்லியோ.
(தொடரும்)