4. இந்து அல்லாத முதலாளிகள்:
பாஜக
வெறுத்தொதுக்குற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முதலாளிகளைப் பத்தி இப்ப பாப்போம். இத்தனை
ஆயிரம் முஸ்லிம்களை மோடி அரசு சித்திரவதை செஞ்சு கொன்னுருக்கே, இதுவரைக்கும் எந்த முஸ்லிம்
முதலாளியாவது அதை எதிர்த்து வெளிப்படையா குரல் கொடுத்துருக்காங்களா? இல்லையே, எதுக்கு
வம்பு ஏதாச்சும் பேசுனா ரெயிட் போட்டு நம்ம பிஸினஸையே காலி பண்ணிருவானுகன்னு அமைதியா
எந்த விமர்சனமும் பண்ணாம சுய லாபத்தை மட்டும் காப்பாத்துறவுங்களா தான இருக்காங்க. இவங்கள்ல
சில பேரு உதாரணமா ஷம்ஷெர் வியலில், அஷாத் மூப்பென், யூசுஃப் அலி இவுங்கள்லாம் அதுக்கும்
ஒரு படி மேல போய் வெக்கமே இல்லாம மோடியை பாராட்டுறவங்களாவும்
இருக்காங்க. லுலு குழுமத்
தலைவர் யூசுஃப் அலி பிரதமர்
மோடிக்கு ஃபோன் பண்ணி 'ஈத் முபாரக்' வாழ்த்து
வேற தெரிவிச்சுருக்காரு. எதுக்கு முஸ்லிம்களை
கொன்னதுக்காகவா? எல்லாமே அவங்களுக்கு பிஸினஸ வளர்க்குற சம்பிரதாயங்கள் தான. இவங்களே
பரவாயில்லைனு சொல்ற மாதிரி சுயநலத்துக்காக முஸ்லிம்களுக்கே துரோகிகளா மாறுனவுங்களும்
இருக்கத்தான செய்றாங்க. உதாரணமா தமிழ்நாட்டைச் சேர்ந்த சையத் இப்ராஹிம், நடிகை குஷ்பு,
பீஹாரைச் சேர்ந்த சையத் ஷானவாஸ் ஹுசைன், அன்வருல்-ஹக் இவங்க எல்லாம் துரோகிகள் தான்.
இந்தியாவுல உள்ள முஸ்லிம் கோடீஸ்வரர்கள்ல முதலிடத்துல இருக்குறவரு அஸிம் பிரேம்ஜி
(விப்ரோ குழுமம்).
அஸிம்
பிரேம்ஜி 2015ல ஆர்.எஸ்.எஸ் கூட்டத்துக்குப் போயிருந்தாரு. அதைப் பத்தி
விமர்சனம் வந்ததுக்குப் பெறகு அவர் என்ன சொன்னாரு தெரியுமா? ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்துகொண்டதை
அந்த அமைப்பின் கருத்துக்களை ஆதரிப்பதாக அர்த்தப்படுத்திக்கவேண்டியதில்ல.
வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு
ஒன்றாகச் செயல்படுவதற்குச்
சமமாக பார்க்கனும். (அடடா, என்ன ஒரு சமரசப் போக்கு!)
இதுபோன்ற ஒரு
மன்றத்துல கலந்துகொள்வதன்
மூலம் நான்
சங் சித்தாந்தத்தை
ஆதரிப்பதாகக் கருதப்படுவேன்
என்று சிலர்
அச்சம் தெரிவிக்கிறாங்க.
நான் ஒரு
அரசியல் நபர்
கெடையாது என்பதால்
அந்த ஆலோசனையை
நான் பின்பற்றல.
இருந்தாலும், எனது
நாட்டின் மீது
எனக்கு ஆழ்ந்த
ஆர்வமும் அக்கறையும்
இருக்கு. அதோட,
ஒரு குறிப்பிட்ட
மன்றத்துல பேசுவது
என்பது மன்றத்தில்
வெளிப்படுத்தப்படக்கூடிய கருத்துக்கள்
அல்லது ஏற்பாட்டாளர்கள்
நடத்தக்கூடிய அனைத்தையும்
ஒருவர் ஆதரிப்பதாக
அர்த்தமல்ல என்று
நான் நம்புறேன்னு
சொல்லிருக்காரு. “ராஷ்ட்ரிய சேவா
பாரதி"யின் பணியை தான்
மதிப்பதாகவும், அதுவே
தான் அங்கு
வந்ததற்கான காரணம்”னும்
சொல்லிருக்காரு. ஹிந்துத்துவா குண்டர்களோட உரையாடலுக்கோ,
விவாதத்திற்கோ கடுகளவுக்குக்கூட இடமேயில்லைன்னு நல்லா தெரிஞ்சபோதும் கூட அஸிம்
பிரேம்ஜி என்ன சொன்னாரு: "வேறுபட்ட
பார்வைகளோ அல்லது கருத்து
வேறுபாடுகள் இருந்தால்,
அவற்றை விவாதம்,
உரையாடல் மூலம்
தீர்க்க முடியும்,"னு
சொல்லிருக்காரு.
கோவிட் காலத்துல 2021 மே 12 அன்னைக்கு ஆர்.எஸ்.எஸ்
ஏற்பாடு செஞ்சிருந்த ஆன்லைன் கருத்தரங்க கூட்டத்துலயும் அஸிம்
பிரேம்ஜி கலந்துக்கிட்டு பேசியிருக்காரு.
“தொற்றுநோய் நமக்கு
உருவாக்கியுள்ள நெருக்கடியிலிருந்து
நல்ல அறிவியல்,
உண்மையை ஏற்றுக்கொள்ளும்
தன்மை, ஒற்றுமை
ஆகியவை மட்டுமே
நம்மை மீட்டெடுக்க
முடியும்.”னு
பேசியிருக்காரு. முதலாளிகள் எந்த சாதி மதத்தைச் சேர்ந்தவுங்களா இருந்தாலும் கூட
ஆளும் அரசாங்கத்தோட, அதுல உள்ளதுலயே கேடுகெட்ட பாஜக அரசாங்கத்தோட கூட சமரசம்
செஞ்சுக்குறவங்களா தான் இருக்குறாங்க.
(தொடரும்)
No comments:
Post a Comment