நம்ம எல்லாருக்குமே நூறு வயசு வரைக்கும் வாழனும்குற ஆசை இருக்கும். அப்புடி ஆசைப்படுறதுல எந்த தப்பும் இல்லையே, வாழுறதுக்காகத் தான் பொறந்துருக்கோம். அதை சாத்தியப்படுத்துறதும் நம்ம கையில தான் இருக்கு. எது உணவு, எது குப்பை என்பதை வேறுபடுத்திப் பார்த்து அறிவியல் விழிப்போட உணர்ந்து உணவை மட்டும் சாப்பிட்டா (conscious eating) எந்த பிரச்சினையும் இல்லாமலே அதை சாத்தியப்படுத்த முடியும். ஆனா அப்புடி சாப்புட முடியலைங்குறது தான இப்ப பெரிய சமூகப் பிரச்சினையா இருக்கு.
சாப்புடும் போது
டிவி பாக்காம, செல்போன்ல டிக்டாக் வீடியோ பாக்காம, யாரு கூடயும் பேசாம சாப்புடுறது
மட்டுமே உணர்ந்து உண்ணுதல் கெடையாது. உடலுக்கு சத்தையும், ஊட்டத்தையும் தர்ற பொருளை
மட்டும் தான் உணவுன்னு சொல்லமுடியும். வேற எந்த சத்தும் இல்லாம வெறும் கலோரியையும்
நஞ்சையும் மட்டுமே கொண்ட பொருட்களை உணவுண்ணே சொல்ல முடியாது, வெறும் நச்சுக் குப்பைனு
தான் சொல்ல முடியும். ஆனா 3 இஞ்ச் நாக்குக்கு அடிமைப்பட்டு அதையே உணவு மாதிரி ஃபுல்
மீல்ஸ் கட்டுனா சீக்கிரமே விசா வாங்கிட்டு போய்ச்சேரவேண்டியது தான் யாராலயும் காப்பாத்தவே
முடியாது. உடலுக்கு சத்தையும் ஊட்டத்தையும் தர்ற பொருளை விரும்பித் தேர்ந்தெடுத்து
சாப்பிடுறது தான் உணர்ந்து உண்ணுதல்.
என்ன தான் அறிவியல்
தொழில்நுட்ப யுகத்துல வாழ்ந்தாலும், இன்னும் பெரும்பாலானவங்க மூட நம்பிக்கைகளோட, மூடp
பழக்கவழக்கங்களோட தான் வாழுறாங்க. எல்லாரும் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துறாங்க,
ஆனா எல்லாரும் அறிவியல் மனிதர்களா பண்படல. பண்பட்டுருந்தா இன்னைக்கு கோயில், கடவுள்
பேரைச் சொல்லி ஒருத்தன் ஏமாத்தவும் முடியாது, இன்னொருத்தன் ஏமாறவும் முடியாது. அறிவியல்
தொழில்நுட்பம் என்பது பெரும்பாலான மனுசங்களுக்கு வெளில தான் இருக்கு. அவங்க அறிவியல்
மயமாகல. அவங்க மூளையில அறிவியல், கடவுள், கலாச்சாரம், சமூக அறிவியல், அரசியல் எல்லாமே
ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாம தனித்தனி அறையில பூட்டிவெச்சிருக்காங்க.
மிக்ஸி, கிரைண்டர்,
ஃபிரிஜ்னு அறிவியல் தொழில் நுட்பம் அடுப்படி வரைக்கும் வந்தும் கூட சமைக்கும் முறையில
எந்த விதமான அறிவியல் மாற்றத்துக்கான அவசியம் இருக்கானு கூட பெரும்பாலும் உணரப்படல.
நடைமுறை சமையலுக்கும் ஊட்டச்சத்து அறிவியலுக்கும் காத தூரமா தான் இருக்கு. மூணு இன்ச்
நாக்குக்கு அடிமைப்பட்டு உருவாக்கப்பட்ட பாரம்பரிய மூடப்பழக்கங்களும், அதை விட கேடுகெட்ட
நவீன மூடப்பழக்கங்களும் தான் சமையலை, சாப்பாட்டைத் தீர்மானிக்கிற சக்தியா இருக்கு.
பாரம்பரிய சமையல்ல நெறைய நல்ல விசயங்கள் இருக்கு. ஆனா அதை எந்த விமர்சனமோ, பகுப்பாய்வோ இல்லாம கண்மூடித்தனமா ஏத்துக்குறது நல்லது கிடையாது. கருத்துக்களை விமர்சிக்கிறாங்க, பகுப்பாய்வு செய்யுறாங்க, வரவேற்போம். ஆனா நம்ம உடலோட ஒரு பகுதியா மாறப்போற உணவை எந்த விமர்சனமும் இல்லாம ரொம்ப அலட்சியமா அப்புடியே ஏத்துக்குறாங்களே, அது ரொம்ப ரொம்ப தப்பு இல்லையா.
எம்.பி.பி.எஸ், எம்டி படிச்ச மருத்துவர்களே உணவூட்டத்துக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்குறதுல்ல. நோயாளியோட உணவூட்டத்தைப் பத்தி அவங்க பெரும்பாலும் எதுவுமே கேக்குறது இல்ல, கண்டுக்குறதே இல்ல. நோயாளிகளுக்கு விட்டமின்கள், தாதுச்சத்துக்கள்ல குறைபாடுகள் இருக்காண்ணு தெரிஞ்சுக்குறது இல்ல. என்ன சாப்பிடனும், எவ்வளவு சாப்புடனும்னும்னு கூட சொல்லுறது இல்ல. நீரிழிவு-டையபடிஸ் நோயாளிகளுக்கு மட்டும் தான் உணவுமுறையப் பத்தி சொல்லுவாங்க. அதுவும் ஆகாவாரியா தான் ஏதாவது சொல்லுவாங்க. ஆப்பிளைத் தவிர எந்த பழத்தையும் சாப்புடவேக் கூடாதுன்னு சொல்லுவாங்க. படிச்ச டாக்டர்களே இந்த லட்சணத்துல உணவூட்ட அறிவியலை அலட்சியப்படுத்தும் போது மருத்துவம் படிக்காத பாமர மக்களை எப்புடிங்க குறை சொல்லமுடியும்.
(தொடரும்)

No comments:
Post a Comment