Sunday, February 23, 2025

பொம்மைகளின் புரட்சி (87):

 

நாலு பேரும் வீட்டுக்குள்ள வந்தாங்களா, பாத்தா தாத்தா சூப் குடிச்சிக்கிட்டுருந்தாரு, மிமி படுத்துக்குட்டே நாய்க்குட்டி மாதிரி தட்டுலேருந்து சூப்பை லப் லப்னு குடிச்சிக்கிட்டுருந்தா…

குக்கு: சீக்கிரமாவே வந்துட்டீங்களா தாத்தா

அட்லு தாத்தா: ஆமாண்டா, என்ன கதையெல்லாம் படிச்சிங்களா, நல்லா இருந்துச்சா…

மஞ்சா: ஓ ரொம்ப நல்லா இருந்துச்சே…

பிம்பா: குக்கு தான் காமடியா ரகளை பண்ணிட்டா, சூரியன் மாமாவாம், மேகம் அத்தையாம், அப்போ பெரியப்பா, சித்தி, சித்தப்பா எல்லாம் யாரு குக்கு…

குக்கு: கடல் தான் நம்ம பெரியம்மா, மலை பெரியப்பா, காத்து நமக்கு சித்தி, நெலம் தான் நமக்கு சித்தப்பா…

யம்மு பாட்டி: சரி கொழந்தைங்களா கை, கால கழுவிட்டு வாங்க, வந்து முட்டைகோஸு சூப் குடிங்க…

குக்குவும், மஞ்சாவும் ஒருத்தரை ஒருத்தர் ஆச்சரியமா பாத்துக்கிட்டாங்க…

மஞ்சா: ஆமா எங்களுக்கு சூப் குடிக்கனும் போல இருந்துச்சுன்னு ஒனக்கு எப்புடி தெரியும்…

யம்மு பாட்டி: என் மனசெல்லாம் லைப்ரரில தான இருந்துச்சு…

மஞ்சா: பாட்டி எங்களுக்கு சாசர்ல ஊத்தி தாங்க, நாங்களும் சாஷா, அல்யோஷா மாதிரி குடிக்கப்பொறோம்…

யம்மு பாட்டி: எங்க கல்யாணத்துக்கு அன்பளிப்பா கப் & சாசர் செட் கொடுத்தாங்க, அதெல்லாம் யாராவது எங்கள உபயோகப்படுத்த மாட்டாங்களான்னு காத்துக்கெடக்கு, இருங்க கழுவி எடுத்துட்டு வர்றேன்…

அதுக்குள்ள பிம்பா தாத்தாகிட்ட நடந்ததையெல்லாம் சொன்னான்…

அட்லு தாத்தா: ஏண்டா கண்ணு அப்புடியா பண்ணுன, அறிவுடா அவ குக்குவ கிண்டல் பண்ணாதிங்க… என் செல்லம் தாத்தாகிட்ட வா… ஆமாம் ஆட்டோ மாமாவுக்கு காசு கொடுக்கல, லைப்ரரி மாமாவுக்கும் காசு கொடுக்கல, அப்புறம் ஏன் கரும்பு மாமாவுக்கு மட்டும் காசு குடுத்தீங்க…

குக்கு: அது தாத்தா, ஆட்டோ மாமா வசதியான மாமா, நல்லா டிப் டாப்பா சொக்கா, ஷூவெல்லாம் போட்டு, மினு மினுன்னு வாட்ச்செல்லாம் கட்டிருந்தாரு, செண்ட் அடிச்சிருந்தாரு… லைப்ரரி மாமா ரொம்ப பணக்கார மாமா, ரெண்டு கை நெறையா மோதிரம் போட்டுருந்தாரு, பதக்கஞ்சங்கிலி போட்டுருந்தாரு… ஆனா கரும்பு மாமா கிழிஞ்ச பனியன் தான் போட்டுருந்தாரு, ரோட்டுல எல்லாரும் கொடைக்கு கீழ தான் கடை வெச்சிருக்காங்க… நான் அவர் கொடையில்லாம வெயில்ல தான் இருக்காரு… அவருக்கு குட்டிப்பாப்பா இருக்கு, அவருக்கு மூணு புள்ளைங்கலாம், நம்ம காசு குடுக்காட்டி அந்த குட்டிப்பாப்பா பாவம் தான, அதான் நான் எதுவும் சொல்லல…

தாத்தா: எல்லாத்தையும் எப்புடி கவனிச்சிருக்கா பாத்தியா… அறிவுடா என் பேத்தி… சரி…நீங்க என்ன சரஸ்வதி லைப்ரரிக்கா போனிங்க?

மஞ்சா: ஆமாம் தாத்தா…

அட்லு தாத்தா: அதான் பொது நூலகம் இருக்குல்ல… இனிமே அங்க போகாதீங்க, அவென் ஒரு இவெனாச்சே, பேராசை புடிச்சவென்

மஞ்சா: இல்ல தாத்தா நாங்க அங்க போகனும், நேரமாயிடுச்சேன்னு கதைய படிக்காம வெச்சுட்டு வந்துட்டோம்…

அட்லு தாத்தா: சரி கடைசியா ஒரு மொறை வேணா போயிட்டுவாங்க, அதுக்கு மேல வேணாம்

யம்மு பாட்டி: சூப் ஆறிப்போயிடும் எங்க சீக்கிரமா குடிங்க பாப்போம்…

எல்லாரும் சாசர்ல ஊத்தி சாஷா, அல்யோஷா மாதிரியே சூப் குடிக்கிறாங்க… குக்குவும், பெப்போவும் மிமி மாதிரியே படுத்துக்கிட்டு நாய்க்குட்டி மாதிரி லப், லப்னு நக்கி நக்கி குடிக்கிறாங்க

(தொடரும்)

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...