Friday, February 21, 2025

பணம் பேசுறேன் (199):

 

இந்துக் கூட்டுக் குடும்பம்:

இந்துக் கூட்டுக் குடும்பம் (hindu undivided family) சட்டப்படி ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுருக்குன்னு சொல்லியிருந்தோம். இந்துக் கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family) என்பது சட்டப்படி வரிசெலுத்தும் நிறுவனமாகவும், தனி நபர்களிடமிருந்தும், பெரு நிறுவனங்களிடமிருந்தும் வேறுபட்ட தனித்துவமான அமைப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுருக்கு. மத்த பெரு நிறுவன அமைப்புகள் தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரிச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுது ஆனா இந்துக் கூட்டுக் குடும்பமோ இந்து தனிநபர் சட்டத்தின் அடிப்படையில நிர்வகிக்கப்படுது. இதன் மூலமா வணிகக் குழுக்களின் நிறுவனக் கட்டுப்பாட்டின் மீதான குடும்பங்களின் கட்டுப்பாடும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மூலமா நிறுவனங்களும் இந்து வணிக கூட்டுக் குடும்பங்களும் பின்னி பிணைக்கப்பட்டுருக்கு. இந்துக் கூட்டுக் குடும்பமாக இந்துக்கள் மட்டுமில்லாம, சீக்கியர்கள் புத்தமதத்தினரும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுறாங்க. ஆனால் கிறிஸ்தவர்காள், முஸ்லிம்கள், பார்ஸி, யூதர்கள் இதை பயன்படுத்தமுடியாது. 2005 சட்டத் திருத்தத்துக்கு முன்னாடி ஆண்கள் மட்டும் தான் இந்துக் கூட்டுக் குடும்பத்தின் வாரிசுகளாக அங்கீகரிக்கப்பட்டாங்க. அதுனால ஆணாதிக்கம், மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில சொத்துரிமையை நிர்ணயிப்பதற்கான அமைப்பாக இந்துக் குடும்பம் இருந்துருக்கு. இதன் மூலமா இந்து முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பிற்கான வசதிகளும், அதிக வரி விலக்குகளும், குறைந்த வரிவிகிதங்களும் அளிக்கப்பட்டுருக்கு. அதிக வருமானம் கொடுக்குற சொத்துக்களை பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கு மாற்றுவதன் மூலமா, குடும்பங்கள் தங்களோட வருமானத்தைப் பிரிச்சு ஒட்டுமொத்தமா கட்டவேண்டிய வரியை குறைக்கமுடியும். ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) பங்களிப்புகள், வரி சேமிப்புக்கான நிலையான வைப்புகளில் இந்துக் கூட்டுக் குடும்பம் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்குகளைப் பெறமுடியும். இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கிடையில கொடுக்கப்படுற பரிசுகளுக்கும் முழுக்க வரி விலக்கு கொடுக்கப்பட்டுருக்கு. இந்துக் கூட்டுக் குடும்பம் செய்யுற முதலீடுகளிலிருந்து கிடைக்குற வட்டி, வாடகை, ஈவுத்தொகை வருமானத்துக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு குறைந்த வரி தான் விதிக்கப்படுது. குடும்ப நலன் அல்லது சொத்து பராமரிப்புக்காக ஏற்படும் செலவுகளுக்கும் இந்துக்கூட்டுக் குடும்பம் விலக்குகளைப் பெறமுடியும். உதாரணமா, குடும்ப உறுப்பினர்களின் கல்வி, திருமணம் அல்லது மருத்துவ சிகிச்சை தொடர்பான செலவுகள் இந்துக் கூட்டுக் குடும்பத்தின் வருமானத்திலிருந்து கழிக்கப்படுது. இந்த கேடுகெட்ட இந்துக்கூட்டுக் குடும்பங்களால இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுது. இந்தியாவுல கிட்டத்தட்ட 10 லட்சம் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுருக்கு. 2022-23 ஆம் ஆண்டில் 8.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) வருமான வரிக் கணக்குகளை (ITRs) தாக்கல் செஞ்சு ரூ.3,803 கோடி மதிப்புள்ள விலக்குகளைக் கோரியிருக்காங்கன்னு நிதி அமைச்சகமே சொன்னுச்சே ஞாபகம் இருக்கா? இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு காட்டப்படும் சலுகைகளும் இந்துவல்லாத நிறுவனங்களுக்கு காட்டப்படும் பாகுபடுகளும் மதச்சார்பற்ற இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 14,15, 44க்கு முற்றிலும் புறம்பானது. அதை நீக்குற வரை இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடுன்னு சொல்லிக்கவே முடியாது. ஏழை எளியவங்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கொடுத்தா இலவசங்களால வருவாய் கொறையுது வளர்ச்சி சரியுதுன்னு கேவலப்படுத்துருங்காளே, ஆனா கேடுகெட்ட இந்த இந்து நிதி முதலைகளுக்கு மட்டும் எவ்வளவு சலுகைகளை கொடுத்து மோசடி பண்ண அனுமதிக்குறாங்க பாருங்க. இந்து முதலாளிகள் மூலதனத்தை திரட்டுறதுக்கு இந்திய அரசே என்னம்மா ஏற்பாடு பண்ணி கொடுத்துருக்கு பாருங்க.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...