4. இந்து அல்லாத முதலாளிகள்:
அடுத்து பார்ஸி
முதலாளிகளைப் பத்திப் பாப்போம். இந்தியாவோட ஒன்பதாவது பெரும் பணக்காரரா இருக்குற சைரஸ்
பூனாவாலா ஒரு பார்ஸி முதலாளி தான். சைரஸ் பூனாவாலா குழுமத்தின் சொந்தக்காராரான இவர்
தான் 2022ல சுகாதாரத்துறையில (Healthcare) உலகின் முதலாவது பெரும்பணக்காரரா இருந்தவரு.
நோய் தடுப்பு மருந்துகளை-“வேக்சின்களை” தயாரிக்கிற சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா
இவரோடது தான். பூனாவாலா ஃபின்கார்ப் என்ற பேருல வங்கியல்லாத நிதி நிறுவனத்தையும் வெச்சிருக்காரு.
இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது ரெண்டுமே கொடுக்கப்பட்டுருக்கு. மோடியைப் பாராட்டும்
இவருக்கு லோக்மான்ய திலக் அறக்கட்டளையின் லோக்மான்ய திலக் தேசிய விருதும் கொடுக்கப்பட்டுருக்கு.
நதிர் கோத்ரேஜ் (கோத்ரேஜ் குரூப் ஆஃப் இண்டஸ்ட் ரீஸ், கோத்ரேஜ் அக்ரோவெட்), ரத்தன்
டாடா, லியா, மாயா & நெவில் டாடா, (டாடா குழுமம்), நஸ்லி வாடியா (வாடியா குழுமம்),
ஷபூர் மிஸ்ட்ரி, ஸஹான் மிஸ்ட்ரி (ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்) இவங்க எல்லாருமே பார்சி
முதலாளிகள் தான்.
அடுத்து புத்த
மத முதலாளிகளைப் பத்தி பாப்போம். ஏற்கெனவே தலித் முதலாளிகள் பட்டியல்ல நாம பாத்த கோடீஸ்வரர்
கல்பனா சரோஜ் ஒரு பௌத்த முதலாளி தான். ரத்னதீப் காம்ப்ளே (என்ஸ்பைர் டெக்னாலஜிஸ் பிரைவேட்
லிமிடெட், சொலியூசன்ஸ் இன் இன்னொவோடிவ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட், ஜிபி மல்டி கேர்
ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட். என் ஸ்பையர் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், மோடுலேரியோ
ஃபர்னிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்பேஸ்வர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், லொகோ லெஸர்
டிராவல்ஸ்), ஸ்வீட்டி காம்ப்ளே (ப்சென் கார்மென்ட்ச் க்ளஸ்டர் பிரைவேட் லிமிடெட்),
டுஸ்ஷார் கபூர் (டுஸ்ஷார் என்டெர்டெய்ன்மென்ட் ஹவுஸ்), இவங்களும் பௌத்த முதலாளிகள்
தான்.
பௌத்த முதலாளியான
ரத்னதீப் காம்ப்ளே பௌத்த முதலாளிகளுக்கான வர்த்தகம், தொழில்துறை கூட்டமைப்பை 2012ல்
உருவாக்கியிருக்காரு. இந்த கூட்டமைப்புக்கு இந்தியாவின் 11 மாநிலங்கள்ல கிளைகளைக் கொண்டிருக்கு.
இதன் தமிழ் நாட்டுக் கிளை திருச்சியில் செயல்படுது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்குமார்
படோல், லடாக்கைச் சேர்ந்த ஜம்யாங் செரிங் நம்கியால், இவங்க ரெண்டு பேருமே பௌத்த மதத்தைச்
சேர்ந்தவங்களா இருந்தும் கூட பாஜகவோடு ஐக்கியமாகி தலித்களுக்கும், பௌத்தர்களுக்கும்
எதிரா செயல்படுற துரோகிகளாக மாறிட்டாங்க என்பதையும் இங்க குறிப்பிட்டே ஆகனும்.
அடுத்ததா சீக்கிய
முதலாளிகளைப் பத்தி பாப்போம். இந்தியாவோட பணக்கார
சீக்கிய முதலாளிகள்லயே முதல் இடத்துல இருக்குறது குல்தீப் சிங்க் திங்க்ரா தான். பெர்கெர்
பெயிண்ட்ஸ் கம்பெனி இவரோடது தான். குஷால் பால் சிங்க் (டிஎல்எஃப் ரியல் எஸ்டேட்), மல்விந்தர்
சிங்க் (ரான்பேக்ஸி லேபரட்டரீஸ்), அனல்ஜித் சிங்க் ( மேக்ஸ் குரூப், லீயு கலெக்சன்ஸ்),
சிங்க் குடும்பம் - பசுதியோ நரைன் சிங்க் & தனஞ்செய் குமார் சிங்க் (அல்கெம் லேபரட்டரீஸ்)
இவங்க எல்லாருமே சீக்கிய முதலாளிகள் தான்.
(தொடரும்)
No comments:
Post a Comment