கடனுக்கு மாதத்திற்கு 5%க்கு மேல் வட்டி வாங்குவது மனுதர்மத்துல தடைசெய்யப்பட்டுருக்கு. நாரதாவும் மனு கூறுவதைப் போன்ற விதிகளைத்தான் பரிந்துரை செய்துருக்கார். மனுவின் விதிகள் 140, 141, 142க்கு அளிக்கப்பட்ட விதிகள் குல்லுகா, மற்றும் பிற தெளிவுரையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டுருக்கு. அதன்படி மனுவின் 140வது விதியின் அடிப்படையிலான குறைந்த வட்டிவிகிதம் பிணையத்துடன் கூடிய பாதுகாக்கப்பட்டக் கடன்களுக்கு பொருந்தும். பாதுகாக்கப்படாதக் கடன்களுக்கு விதி 142 பொருந்தும். இந்தக் கண்ணோட்டம் யாக்ஞவல்கியரால கூறப்படுவதுடனும் பொருந்தக்கூடியதாக இருக்கு.
வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் பல்வேறு பணக்கடன் வழங்கும் நடைமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் முதல் கடன் 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. கிமு 2000 மற்றும் 1400 க்கு இடைப்பட்ட வேத காலத்தில் கடன்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தனது கட்டுரையில் எரிக் துசைன் குறிப்பிட்டுள்ளார்.
கிமு
5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கடன்கள் பணமாகவும் பொருளாகவும்
நீட்டிக்கப்பட்டது. பௌத்யானா, கௌதமர் மற்றும் வேறு
சில சட்டமியற்றுபவர்களால் எழுதப்பட்ட நூல்களில் கந்து வட்டி விகிதங்களை
வசூலிப்பது ஒழுக்கக்கேடானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்துறை
கல்வி ஆய்வுக்கான சர்வதேச இதழில் 2022ல் பிஎஸ்
ஃபரிதா அவர்கள் “கந்துவட்டி
நடைமுறை: பண்டைய இந்தியாவில் பணம்
கடன் வழங்கும் அமைப்பின் சமூக-பொருளாதாரக் கண்ணோட்டம்”
என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுருக்காங்க. அதில் அவர் கூறியுள்ளவை பின்வருமாறு:
பழங்கால இந்திய சமஸ்கிருத நூல்கள் குசிதா, வர்துசா, விருத்தி மற்றும் வியாஜா போன்ற பல்வேறு சொற்களால் வட்டி அல்லது வட்டி பற்றிய கருத்தை தெரிவிக்கின்றன. இந்த சொற்கள் சட்டமியற்றுபவர்களால் வேறுபடுத்தப்படாமல் பயன்படுத்தப்பட்டதால், அவர்கள் அவற்றில் ஒன்றை கந்துவட்டிக்காகவும் மற்றொன்றை வட்டிக்காகவும் பயன்படுத்தினார்களா என்பதை நிறுவுவது கடினம். இருப்பினும், கந்துவட்டி தார்மீக, சமூக உணர்வுகளின் அடிப்படையில் தடைசெய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், பௌதாயனா என்ற சட்டமியற்றுபவர் வட்டி வாங்குவதை தாழ்ந்த செயலாகக் கருதி, அது வைசியர்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக பரிந்துரைக்கிறார், பிராமணன் அத்தகைய செயலில் ஈடுபடுவதைத் தடை செய்கிறார். ஒரு பிராமணன் அத்தகைய செயலில் ஈடுபட்டால் அவர் ஒரு சூத்திரனாகத் தாழ்வாகப் பார்க்கப்படுவார். மேலும் ஒரு பிராமண வட்டிக்காரன் (வர்துசிகன்) சூத்திரனாக கண்டனம் செய்யப்படுவார், அவர் ஒரு வைசியனாகக் கூட நடத்தப்படமாட்டார். ஒரு பிராமணனின் கொலை அல்லது கருக்கலைப்பைக் காட்டிலும் கந்துவட்டி மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது. மௌரியர்களுக்குப் பிந்தைய காலத்தின் மிக முக்கியமான சட்டமியற்றுபவரான மனு, ஒரு பிராமனரோ அல்லது க்ஷத்ரியரோ வறியநிலையில் கூட வட்டி வாங்குவதில் ஈடுபடக்கூடாது, ஆனால் சட்டத் தேவைக்காக (தர்மர்த்தம்) சராசரித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு (பாப்பியாசே) கொஞ்சம் வட்டி கொடுக்க வேண்டும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறார். நாரதர் இந்த நடைமுறையை க்ஷத்திரியனுக்கு ஆதரவாக ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது, ஆனால் ஒரு பிராமணன் ஒருபோதும் வட்டியை நாடக்கூடாது, துன்பத்தின் உச்சக்கட்டத்தில் கூடக் கூடாது என்று கூறுகிறார். மற்றொரு சட்டமியற்றுபவரான பிருஹஸ்பதி, ஏழைகளின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் சுமையை நான்கு மடங்காக, எந்தத் தயக்கமுமின்றி எட்டு மடங்காக உயர்த்தியதால், கந்துவட்டிச் செயலை மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டிக்கிறார்.
(தொடரும்)