Tuesday, September 26, 2023

சூதாடும் காட்டேரி (53):

 


தர்மசூத்திரங்கள்ல சொல்லப்படுற பித்ருருனா, தேவருனா, ரிஷிருனா ஆகிய மூன்று கடமைகளை நிறைவேற்றவேண்டியது ஒரு தனிநபரின் மதக்கடமைகளாக கருதப்படுது. இந்த மதக்கடமைகளுக்கு உள்ள புனிதத்தன்மை படிப்படியாக பணத்தைக் கடனாகக் கொடுக்குறது, மதம் சாரா பரிவர்த்தனைகள் போன்றவைக்கும் ஒட்டிக்கொள்ளுது. ஒரு நபர் தான் பெற்றக் கடனைத் திரும்பசெலுத்தவேண்டியது சட்டபூர்வமான கடமையாக உள்ளது. ஒரு தந்தையால தன் வாழ்நாளில் செலுத்தமுடியாதக் கடனை திரும்பசெலுத்த வேண்டிய புனிதக் கடமை அவரது மகனைச் சேருது. அப்படி செய்தால் தான் இறந்தவரோட ஆத்மா சாந்தியடையும் என்பது மதநம்பிக்கையா இருக்குது. ஆகையால் ஆண் சந்ததியினர் அந்தக் கடமையை ஆற்றவேண்டும். இந்தத் தலைப்பின் கீழ் கடன்கள், குறுகிய கால பணப்பரிவர்த்தனைகளுக்கான சட்டம் குறித்துதான் நாம பார்க்கப்போறோம் என்ற போதிலும், இந்து நீதியமைப்புல கடனுக்கான சட்டங்கள் மூன்றுக்கடன் தத்துவத்தின் அடிப்படையில் தான் உருவாகியிருக்கு.

வட்டி ஈட்டுவதற்காகக் கடன் கொடுத்தல்:

 பணத்தைக் கடனாகக் கொடுத்ததற்கான ரசீது, கடனைக் குறிப்பிட்டக் காலத்தில் திரும்பசெலுத்தவேண்டும் என்ற கடப்பாடு, குறித்த ஒப்பந்தம் ஆகியவை லாபம் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இது சமஸ்கிரதத்துல குஷிதா என அழைக்கப்படுது. பணத்தைக் கடனாகக் கொடுப்பவர்கள் வட்டிக்கு கடன் கொடுப்பதைத்தான் தொழிலா செய்யுறாங்க.

வட்டியின் பல்வேறு வகைகள்:

பிறருக்குக் கடன் கொடுக்கும் ஒவ்வொருவரும், சட்டத்தால அங்கீகரிக்கப்பட்ட வட்டிவிகிதத்துக்கு மேல் இல்லாம ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்துல வட்டியைப் பெறலாம். பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம், எவ்வளவு வட்டி வாங்கலாம் என்பது குறித்து பல கட்டுப்பாடுகளின் மூலம் ஸ்மிரிதிகள் ஒழுங்குமுறை செய்துருக்கு. சாஸ்திரங்கள்ல உள்ள சட்டதிட்டத்தின்படி கடன் பரிவர்த்தனையில் கடன் பெற்றவர் வட்டி செலுத்த சம்மதிக்கலாம். ஆறு விதமான வட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுருக்கு.

1.   கலிகா:

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடனுக்கு அளிக்கப்படும் வட்டி கலிகா என அழைக்கப்படுது.

2.   கையிகா:

வேலை செய்து உடலுழைப்பின் மூலமா கடனுக்கு அளிக்கப்படும் வட்டி கையிகா என அழைக்கப்படுது.

3.   சக்கரவ்ருத்தி:

கடனோட வட்டிக்கும் வட்டி அளிப்பது, கூட்டு வட்டி செலுத்துவது சக்கரவ்ருத்தி என அழைக்கப்படுது.

 

4.   போகலாபா

கடன் வாங்குபவர்களின் வீடு, வயல் போன்ற சொத்துக்களை அனுபவிப்பதன் மூலம் லாபம் அடைவது போகலாபா என அழைக்கப்படுது.

சொத்தை அடகு வைத்துக் கடன் பெற்று வட்டிக்கு பதிலா சொத்தை வைத்துக்கொள்ளும் உரிமையை கொடுப்பது போலத்தான் இதுவும். இதை கௌதமா அபிபோகா என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பரிவர்த்தனையில வட்டிக்கு பதிலா பொருளையோ, சொத்தையோ முழுமையா அனுபவிக்கும் உரிமை அளிக்கப்படுது.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...