Saturday, September 23, 2023

சூதாடும் காட்டேரி (52)

 

தர்மசூத்திரங்கள்ல கடனைத் திருப்பி செலுத்துவது, கடனைத் திரும்பப்பெறுவதற்கான சட்ட நடைமுறை ருனதனா என அழைக்கப்படுது.

எந்தக் கடனைத் திரும்பசெலுத்தனும், எந்தக் கடனைத் திரும்பசெலுத்த வேண்டியதில்லை, யாரு, எங்கே எந்தமுறையில திரும்பசெலுத்தனும் என்பது குறித்தும், கடன் கொடுப்பதற்கும், கடனைத் திரும்பப்பெறுவதற்குமான விதிமுறைகளும் ருனதனா என்ற தலைப்புல கொடுக்கப்பட்டுருக்கு.

கடனைத் திரும்பசெலுத்தும் கடமைக்குப் பின்னிருக்கும் தத்துவம்:

 கடன்பட்ட நபருக்கு உள்ள கடனைத்திரும்ப செலுத்துவதற்கான கடப்பாட்டை விதிக்கும் சட்டத்திற்குப் பின்னே ஒரு தத்துவ மூலம் காணப்படுது. கடன் என்ற கருத்தாக்கமும் அதைத் திரும்பசெலுத்துவதற்கானக் கடமையும் வேதங்களிலிருந்து உருவானதாகக் கூறப்படுது. வேத இலக்கியங்களில் கடனைத் திரும்பசெலுத்த வேண்டியக் கடமை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுருக்கு. ஆனால் கடன்-ருனா என்ற கருத்து பணத்தை கொடுப்பது அல்லது பிறரிடமிருந்து கடனை வாங்குவது என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை. ஒரு நபர், தான் இந்த உலகத்தில் பிறந்தது, உட்பட தான் பெரும் ஒவ்வொரு நலனுக்குமான மூலத்துக்கும் செய்யவேண்டிய கடமையாக புரிந்துகொள்ளப்பட்டுருக்கு. கடவுளுக்கு செய்யவேண்டியக் கடமைகள் தேவருனா என அழைக்கப்படுது. மூதாதையர்களுக்கு செய்யவேண்டியக் கடமை பித்ருருனா என அழைக்கப்படுது. முனிவர்களுக்கு செய்யவேண்டியக் கடமை ரிஷிருனா என அழைக்கப்படுது. இந்த மூன்று கடன்களும் ஒவ்வொரு நபரும் செய்யவேண்டியக் கடமைகளா வேதங்கள்ல அங்கீகரிக்கப்பட்டுருக்கு. கடனைத் திரும்பசெலுத்துவதற்கான சட்டம் மட்டுமில்லாம, இந்துக்களின் பழமையான சட்டங்கள் முழுவதுமே ருனதிரயா எனப்படும் மூன்று கடமைகள் என்ற விதிமுறை அல்லது தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கு. தர்மசாத்திரங்களுக்கு தெளிவுரை அளிக்கும்போது இந்தமூன்றுக் கடமைகளுக்கு முரண்பாடில்லாது ஒத்துப்போகும் வகையில் மட்டும்தான் அளிக்கவேண்டும் என்பது முதன்மை விதியாக உள்ளது. மஹாபாரதத்தில் சமூகத்துக்கு அல்லது மனிதகுலத்துக்கு செய்யவேண்டிய நான்காவது கடமை கூறப்பட்டுருக்கு.

இதன்படி ஒவ்வொரு நபரும் செலுத்தவேண்டிய கடன்கள் நான் கு உள்ளது. ஒன்று கடவுளுக்கு செய்யவேண்டிய தேவருனா. இரண்டாவது மூதாதையர்களுக்கு செய்யவேண்டிய பித்ருருனா, மூன்றாவது முனிவர்களுக்கு செய்யவேண்டிய ரிஷிருனா நான்காவது சமூகத்திற்கு செய்யவேண்டிய மனவருனா.

ஒரு ஆண் தன் குடும்பத்தை நீடிக்கசெய்யும் விதத்தில் சந்ததியை விருத்திசெய்ய மகன்களைப் பெற்று பித்ருருனா கடமையை செலுத்தவேண்டும். படைத்த கடவுளைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதும் அவருக்கு பலிகள்-யஜ்ன கொடுப்பதன் மூலம் தேவருனா கடமையாற்றவேண்டும். அறிவைப் பெற்று அதைப் பரப்புவதன் மூலம் ரிஷிருனா கடமையாற்றவேண்டும். ஒரு நபர் ஒவ்வொரு வகையிலும் சமூகத்துக்கு செய்யவேண்டிய எல்லா கடமைகளையும் செய்வதன் மூலம் மனவருனா கடமையாற்றவேண்டும்.

 (தொடரும்)

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...