வட்டியின்
பல்வேறு வகைகள்:
5.
ஷிகாவிரித்தி:
கடனுக்கான
முதலை அடைக்கும் வரை தினசரி அளிக்கப்படும் வட்டி ஷிகாவிரித்தி என அழைக்கப்படுது. ஷிகா
என்றால் முடி என்று பொருள். முடி தினசரி வளர்கிற மாதிரி வட்டியும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து
வளர்வதால ஷிகாவிரித்தி என பெயரிடப்பட்டுருக்கு.
6.
கரிதா:
கடன்
வாங்குபவர் வேறுவகையில கடனுக்கான வட்டியை செலுத்த ஒப்புக்கொள்வது கரிதா என அழைக்கப்படுது.
வட்டி விகிதம்:
கடன்
ஒப்பந்தத்தில் பங்கேற்கும் இரு தரப்பினரும் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளுவதன் அடிப்படையில்
வட்டி விகிதம் இருக்கனும் என்பதுதான் பொதுவிதியா இருக்கு. ஆனபோதும் இந்த விதியின் கீழும்
வட்டியைத் திரும்பப் பெறுவதன் மீது பல கட்டுப்பாடுகள் இருக்கு.
இது
குறித்து மனுதர்மத்துல என்ன சொல்லப்படுதுன்னா:
பணத்தைக்
கடனாகக் கொடுப்பவர்(வர்துஷிகா) வஷிஸ்தா அனுமதிக்கும் வட்டி விகித அளவில் முதலுக்கான
வட்டியைப் பெறலாம். மாதாந்திரமாக 100ல் 80வது பகுதியாக, அதாவது மாதத்திற்கு 1 ¼ சதவீதமும்,
வருடத்திற்கு 15% வட்டியும் பெறலாம். ஒரு கடமைப்பட்ட
நல்லமனிதராக கடன் கொடுப்பவர் மாதத்திற்கு 2% வட்டியும், வருடத்திற்கு 24% வட்டியும்
பெறலாம். மாதத்திற்கு 2% வட்டியும், வருடத்திற்கு 24% வட்டியும் பெறுபவர் ஆதாயத்திற்காக
பாவம் செய்தவராகக் கருதப்படமாட்டார் என்று கூறப்பட்டுருக்கு.
மேற்கூறப்பட்ட விதியைப்
போலத்தான் யாக்ஞவல்கியராலும்,
கௌதமாவாலும், வசிஸ்தாவாலும் கூறப்பட்டுருக்கு. வசிஸ்தாவால பரிந்துரைக்கப்படும் வட்டி
விகிதம் மனுவாலும், பிற ஸ்மிரிதிகளை எழுதியவர்களாலும் அதிகாரப்பூர்வமா கருதப்பட்டுருக்கு.
மனுவின் விதி 140-141ஐ பொறுத்தவரைக்கும் ஆண்டுக்கு 15% வட்டி விகிதம் பொதுவான வட்டி விகிதமாக இருக்கு. ஆண்டுக்கு 24% வட்டி விகிதம்
வரை பெற அனுமதிக்கப்பட்டுருக்கு. மனுவின் விதி 142 இந்துமத சாதிப் படிநிலையைப் பொறுத்து
மாதத்திற்கு 2% அல்லது 3% அல்லது 4% அல்லது 5% வரை கடன் கொடுப்பவர் வட்டி வாங்கலாம்.
‘உயர்ந்த’ சாதியினருக்குக் குறைந்த வட்டியிலும் ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியினருக்கு அதிக
வட்டியிலும் கடன் கொடுக்க அனுமதிக்கப்பட்டுருக்கு.
அதாவது
பிராமணர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 2% வட்டியும், ஆண்டுக்கு 24% வட்டியும்
வாங்கலாம். சத்ரியர்களுக்குக் கடன் கொடுக்கும்
போது மாதத்திற்கு 3% வட்டியும் ஆண்டுக்கு 36% வட்டியும் வாங்கலாம். வைசியர்களுக்குக்
கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 4% வட்டியும் ஆண்டுக்கு 48% வட்டியும் வாங்கலாம்.
சூத்திரர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 5% வட்டியும் ஆண்டுக்கு 60% வட்டியும்
வாங்கலாம்.
எப்படி
இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் நிதியமைப்புல வசதியானவர்களுக்குக் குறைந்த வட்டியிலும்
வறுமையானவர்களுக்கு கந்துவட்டியிலும் கடன்கிடைக்குதோ அதைவிட மோசமான பல பிரிவினைகளையுடைய
நிதியமைப்பு தான் வேதகாலத்துல காணப்பட்டுருக்கு. சாதிக் கட்டமைப்புக்கு ஒரு பொருளாதார
அடிப்படை உள்ளது. உயர்ந்த சாதியினர் வசதியானவர்களாகவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட
சாதியினர் வசதி குறைந்த ஏழை எளியவர்களாகத் தான் இருந்துருக்காங்க. பிரிவினையுடைய இத்தகைய
நிதியமைப்பு அதை என்றென்றைக்கும் நீடிக்கச்செய்யுது. வேதகாலத்துல இந்தியாவுல காணப்பட்டதைப்
போன்ற ஒரு கேவலமான நிதியமைப்பு உலகத்துல வேறு எங்கேயும் காணக்கிடைக்கவில்லை.
இந்தியாவின்
இந்து மத சாதி அமைப்பானது சமூகப்பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானத்தை சார்ந்தது, அடித்தளத்தை
சார்ந்தது இல்லை, சாதிகளுக்கு சமூக அடிப்படை உண்டு, பொருளாதார அடிப்படை இல்லை என்ற
வாதத்தை முன்வைப்பவர்கள், இந்த பிரிவினைமிக்க தர்மசாஸ்திர நிதியமைப்பின் விதிமுறைகளை
ஆராய்ந்து தங்களது வாதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில்
தவறான புரிதலிலிருந்து தொடங்கினால் சமூகத்திற்கான சரியான தீர்வைக் கண்டடைய முடியாது.
இந்தியாவின் சமூகப்பொருளாதார அமைப்புல அடித்தளம், மேல்கட்டுமானம் அனைத்திலும் சாதி
இரண்டறக் கலந்துருக்கு.
(தொடரும்)
No comments:
Post a Comment