இந்தியா
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உலகளாவிய அடிப்படை வருமானம், நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை
செயல்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளது வரவேற்புக்குரியது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு
வெளியிட்ட (EAC) அறிக்கையில்,
அதிகமான
வருமான இடைவெளிகளைக்
குறைக்கவேண்டும்,
நகர்ப்புற
வேலையற்றோருக்கு
வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கவேண்டும், உலகளாவிய அடிப்படை வருமானம் (யுபிஐ) திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
விளிம்புநிலையில் உள்ள மக்கள்
பொருளாதார அதிர்ச்சிகளை தாங்கவும் அவர்கள் கொடிய வறுமைக்கு தள்ளப்படுவதைத்
தடுக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டில் வருமானப் பங்கீட்டின் சமத்துவமின்மை
மேலும் மோசமாகி வருவதால், குறைந்தபட்ச வருவாயை உயர்த்தவ்வேண்டும்
என்றும், சமூகத் துறையில் அரசு செலவினங்களில் பங்கை அதிகரிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
காலமுறை உழைப்புச் சக்தி படை கணக்கெடுப்பின் (PLFS) மூன்று சுற்றுகளின்
முடிவுகளை
மேற்கோள்
காட்டி,
2019-20 வரையிலான
மூன்று ஆண்டுகளில்,
மக்கள்தொகையில்
முதல் 1% மக்கள் ஈட்டிய மொத்த வருமானத்தில்
6-7% ஐப் பெற்றுள்ளனர்,
அதே நேரத்தில்
முதல் 10% மூன்றில் ஒரு பங்கு வருமானம் பெற்றுள்ளனர். நாட்டின் மொத்த வருமானத்தில் முதல் 1% மக்கள் தொகையின்
பங்கு மூன்று ஆண்டுகளில்
2019-20 - 6.14% லிருந்து 6.82% ஆக அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுநோய்
2020-21 இல் தேசிய வருமானத்தில் சரிவுக்கு வழிவகுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரத்தை முறைப்படுத்துவதில் அதிகரித்த வேகத்தைக் கருத்தில் கொண்டு, பல ஆய்வாளர்கள் வருமான இடைவெளி 2019-20ல் விரிவடைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
அறிக்கையின்படி, 2017-18ல் 35.18%
ஆக இருந்த முதல் 10% மக்களின்
வருமானப்
பங்கு
2019-20ல் 32.52%
ஆக அதிகரித்தாலும்
இது அடிமட்ட
மக்களின்
சம்பளத்தை
அதிகரிக்கவில்லை.
"...முதல் 1சதவீதத்தினரின் பங்கு 2017-18 முதல்
2019-20 வரை கிட்டத்தட்ட
15% வளர்ந்துள்ளது,
அதேசமயம்
கீழே உள்ள 10% (தங்கள் வருமானப்
பங்கில்)
1% வீழ்ச்சியை
பதிவு செய்துள்ளது,"
.
"கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர் பங்கேற்பு விகிதத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தை
கருத்தில் கொண்டால் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற தேவை அடிப்படையிலான வேலைவாய்ப்பு உத்தரவாதம்
வழங்கும் நகர்ப்புற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், இதனால் உபரி-தொழிலாளர் மறுவாழ்வு பெறமுடியும்
எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால், இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க முடியாது
என சிறப்பாகத் தீர்ப்பளித்துள்ளது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்" என்றும் தெரிவித்துள்ளது.
விலைவாசி உயர்வு / பணவீக்கம்:
2021 ஏப்ரலில் 10.74% ஆக இருந்த மொத்தவிலை
பணவீக்க
விகிதம் 2022 ஏப்ரலில் 15.08%ஆகப் பதிவாகியுள்ளது. கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவற்றின்
விலை உயர்வின் காரணமாகப் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த விலை பணவீக்க
விகிதம் தொடர்ந்து 13 மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. முதன்மைப் பொருட்களின்
விலைவாசி
15.45% உயர்ந்துள்ளது.
எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 38.66% உயர்ந்துள்ளது. உற்பத்திப்
பொருட்களின் விலைவாசி 10.85% உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 8.88% உயர்ந்துள்ளது.
கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், ஆகியவற்றின் விலை உயர்வினால் பணவீக்கம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது.
நுகர்வோர் குறியீடு
அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு எட்டு
ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏப்ரல்
மாதத்தில் 7.79 விழுக்காடு
அதிகரித்துள்ளது, மார்ச்
மாதத்துடன் ஒப்பிடும் போது 1.24 விழுக்காடு உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 8.38 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது 1.21 விழுக்காடு உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 15.41 விழுக்காடு உயர்ந்துள்ளது. பழங்களின் விலைவாசி 2.26 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 4.99 விழுக்காடு அதிகரித்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின்
விலைவாசி 17.28 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 6.97 விழுக்காடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5.37 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்திய மாநிலங்களில் மேற்கு வங்கத்தில் பணவீக்கம் மிக அதிகமாக 9.12 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மார்ச்சில் தொழில்துறை வளர்ச்சி:
புள்ளியியல் அமைச்சகத்தால்
வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி மார்ச்சில் உற்பத்தி 1.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை,
மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 4.0, 0.9, 6.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மை பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி அளவுகள் முறையே
5.7, 0.6, 7.3 விழுக்காடு
உயர்ந்துள்ளன. மூலதனப் பொருட்களின் உற்பத்தி 0.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 3.2 விழுக்காடு குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 5.0 விழுக்காடு குறைந்துள்ளது.
ஏப்ரலில் தொழில்துறை வளர்ச்சி:
இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த
உற்பத்திக் குறியீடு ஏப்ரலில் 8.5 விழுக்காடு
அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 28.8 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 8.0
விழுக்காடும்,
அதிகரித்துள்ளது. உருக்கு
உற்பத்தி 0.7 விழுக்காடு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய்
உற்பத்தி 0.9 விழுக்காடு குறைந்துள்ளது. பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 9.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 8.7 விழுக்காடு
உயர்ந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 6.4 விழுக்காடும், மின்சார உற்பத்தி 4 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு எரிபொருள் மீதான
சாலை, உள்கட்டமைப்பு செஸ் கட்டணத்தைக் குறைத்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசலின் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ளன. ஆனால் தமிழக அரசு
பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை.
பெட்ரோலின் சில்லறை விலையின் அடிப்படையில் 106 நாடுகளில் இந்தியா 42 வது இடத்தில் உள்ளது, இந்தியாவில் எரிபொருளின் மீதான வரிகளை குறைக்க முடியும் என்று
பரோடா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எரிபொருள் விலை ஆஸ்திரேலியா, துருக்கி, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக உள்ளது. தனிநபர் வருமானம் அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடக்கூடிய நாடுகளான வியட்நாம், கென்யா, உக்ரைன், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், வெனிசுலாவில் விலைகள் மிகவும் குறைவாக உள்ளன. "எனவே, மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக எரிபொருளின் மீதான வரிகளைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.
விமான எரிபொருளின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்படுகிறது. மாதத்தின் 1 , 16-ம் தேதிகளில் விமான எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விமான எரிபொருளின் விலை தற்போது
5.29
% உயர்ந்து
ஒரு
கிலோ லிட்டருக்கு ரூ.6,188 அதிகரிக்கப்பட்டு ரூ.1,23,039 ஆக உள்ளது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி
உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு
சமையல் எரிவாயு உருளை ஒன்றுக்கு ரூ.200 ரூபாய் மானியம் 12 முறை வழங்கப்படும் என நிதியமைச்சர்
அறிவித்துள்ளார். சுங்கவரிகள் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இறக்குமதி
சார்ந்த பிளாஸ்டிக் மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படும். சில உருக்கு மூலப்பொருட்களின்
இறக்குமதி வரி குறைக்கப்படும். சில உருக்கு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.
மேலும், சிமெண்ட் விலையை குறைக்கவும், சிமெண்ட் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள
ரூ.1.05 லட்சம் கோடியுடன் கூடுதலாக ரூ.1.10 கோடியுடன் ஒதுக்கப்படும், உரமானியத்துக்கான
மொத்த செலவினம் 2.15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் டாலர் மதிப்பு
77.59 ரூபாயாக வீழ்ந்துள்ளது. ரூபாய் வீழ்ச்சியின்
மத்தியில் இறக்குமதி செலவுகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதால், நுகர்வோர் பொருட்கள்
விலை 3-5 சதவீதம் உயரவுள்ளது.
தொலைக்காட்சி,குளிர்சாதனப்
பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், நுகர்வோர் மின்சாதனப் பொருட்களின் விலைகள்
3 முதல் 5 சதவீதம் வரை உயரவுள்ளது.
விரைவில் நுகரக்கூடிய விற்பனைப்
பொருட்களான பிஸ்கெட், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் விலை மேலும் உயரவுள்ளது.
இந்தியாவில் பணவீக்கம் அதிக வருமானம் கொண்ட மக்களை விட குறைந்த வருமானம் கொண்ட மக்களிடம் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது நுகர்வு போக்குகளிலிருந்து தெரிவதாக நிதி அமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வு கூறுகிறது.ஏழை மக்களின்
வறுமையை எள்ளல் செய்வதாக உள்ளது நிதியமைச்சகத்தின் இந்தக் கருத்து.
ஒட்டுமொத்த தேவை படிப்படியாக மீண்டு வருவதால், பணவீக்கம்
தொடர்ந்து நீடிக்கும் ஆபத்து குறைவாகவே உள்ளது. நீண்ட கால போக்கில் பார்க்கும்போது, இந்திய பொருளாதாரத்தில் பணவீக்கம் மாதாந்திர மாற்றத்தின்
அடிப்படையில் காணும்போது சவாலாக இல்லை என்றும்
நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பணவீக்கத் தலையீடுகள் இருந்தபோதிலும், 2022-23 நிதிநிலை அறிக்கையில் வகுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலீட்டு-உந்துதல் நிதிப் பாதை, நடப்பு ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வளர்ச்சியைப் பெற உதவும் என்றும் கூறியுள்ளது.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற சமூக சமூக ஊடக தளம்
சமீபத்தில் மேற்கொண்டக் கணக்கெடுப்பில் 92% இந்திய குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்துள்ளதாகத்
தெரியவந்துள்ளது. இதில் ஏறக்குறைய 70% இந்தியக் குடும்பங்கள், கடந்த மூன்று மாதங்களில் விலைவாசி உயர்வால் தங்கள் மாதாந்திரச் செலவுகள் 10% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள அனைத்து இடங்களுக்கும் தனியார் துறைகளும் வரலாம். இதனால் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களிலும் தனியார் துறையினர் வரலாம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்போக்கு எஞ்சியுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தையும் குறைமதிப்புக்குட்படுத்தி
அவற்றையும் தனியார்மயப் படுத்துவதற்கே வழிவகுக்கும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மே 2-ம் தேதி ரிசர்வ் வங்கி அவசர நிலை நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கூடியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதத்தில் (வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பெறும்
குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம்) ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இந்தியாவிலும் பணவீக்கம் மூன்று
மாதத்திற்கு மேல் 6%க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், அதைச் சமாளிக்கும் நோக்கில் குறுகிய காலக் கடன் விகிதமான ரெப்போ விகித்தை 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் தற்போது ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2020 மே மாதம் நடந்த கூட்டத்தில் ரெப்போ விகிதம் 4 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
வங்கியின் பண இருப்பு விகிதத்தையும்
0.5% உயர்த்தியுள்ளது.தற்போது பண இருப்பு விகிதம் 4.5% ஆக உள்ளது. இதன் மூலம் 87,000
கோடி பணப்புழக்கம் இதன் மூலம் அமைப்பிலிருந்து நீக்கப்படும். வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கிறது என்றும் அதே சமயம் வளர்ச்சியைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் . இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும் என்றும் அதே நேரத்தில் மத்திய வங்கி ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை அனுமதிக்காது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக ஏனைய வங்கிகளும் தாங்கள் மக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம்
மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி
விகிதம் அதிகரிக்கும்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. இந்தியப் பங்குச்சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ்,
நிஃப்டியில்
தலா
2%க்கு
மேல்
சரிவு ஏற்பட்டது. 1306 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் குறியீட்டெண் 55,669 ஆக
சரிந்தது. 391 புள்ளிகள் குறைந்து நிஃப்டி குறியீட்டெண் 16,677 ஆக
சரிந்தது. 5 நாட்களில் முதலீட்டாளர்கள் 19 லட்சம்
கோடிக்கு மேல் இழந்துள்ளனர். உலகெங்கும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
44,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை
இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்றுள்ளனர்.
அக்டோபர் 2021 முதல் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை
வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். வெளிநாட்டினர் பங்குகளை விற்று வெளியேறும்
போதும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் ₹1.4 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
உள்நாட்டு பங்குகளில் வெளிநாட்டு நிதிகளின் விகிதம் ஐந்து ஆண்டுகளில் குறைவாக மார்ச்சில் 18.6 சதவீதமாக இருந்தது. 2021 டிசம்பரில் அதிக அளவாக
21.4 சதவீதமாக
இருந்துள்ளது.
மத்திய வங்கியின் அறிவிப்பை
அடுத்து 10 ஆண்டு கால
அரசாங்க பத்திரங்களின்(ஜிசெக்) மீதான
வளர்ச்சி விகிதம் (Yield) 31 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. கடன் நிதிப்பத்திரங்களில் முதலீடு
செய்தவர்கள் இழப்புகளை சந்தித்தனர். இதனால் மத்திய அரசின் கடன் செலவினங்கள்
அதிகரிக்கும் என்பதால் வளர்ச்சி விகிதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு
மத்திய அரசு மத்திய வங்கியை அறிவுறுத்தியுள்ளது. அதாவது மத்திய வங்கியை நிதிப்பத்திரங்களை
வாங்குமாறும், வெளிச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கூறியுள்ளது. வங்கிகள்
நிதிப்பத்திரங்கள் வாங்குவதற்கான நெறிகளை மத்திய வங்கி தளர்த்தவுள்ளது.
மத்திய வங்கியின் வட்டிவிகித உயர்வு பேரியல் பொருளாதார நிலைத்தன்மையையும்,
வளர்ச்சியையும்
தக்கவைக்க உதவும் என்று நிதி
அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கு மாறாக மத்திய வங்கி
வட்டி
விகிதங்களை உயர்த்தினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய
வாய்ப்புள்ளது என்று நிதிச் செயலர்
டி.வி.சோமநாதன் கூறியுள்ளார்.
இந்த நிதியாண்டில் இதுவரை நடத்தப்பட்ட ஏலத்தில் 10 மாநிலங்கள்
பங்கேற்காததால், மாநில வளர்ச்சிக் கடன் (SDL) வழங்குவது 40% குறைந்துள்ளது. மாநிலங்களின் பத்திர
வெளியீடுகளில் கூர்மையான 40 சதவீதம்
சரிவு இருந்தபோதிலும், மாநில அரசு பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 7.69% உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. இதில் முதல் மாநிலமாக இருப்பது பஞ்சாப். கடந்த சில காலமாக பஞ்சாப் மாநிலம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பஞ்சாபில் ‘ஜிஎஸ்டிபி’(Gross state
domestic product)- கடன் அளவு 53.3 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். கடன் விகிதம் ராஜஸ்தானில் 39.8 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 38.8 சதவீதமாகவும், கேரளாவில் 38.3 சதவீதமாகவும், ஆந்திர பிரதேசத்தில் 37.6 சதவீதமாகவும் உள்ளது.
கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு
கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பிட்காயினின் மதிப்பு 50 விழுக்காட்டிற்கு மேல்
வீழ்ந்துள்ளது.
கச்சா எண்ணெய், உலோகங்கள், உரங்களின்
உயர்ந்த உலகளாவிய விலைகள் இந்தியாவின் வர்த்தகத்தை பாதித்ததன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையும்,
நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி
வேகத்தை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவின் தனியார் இறுதி நுகர்வு
செலவினமும் (PFCE), மொத்த நிலையான மூலதன உருவாக்கமும் (GFCF) தொற்றுநோய்க்கு முந்தைய
அளவைக் கடக்கவில்லை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார மீட்சியானது
2022 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வேகத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, உலகளாவிய வர்த்தக அளவுகளின் வளர்ச்சியானது 2021 ஆம் ஆண்டில் 10.1% இலிருந்து
பாதியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி 2021 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $28.05 பில்லியன் குறைந்துள்ளது. மார்ச் 31, 2022 நிலவரப்படி, அன்னியச் செலாவணி சொத்துக்கள் $540.72 பில்லியனாகக்
குறைந்துள்ளது. மே 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 2.676 பில்லியன் டாலர் குறைந்து 593.279 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
2021-22ஆம் நிதியாண்டில் நேரடி
அந்நிய
முதலீடுகளின்
வரவு
2% வளர்ச்சியுடன்
$8357 கோடி
ரூபாயாக
உள்ளது என மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய
ஆண்டில்
நேரடி
அந்நிய
முதலீடுகளின்
வளர்ச்சி
10%
ஆக
இருந்தது. 2021-22ல் உற்பத்தித்துறையில் நேரடி
அந்நிய
முதலீடுகளின்
வரவு
76% உயர்ந்துள்ளது,.
நேரடி அந்நிய முதலீடுகளை அளித்த நாடுகளில் 27% பங்குகளுடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா (18%), மொரீஷியஸ் (16%) ஆகிய நாடுகளும் உள்ளன. கணினி மென்பொருள், வன்பொருள் பிரிவு 2022ல் அதிகபட்சமாக 25% அந்நிய முதலீடுகளைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து சேவைத் துறை 20% பங்குகளையும், ஆட்டோமொபைல்ஸ்
துறை
12% பங்குகளையும் பெற்றுள்ளது
மாநிலங்களில் 38% நேரடி அந்நிய முதலீடுகளை பெற்று கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் (26%) , டெல்லியும் (14%) உள்ளன. மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இந்த நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு (OFDI) ஏப்ரல் மாதம் வரை 3.39 பில்லியன் டாலராக பாதியாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 2021ல் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 6.71 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ஜனவரி-மார்ச் காலாண்டில் ரியல்
எஸ்டேட்டில் பங்கு முதலீடுகளின் வரவு 62 சதவீதம் சரிவடைந்து 1.18 பில்லியன் டாலர்களாக
குறைந்துள்ளதாக நைட் ஃபிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.
2022ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ.30,307 கோடி ஈவுத்தொகை வழங்க உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ. 1.76 லட்சம் கோடியை அரசுக்கு செலுத்தியது, அதில் ரூ. 1.23 லட்சம் கோடி ஈவுத்தொகையும், ரூ. 52,637 கோடி திருத்தப்பட்ட பொருளாதார மூலதனக் கட்டமைப்பின் (ECF) படி அடையாளம் காணப்பட்ட அதிகப்படியான ஒதுக்கீடுகளாகவும் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி இருப்புநிலை அறிக்கை 2222 நிதியாண்டில் 8.46 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.99,122 கோடியாக இருந்த வங்கியின் மொத்த உபரி இந்த ஆண்டில் ரூ.30,307.45 கோடியாக
உள்ளது. ரிசர்வ் வங்கியின் 2021-22 ஆண்டு அறிக்கையின்படி, ஆண்டு வருமானம் 20.14 சதவீதம் அதிகரித்தாலும், செலவினம் 280.13 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொதுத்துறை
வங்கிகள் ₹8,000 கோடி ஈவுத்தொகையை மத்திய அரசிற்கு அளித்துள்ளன.
நிலையான, சமநிலையான, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம்.மூலதனச் செலவினங்களை அதிகரித்து பணவியல் கொள்கையை சரி செய்வதன் மூலம், பணவீக்கத்தைக் குறைத்து, அளிப்பு பக்க இடையூறுகளை சரி செய்வதே வளர்ச்சிக்கான நிபந்தனையாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையில் 2022ல் சென்ற ஆண்டைக்
காட்டிலும் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகளில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,
வங்கி மோசடிகளின் மதிப்பு பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
2020-21ல் ரூ.1.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வங்கி மோசடிகளின் மதிப்பு
2021-22ல் 56.28 சதவீதம் குறைந்து ரூ.60,414 கோடியாக
உள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) அதன் ஆண்டு
அறிக்கையில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) இருப்புநிலைகள் விரிவடைந்துள்ளதாகவும்
சொத்துத் தரம் மோசமடைந்துள்ளதாகவும் கூறுகிறது. நிழல் வங்கிகள் நிதிநிலைத்தன்மைக்கு
சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின்
2022 ஆண்டறிக்கையின்படி 26 மாநிலங்களின் ஒருங்கிணைந்த மொத்த நிதிப் பற்றாக்குறை
(GFD) ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 31.5 சதவீதம் குறைந்துள்ளது. 2020-21 இல்
8.6 சதவிகிதம் குறைந்திருந்த மாநிலங்களின் வருவாய் 2022ல் 30.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆண்டு அறிக்கையில்
இந்தியாவில் சில்லறை பணவீக்கத்திற்கும் மொத்த விலைப் பணவீக்கத்திற்கும் இடையே அதிக
இடைவெளி காணப்படுவதற்கான விளக்கம் அளித்துள்ளது. உணவு அல்லாத, எரிபொருள் அல்லாத உலகளாவிய
பொருட்களின் விலைகளில் 1% மாற்றம் சில்லறை பணவீக்கத்தில் 0.02% மாற்றத்திற்கும், மொத்தவிலை
பணவீக்கத்தில் 0.11% மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மொத்த விலைப் பணவீக்கத்தில்
1% மாற்றம் சில்லறை பணவீக்கத்தில் சுமார் 0.26% மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
"ஒட்டுமொத்தமாக, உலகளாவிய பொருட்களின் விலைகளின் உயர்வு மொத்தவிலைப் பணவீக்கத்துடன்
ஒப்பிடும்போது பணவீக்கத்தில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் சில்லறை பணவீக்கத்தின்
மீதான தாக்கம் நீடித்திருக்கும் என்று ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
தற்போது வங்கிகளில்
ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை
செய்தவற்கு பான் கார்டு விவரங்களை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.20 லட்சம் மேல் ஒரு வங்கியிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளிலோ பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும்
பான் எண் அல்லது ஆதார் எண் விவரங்களை அளிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் வங்கிகளில் அல்லது
தபால் அலுவலகங்களில் புதிய கணக்குகள் திறப்பதற்கும் ஆதார் அல்லது பான்
எண்
அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தபால் அலுவலங்களில் ஒரு
நிதி
ஆண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல்
பரிவர்த்தனை செய்வதற்கு பான், ஆதார்
எண்
கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப்
புதிய
விதி
மே
26-ம்
தேதி
முதல்
நடைமுறைக்கு வரும் என்று மத்திய
நேரடி
வரிகள்
வாரியம் தெரிவித்துள்ளது
ஹிந்துஸ்தான் ஸிங்கின் மீதமுள்ள முழு பங்குகளையும் தனியார் துறைக்கு விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எஞ்சியிருக்கும் 29.54 சதவீத பங்குகள் வெளிச் சந்தையில் விற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
2002 ஆம் ஆண்டில், அரசு ஹிந்துஸ்தான் ஸிங்கின் 26 சதவீத பங்குகளை வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸுக்கு விற்றது. இக்குழு பின்னர் திறந்த சலுகை மூலம் கூடுதலாக 20 % பங்குகளை வாங்கியது. தற்போது, வேதாந்தா ஹிந்துஸ்தான் ஸிங்கில் 64.9 % பங்குகளை
வைத்துள்ளது.
2021-22 ஆம்
ஆண்டில் தேசிய பணமாக்குதல் திட்டத்தின் (NMP) கீழ் அரசாங்கம் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை நிறைவு செய்துள்ளது, இது திட்டத்தின் முதல்
ஆண்டு
இலக்கான ₹88,000 கோடியை தாண்டியுள்ளது என்று நிதி ஆயோக்
தலைமை
நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு வங்கியான
எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு செய்யப்பட்டது. எல்ஐசி பங்குகளில் 31.6 கோடி பங்குகள் விற்பதன் மூலம் சுமார் ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு செய்தது. இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எல்ஐசி-யின் ஆரம்ப
பொதுப் பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்க நாடு முழுவதும் 47.83 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். அந்நிய
முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டவில்லை, 4000 கோடி ரூபாய்க்கு குறைவாகவே
முதலீடு செய்யப் பதிவு செய்துள்ளனர். சில்லறை முதலீட்டாளர்கள் 25000 கோடி ரூபாய்க்கு
மேல் முதலீடு செய்ய அதிகளவில் பதிவு செய்துள்ளனர். பங்குகளின் மொத்த அளவைவிட 2.95 மடங்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கியை தனியார்மயப்படுத்துவதை ஆத்மாநிர்பர்க்கான
எடுத்துக்காட்டு என முதலீடு, சொத்து மேலாண்மைத் துறைத் தலைவர் வர்ணித்திருப்பது வெட்கக்கேடு.
எல்.ஐ.சி பொதுப்பங்கு வெளியிடலை,
பங்குகள் விற்பனை செய்வதைக் கண்டித்து எல்ஐசி நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகிலஇந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டலத்தின் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார்.
இந்த பங்கு வெளியீடு என்பது எல்ஐசி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாகும். தற்போது எல்ஐசி நிறுவனத்தின் வருவாயில் 5 சதவீத ஈவுத்தொகை மத்திய அரசுக்கும், 95 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை குறையக் கூடும். அத்துடன், தற்போது எல்ஐசி நிறுவனம் மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்கிறது. இனிமேல் தனியார் முதலீட்டாளர்கள் இதைத் தடுக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். எல்ஐசி நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.1,900-ல் இருந்து ரூ.2,200வரை விற்பனை செய்ய முன்பு முடிவுசெய்யப்பட்டது. பிறகு பங்கின் மதிப்பு குறைக்கப்பட்டு, ஒரு பங்கு ரூ.907 முதல் ரூ.949 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவன முதலீட்டாளர்களுக்காக இத்தொகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 227 கிளைகளைச் சேர்ந்த 5 ஆயிரம்ஊழியர்களும், நாடு முழுவதும் 2,048 கிளைகளை சேர்ந்த 80 ஆயிரம் ஊழியர்களும் பங்கேற்றனர்.
வளர்ச்சி நிதி அமைப்பு
(DFI-NaBFID) அடுத்த காலாண்டில் செயல்படத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
111 டிரில்லியன் தேசிய உள்கட்டமைப்பு உட்பட நீண்ட காலத் திட்டங்களுக்கு நிதியளிப்பதில்
வளர்ச்சி நிதி அமைப்பு (DFI) ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த
ஐந்தாண்டுகளில் இதன் மூலம் ரூ. 3 லட்சம் கோடி திரட்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இது பொதுத்துறை அமைப்பாகத் தொடங்கப்பட்ட போதும் அதிக முதலீட்டாளர்கள் சேரும்போது, அரசு
அதன் பங்குகளை 26% ஆகக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்திய உணவுக் கழகம் (FCI) மற்றும் மாநில முகமையகங்களால் கொள்முதல் செய்யப்பட்ட மொத்த கோதுமை இந்த ஆண்டு 184.58 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டில் 433.44 லட்சம் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் கொள்முதல் சென்ற
ஆண்டைக் காட்டிலும் 43% குறைந்துள்ளது.
குறைந்தபட்ச ஆதாரவிலையில் 37,192.07 கோடி
ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதில், 17.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் கோதுமையின் சந்தைவிலையை ஒழுங்குமுறை செய்வதற்கான திறந்தவெளி விற்பனைத் திட்டத்தை (ஓஎம்எஸ்எஸ்) மத்திய அரசு இதுவரை அறிவிக்காததால், அடுத்த மாதம் முதல் ரொட்டி, பிஸ்கட், ரொட்டி, பராத்தா ஆகியவற்றின் விலை உயரவுள்ளது.
ஏப்ரல்
மாதத்தில் இந்தியா 1.4 மில்லியன் டாலர் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா 10 மில்லியன் டன்
கோதுமையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டில்
குடிமக்கள் கோதுமை விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள் எனக் கவலைப்படாத மத்திய அரசு இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ் உட்பட ஒன்பது
நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்க வர்த்தக பிரதிநிதிகளை அனுப்ப திட்டமிட்டது.
இதற்கிடையில்
கோதுமை விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து கோதுமை ஏற்றுமதிக்கு மே 13 தேதி அன்று மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதி தடையில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இதன்படி, மே 13 அன்றும், அதற்கு முன்பாகவும் கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு பதிவு செய்திருந்தவர்கள், ஏற்றுமதி செய்யலாம் என்றும்
அறிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக கருங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இருந்து அதிக அளவில் கோதுமையை பிற நாடுகள் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. நடப்பு நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னை எட்டியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய பின்னரும் இந்தியா மார்ச் மாதத்தில் 177 மில்லியன் டாலர்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் 473 மில்லியன் டாலர்களுக்கும் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.
விவசாயிகளிடமிருந்து அரசின் கோதுமை கொள்முதல் பாதியாக குறையும்; ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை என உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறியுள்ளார். அரசின் கோதுமை கொள்முதலில் ஏற்பட்ட வீழ்ச்சி, "விவசாயிகளுக்கு சாதகமாக" இருக்கும், ஏனெனில் அவர்கள் அரசு நிறுவனங்கள் வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாகப் பெறுவர் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆதாயமடையப் போவது இடைத்தரகர்களும், பெரு முதலாளிகளும் தானே தவிர விவசாயிகள்
அல்ல, அதனால் குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கூட விவசாயிகள் பெறுவார்கள் என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லை.
கோதுமையின் அதிக ஏற்றுமதி மற்றும் உற்பத்தி வீழ்ச்சிக்கு மத்தியில் நடப்பு ஆண்டில் அரசின் கோதுமை கொள்முதல் பாதியாக குறைந்து 19.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்தார். இதனால் பொது விநியோக முறையின் கீழ் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில் பிரச்சினை இருக்காது
என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்திய உணவுக் கழகத்தின்
கோதுமைக் கையிருப்பு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. மே 1 ஆம் தேதி நிலவரப்படி, அரசின் கோதுமை கொள்முதல் இந்தாண்டு 42% குறைந்து 16.19 மில்லியன் டன்னாக (MT) இருந்தது. இந்திய உணவுக் கழகத்தின் (FCI) கோதுமை இருப்பு ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 31 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்
கீழ் பொது விநியோகத்தை செயல்படுத்துவதற்கு அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 25-26 மில்லியன் டன் கோதுமை தேவைப்படுகிறது, மேலும் 10 மில்லியன் டன் தானியங்கள் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த கோதுமை இருப்பு காரணமாக பொது விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். அரிசி இருப்புகள் ஏராளமாக உள்ளதால் கோதுமைக்கு பதிலாக அரிசியை வழங்கவும் திட்டம் உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள உள்கட்டமைப்புகள் நாசமாகி உள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு கோதுமை விலை 40%க்கும் அதிகமாக உயரும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
அபரிமிதமான அறுவடை யால் மண்டியில் கொண்டைக்
கடலையின் விலை குறைந்தபட்ச ஆதாரவிலையை விட குறைவாக இருப்பதால் இந்திய தேசிய வேளாண்
கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் கொண்டைக் கடலை கொள்முதல் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வரம்பில் இருந்து 1,157 பொருட்களை இந்தியா விலக்கியுள்ளது. தொலைக்காட்சி, பிக்சர் டியூப்கள், சோப்புகள், பொம்மைகள், காலணி, பெட்ரோலியம் மெழுகுகள் உள்ளிட்ட 1,157 தயாரிப்புகளை இந்தியா ஒதுக்கி வைத்துள்ளது. இந்தப் பொருட்களுக்கான உள்நாட்டுத் தொழில்துறை சந்தையைக் கருத்தில்
கொண்டு, இந்தியா-யுஏஇ பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் கீழ் 1,157 பொருட்களுக்கு எந்தவிதமான சுங்க வரிச் சலுகைகளையும் இந்தியா வழங்காது.
இந்தியாவில்
முதல் மாநிலமாக சத்தீஸ்கரில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) செயல்படுத்துகிறது.
ஓய்வூதியம் அளிப்பதற்கான அரசின்
பொறுப்பாண்மையைத் தட்டிக் கழிக்கவே பாஜக அரசு வாஜ்பாய் தலைமையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) நடைமுறைப்படுத்தியது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் பிடித்தம் ஏதும்
செய்யப்படுவதில்லை. மாத சம்பளத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியமாக அளிக்க உத்தரவாதம்
அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சம்பளத்தில் இருந்து மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
நிலையான
ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை. இது முற்றிலும் பங்குச் சந்தை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்தே இருக்கும்.
ஓய்வூதிய நிதிகள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டிருப்பதால் ஓய்வூதிய நிதி
அதிக அபாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வசதி இல்லை.
தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் 2003-ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. ஆனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய பின்னர், ஒவ்வொரு தனி நபரின் பணம், அரசு அளிக்கும் பங்களிப்பு ஆகியவை ஒவ்வொரு தனி நபரின் பெயரில் தனியாக கணக்கில் வைக்கப்படுகிறது அதைக் கையாளுவதில்
சிக்கல் உள்ளது என்று கூறியுள்ளார். இத்தகைய சிக்கலை சட்டீஸ்கர் அரசு வெற்றிகரமாக கையாண்டு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதை முன்னோடியாகப் பின்பற்றி தமிழக
அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.
நிதியமைச்சர் புதிய ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு சார்பில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது. 2003-க்கு முந்தைய பணியாளர்களின் ஓய்வூதியத்துக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவிடப்படுகிறது. இது தான் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கும், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கும் உள்ள வேறுபாடு என்றும் கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் தொழிலாளர்
சக்தியில் 1.20 கோடி பேரை இழந்த பின் தொழிலாளர் பங்கேற்பு மார்ச்சில் 88 லட்சம் அதிகரித்து 4.284 கோடியிலிருந்து 2022 ஏப்ரலில் 4.372 கோடியாக அதிகரித்ததாக இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் விவசாயத் துறை அதிக வேலை வாய்ப்புகளை ஈர்த்தது, அதனுடன் ஒப்பிடுகையில்,
ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை சேவைத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்தது. ரபி அறுவடை பருவம் முடிவடைந்து கடுமையான வெப்ப அலை வீசுவதால் விவசாயத் துறை 52 லட்சம் வேலைகளை இழந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தொழில்துறை 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், சேவைத்துறை 67 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும்
அளித்துள்ளது.
அதே நேரத்தில் சுரங்கத்துறையில்
வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது.
சேவைத் துறையில், சில்லறை
வர்த்தகம், ஹோட்டல்கள்,
உணவகத் தொழில்களில் வேலைவாய்ப்பு
அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மார்ச்சில் 7.60%ஆக இருந்தது ஏப்ரலில் 7.83%ஆக அதிகரித்துள்ளது, என இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும்
மையம் (CMIE) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.28 சதவீதமாக இருந்தது ஏப்ரலில் 9.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும்
மையம் (CMIE) தரவுகளைப் பெறுவதற்கு பயன்படுத்தும் முறையிலிருந்து வேலையின்மை பற்றிய உண்மையான நிலவரத்தைப் பெறுவது கடினம் என்று பொருளியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களின் வேலையின்மையின் நம்பகத்தன்மையைக்
கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர்.
பொருளியலாளர் அஜிதாவா ராய்சௌத்ரி இந்தியப் பொருளாதாரத்தை
கண்காணிக்கும் மையம் (CMIE)
நகர்ப்புறம், கிராமப்புற இந்தியாவில் 44,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மாதாந்திர ஆய்வுகளை நடத்துகிறது என்று கூறுகிறார்
“கணக்கெடுப்பு நாளில், ஒருவர் குப்பை பொறுக்குவாரெனில் அவர் வேலைவாய்ப்பு
பெற்றவராகவே கருதப்படுவார்.
"கண்ணியமான" வேலைகளைச் செய்பவர்களை மட்டுமே வேலைவாய்ப்புடையோர் கணக்கீட்டில் சேர்க்கவேண்டும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) பரிந்துரைத்துள்ளது.
" இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம்
கண்ணியமான வேலையில் உள்ளனரா இல்லையா என்பதை வேறுபடுத்தி வகைபடுத்துவதில்லை. கண்ணியமான வேலைகளுக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அளவுகோல் பயன்படுத்தப்பட்டால், வேலையின்மை விகிதம் மிக அதிகமாக இருக்கும்,” என்று பொருளியலாளர் ராய்சௌத்ரி கூறியுள்ளார்.
மற்றொரு பொருளியலாளர் தேசியப் புள்ளியல்
அலுவலகத்தின் தரவுகளுடன் ஒப்பிடும் போது இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் மாதாந்திர தரவை மதிப்பிடப் பயன்படுத்தும் மாதிரி சிறியது என்றும் அதன் கேள்வித்தாள் பட்டியல் முழுமையானது அல்ல என்றும் கூறினார்.
மத்திய வங்கியின் தரவுகளின் படி
வங்கிகள் அளிக்கும் சில்லறைக் கடன்களின்
வளர்ச்சி வீதம்
2021 மார்ச்சில் 10.7% ஆக இருந்தது 2022 மார்ச்சில் 12.4%ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தொழில்துறை பிரிவில் கடன் வளர்ச்சி 2022 மார்ச்சில் 0.4% என்ற குறுக்கத்திலிருந்து 7.1% ஆக உயர்ந்தது.
ஸ்டேட் வங்கியின் தரவுகளின் படி
2022 நிதியாண்டில் இந்தியாவில் கடன் வளர்ச்சி 9.6 சதவீதம் உயர்ந்து ரூ.10.5 லட்சம் கோடியாக உள்ளது.
எஸ்&பி குளோபல் இந்தியாவின் உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு
மார்ச் மாதத்தில் 54.0ல் இருந்து ஏப்ரலில் 54.7 ஆக உயர்ந்தது. இது ஃபிப்ரவரியில் இருந்த
54.9ஐ விடக் குறைவு.
இந்தியா $5-டிரில்லியன் பொருளாதாரத்தை 2029ல் தான் அடையமுடியும் என
சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.
2022 ஏப்ரலில் 11% குறைவான குடும்பங்களே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் வேலை கோரியுள்ளதாக தரவுகள் காட்டுகிறது.
ஏப்ரல் 2022 இல், 2.326 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை தேடியுள்ளனர். தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். 2021 ஏப்ரலில், 2.618 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை தேடியுள்ளனர், 2020 ஏப்ரலில் இதன் எண்ணிக்கை 1.341 கோடியாக இருந்தது.
ஏப்ரலில் இந்தியாவின் ஏற்றுமதி 30.7% உயர்ந்து ஏற்றுமதி மதிப்பு 40.19 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இறக்குமதி 30.97% உயர்ந்து
இறக்குமதி மதிப்பு 60.30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால்
ஏப்ரலில் வர்த்தகப் பற்றாக்குறை 20.11 பில்லியன் அமெரிக்க டாலராக 31.5% அதிகரித்துள்ளது, சென்ற ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின்
வர்த்தகப் பற்றாக்குறை
15.29 பில்லியன் டாலராக இருந்தது.
ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதி 81.21% உயர்ந்து 19.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. நிலக்கரியின் இறக்குமதி ஏப்ரல் 2021 இல் 2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்தது
2022 ஏப்ரலில் 4.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) விரைவில் 2017-18 அடிப்படை ஆண்டுடன் புதிய மொத்த விலைக் குறியீட்டை (WPI) அறிமுகப்படுத்தவுள்ளது
என அத்துறையின் செயலாளர் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
"புதிய குறியீட்டில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்படவுள்ளது. “
புதிய மொத்தவிலைக் குறியீட்டிற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழு, புதுப்பிக்கப்பட்ட குறியீட்டில் தற்போதுள்ள 697 பொருட்களுடன் கூடுதலாக 479 பொருட்களை சேர்க்க பரிந்துரைத்துள்ளது.
புதியக் குறியீடானது முதன்மைப் பொருட்கள் பிரிவில் உள்ள உணவுப் பொருட்களுக்கு அதிக எடையை ஒதுக்கும் வகையில் அமைக்கப்படும், மேலும் எரிபொருள், மின்சாரத்திற்கான பங்கு குறைக்கப்படும். முதன்மை உணவுப் பொருட்களின் எடை தற்போதைய 15.26% இலிருந்து 17.46% ஆக உயர்த்தப்படும், எரிபொருள், ஆற்றல் பிரிவின் எடை 13.15%லிருந்து 11.24% ஆக குறைக்கப்படும்.
கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது, இதுவரை 5.50 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, வரிவிலக்கிற்குப் பிறகு கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறையும்.
வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,508.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைமேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து தற்போது ரூ.1,018.50 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல்விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு விலைமாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவிடம் போதுமான அளவுக்கு சமையல் எண்ணெய் கையிருப்பில் உள்ளது என மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்போது இந்தியாவிடம் 21 லட்சம் டன் சமையல் எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் வெளிநாடுகளிலிருந்து 12 லட்சம் டன் எண்ணெய் விரைவில் வந்து சேரும் என்றும் நுகர்வோர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியா
பாமாயில் ஏற்றுமதி தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளித்துள்ளது.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 13-13.5 மில்லியன் டன் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்கிறது, இதில் சுமார் 8-8.5 மில்லியன் டன்கள் (சுமார் 63 சதவீதம்) பாமாயில் ஆகும். இதில், 8-8.5 மில்லியன் டன் பாமாயில், 45-50 சதவீதம் இந்தோனேசியாவில் இருந்தும், மீதமுள்ளவை அண்டை நாடான மலேசியாவிலிருந்தும்
பெறுகிறது.
பருத்தி விலை கண்டு ஒன்றுக்கு (355 கிலோ) ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக தற்போது உயர்ந்துள்ளது. மத்திய அரசானது இறக்குமதி பஞ்சுக்கான 11 % வரியை வரும் செப்டம்பர் இறுதி வரை நீக்கியுள்ள நிலையிலும், உள்நாட்டில் பருத்தி பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருத்தி விலை உயர்வால் நூல் உற்பத்தியாளர்கள் தொடங்கி, கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை என ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி சங்கிலித் தொடரில் உள்ள அனைவரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நூல் வர்த்தகர்கள், பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பருத்தியின் மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பர்
வரை நீட்டித்துள்ளது.
தங்கம், பிளாட்டினம், வெள்ளி
போன்ற
விலைமதிப்புமிக்க உலோகக் கழிவுகளின் இறக்குமதிமீது அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இதுவரையில்லாத அளவிற்கு 1,67,540 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையான 1,42,095 ரூபாயை விட 25,000 கோடி ரூபாய் அதிகம்.
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை ஏப்ரல் மாதத்தில் 4% குறைந்துள்ளது, ஏனெனில் தொழில்துறைக்கு விநியோகப் பக்க சவால்கள் தொடர்ந்தன என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் தொழில் கூட்டமைப்பு (SIAM) புதன்கிழமை தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தால், நிறுவனங்கள் விலைகளை உயர்த்தவேண்டியுள்ளது. இது வாகனங்களுக்கான
வேண்டலைக் கட்டுப்படுத்தும்.குறைக்கடத்திகளின் தொடர்ச்சியான பற்றாக்குறை விநியோகத்தை பாதித்துள்ளது.
2021ல் இந்தியாவில் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுதல் 210% அதிகரித்து 10 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளதாக மெர்காம் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்திற்குள் 75 மாவட்டங்களில்
டிஜிட்டல் வங்கி அலகுகள் செயல்படத் தொடங்கும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து பொதுத்துறை வங்கிகளும், 10 தனியார் துறை வங்கிகளும், ஒரு சிறு நிதி வங்கியும்
ஜூலை 2022க்குள் டிஜிட்டல் வங்கி அலகுகளை செயல்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.
உலகிலேயே இந்தியாவில்தான் கோவிட்
கொள்ளைநோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 காரணமாக நேரடியாக கோவிட் நோயாலும், சுற்றடியாக அதனால் ஏற்பட்ட உடல்நலத் தாக்கத்தாலும்
இந்தியாவில் ஏறக்குறைய 47 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால்
மத்திய அரசு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.
தேயிலை வாரியத்தின் தரவுகளின்படி,
2021 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஃபிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி
2.4% சரிவடைந்து 184.35 மில்லியன் கிலோவாக குறைந்துள்ளது.
கட்டுமான நடவடிக்கைகளுக்கு 18 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் தங்கும் விடுதிகள், முதல்வரின் வீடு, பணியாளர்கள் குடியிருப்புகள் போன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு சரக்கு, சேவை வரியில் (ஜிஎஸ்டி) 12% வரி விதிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திற்கு
வங்கிகளின் செயல்படாத சொத்துகளில் சுமார் 20%
₹40,000 கோடி வாராக் கடன்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தகவல் வந்துள்ளது.
425 உள்கட்டமைப்புத் திட்டங்கள், ஒவ்வொன்றும் ரூ.150 கோடி அல்லது அதற்கும் அதிகமான முதலீடுகள் கொண்டவை, ரூ.4.83 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு
– 5 ன் தரவுகளின்
படி பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாக ஆண்கள் வேலையில் உள்ளனர். 15-49 வயதுடைய ஆண்களில் 75 சதவீதத்தினர் வேலையில்
உள்ளனர். அதனுடன் ஒப்பிடும்போது, 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 25 சதவீதம் பேர் வேலையில் உள்ளனர்.
2015-16 உடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு தற்போது வேலை வாய்ப்புகள் ஓரளவு அதிகரித்துள்ளன. 2015-16ல் வேலையில் இருந்த பெண்களின் விகிதம்
24 சதவீதமாக இருந்தது 2019-21ல் 25 சதவீதமாக உள்ளது. வேலையில்
இருந்த ஆண்களின் விகிதாச்சாரம் அதே காலகட்டத்தில் மாறவில்லை.
இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் 75 பில்லியன் டாலர் வாக்குறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் பெரும் பங்கைப் பெற ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறைகளுடன் கூட்டு முயற்சிகளை உருவாக்குமாறு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார். "வாக்களிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு பங்கைப் பெறுவதற்கு, கூட்டு முயற்சிக்கான பங்குதாரர்களை அடையாளம் கண்டு, ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழில்வணிகங்களை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
2021 ஜூலை-செப்டம்பரில் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 9.8 சதவீதமாக இருந்தது என்று 13வது காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) காட்டுகிறது.
நகர்ப்புறங்களில் பெண்களிடையே (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்) வேலையின்மை விகிதம் 2021 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 10.5 சதவீதமாகக் குறைந்துள்ளது , 2021 ஜூலை-செப்டம்பரில் இது 11.6 சதவீதமாக இருந்தது.
நகர்ப்புறங்களில் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் 2021 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 8.7 சதவீதமாக சரிந்துள்ளது, இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் 10.3 சதவீதமாக இருந்தது.
2022ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து காகித ஏற்றுமதி 80 சதவீதம் உயர்ந்து 13,963 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனங்களின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது (89 சதவீதம்), அதைத் தொடர்ந்து
82 சதவீதத்துடன் சீனாவும், 70-76 சதவீதத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்தும் உள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிகம், அரசு, ஊடகங்கள் மீதான நம்பிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்த நம்பிக்கைக் குறியீட்டில், இந்த ஆண்டு ஜனவரியில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
அரசு ஆண்டுக்கு 2 மில்லியன் டன் சோயாபீன், சூரியகாந்தி எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி, விவசாய செஸ் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்தது. மேலும் விலை உயர்வுக்கு எதிரான நடவடிக்கையாக சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் பொருட்களின் இருப்பை அதிகரிப்பதற்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும், ஜூன் 1-ஆம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
“இந்தியா ஒரு பெரிய சந்தை, பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான பாதுகாப்பான இடம் என்பதை முழு உலகமும் உணர்ந்துள்ளது, குறிப்பாக தொழில்நுட்ப பரிமாற்றத்தை நாங்கள் வலியுறுத்தாததால், பிறநாட்டு தொழில்நுட்பங்களை முழுமையாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சொந்தமாக்க அனுமதிக்கிறோம்.” என்கிறார் அமைச்சர் பியூஷ் கோயல். தொழில்நுட்ப பரிமாற்றத்தை வலியுறுத்தாமல் வெறும்
அந்நிய முதலீடுகளை மட்டுமே நம்பியிருப்பது எவ்வாறு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை
மேம்படுத்தும்?.
2022 நிதியாண்டில் இந்தியாவின்
மிகப்பெரிய வர்த்தக பங்காளராக சீனாவை அமெரிக்கா முந்தியுள்ளது. வர்த்தக அமைச்சகத்தின்
தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு
வர்த்தகம் 2020-21 இல் 80.51 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 119.42 பில்லியன்
அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
2021-22ல், இந்தியா அமெரிக்காவுடன்
32.8 பில்லியன் டாலர் வர்த்தக உபரியை பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியாவின்
ஏற்றுமதி முந்தைய நிதியாண்டில் 51.62 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 2021-22ல்
76.11 பில்லியன் டாலராக அதிகரித்தது, அதே சமயம் இறக்குமதி 2020-21ல் 29 பில்லியன் டாலராக
இருந்தது 2021-22ல் 43.31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2021-22ல், சீனாவுடனான இந்தியாவின்
இருவழி வர்த்தகம், 2020-21ல் 86.4 பில்லியன் டாலராக இருந்தது 115.42 பில்லியன் டாலர்களாக
உயர்ந்துள்ளது.
2020-21ல் 21.18 பில்லியன் அமெரிக்க
டாலராக இருந்த சீனாவுக்கான ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 21.25 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது,
அதே நேரத்தில் இறக்குமதி 2020-21ல் 65.21 பில்லியனில் இருந்து 94.16 பில்லியன் டாலராக
உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில் 44 பில்லியன் டாலராக இருந்த வர்த்தக இடைவெளி
2021-22ல் 72.91 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும்
மையத்தின் தரவுகளின் படி 2022
ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் உழைப்புச்சக்தியில் தொழிலாளர்
பங்கேற்பு விகிதம் நகர்ப்புறங்களில் 37.4 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 40.9 விழுக்காடாகவும் உள்ளது. நகர்ப்புற ஆண்களிடையே தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 64.2 விழுக்காடாகவும்,
நகர்ப்புற பெண்களிடையே 6.7 விழுக்காடாகவும் உள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.43 விழுக்காடாக இருந்தது, வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 7.8 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 7.2 விழுக்காடாகவும் இருந்துள்ளது.
பொதுச் செலவினங்களைத் உயர்த்தும் முயற்சியில் அமைச்சகங்களுக்கான விதிமுறைகளை அரசு தளர்த்துகிறது. நிதியறிக்கை பிரிவால் வெளியிடப்பட்ட அலுவலகக் குறிப்பாணையின்படி, நிதியாண்டின் முதல், இரண்டாம் செலவினத் திட்டத்திலிருந்து (QEP) செலவழிக்கப்படாத நிலுவைகளைப் பயன்படுத்த அமைச்சகங்கள் அல்லது துறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
விநியோகச் சங்கிலி சவால்களை மற்ற சந்தைகளை ஆராய்வதன் மூலம் எதிர்கொள்ள முடியும், ஆனால் உலகமயமாக்கல் நிலைத்திருக்கவேண்டும் என குமார மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.
“இந்தியா கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது, உலகமயமாக்கத்தில் இருந்து விலகும் எந்த வழியையும் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது என்பதே எனது தெளிவான கருத்து. எங்கே இந்தியா தற்சார்புப் பொருளாதாரப்
பாதையை தேர்ந்தெடுத்தால் தன் லாபத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிர்லா நினைக்கிறார்
போலும். சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உலகமயமாதலால் உழைக்கும் மக்களே
அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக இருந்தாலும், நாட்டில் பிரிவினைவாதம், வளர்ச்சியின் ‘அடித்தளங்களை’ சேதப்படுத்துகிறது என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு கூறியுள்ளார். வேலையின்மை பிரச்சினையில், சிறு உற்பத்தியாளர்கள், அமைப்புசாரா துறையினர், விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகளவில் மிக அதிகமாக இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை 24 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது, இந்தியாவிற்கு பெரிய சவாலாக உள்ளது.“ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரக் கொள்கையை மட்டும் சார்ந்து இல்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒரு நாட்டின் பொருளாதார வெற்றியை தீர்மானிக்கிறது என்பதற்கு பெருகிய சான்றுகள் உள்ளன, ”என்றும் கவுசிக் பாசு கருத்து தெரிவித்துள்ளார்.
பெரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய உருக்குக் கூட்டமைப்பு (ISA) நிதியமைச்சருக்கு, இரும்பு, எஃகு இடைநிலைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை திரும்பப் பெறக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
மே 2017 இல் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (FIPB) நீக்கப்பட்ட பிறகு, வெளிநாட்டு முதலீட்டு வசதிக்கான தளம் (FIFP) உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டு வசதிக்கான தளத்தின் மூலம் 5 ஆண்டுகளில் 853 அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், அதனால் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவையின் செயல்திறன், போதுமான தன்மை, தரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் பி.பி.கனுங்கோ தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் அவை எந்தத் துறையாக இருந்தாலும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் (NPG) வழியாகவே ஒப்புதல் வழங்கப்படும் என்று தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு ஊக்குவிப்புத் துறை தெரிவித்துள்ளது.
வெவ்வேறு துறைகளில் இருந்து முன்மொழியப்படும் உள்கட்டமைத் திட்டங்களை பரிசீலிப்பதற்கு ‘இணைப்புத் திட்டக் குழு’ என்ற பெயரில் தனிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் வெவ்வேறு துறை சார்ந்த திட்ட உருவாக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சரக்கு சேவை வரி-ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் இருந்தும், மீதமுள்ள ரூ.61,912 கோடியை செஸ் வசூல் நிலுவையில் உள்ள தனது சொந்த வளங்களிலிருந்தும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, சில பொருட்களுக்கு செஸ் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு செஸ் தொகை இழப்பீட்டு நிதியில் வரவு வைக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகையில், ஏப்ரல், மே மாதங்களுக்கான நிலுவைத் தொகையாக ரூ.17,973 கோடியும், ஃபிப்ரவரி-மார்ச் நிலுவைத் தொகையாக ரூ.21,322 கோடியும், ஜனவரி 2022 வரை செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.47,617 கோடியும் உள்ளது.
தமிழகத்துக்கு ரூ.9602 கோடி மே 31-ம் தேதி வரைக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கியது.
2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஐந்தாண்டு காலத்திற்கு, மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன்படி, 2017 ஜூலை மாதம் முதல் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவந்தது.
ஜிஎஸ்டியால் மாநிலங்களின் வரி
வசூல் அதிகரிக்கவில்லை என இன்ட்-ரா என்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீட்டை
நீட்டிக்கக் கோரியுள்ளன. இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023 நிதியாண்டுக்கான
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது, ஜூன் 2022க்கு மேல் ஜிஎஸ்டி இழப்பீட்டு
காலம் நீட்டிக்கப்படாது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்,
வரி வசூல் பற்றாக்குறைக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதை மத்திய அரசு நிறுத்துகிறது.
மாநிலங்கள் தங்கள் வரி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைய ஜிஎஸ்டி உதவவில்லை என்று உள்நாட்டு
மதிப்பீட்டு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை
வரி) அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலங்களுக்கு எந்த நன்மையும்
ஏற்பட்டதாக தரவுகள் சுட்டிக்காட்டவில்லை என்று மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"... இதுவரை கிடைத்த தரவுகள்
ஜிஎஸ்டி அதன் இரண்டு முக்கிய நோக்கங்களான வரி வருவாயை அதிகரித்தல், நுகர்வு மாநிலங்களுக்கு
நன்மை பயக்கும்" ஆகியவற்றை அடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
மாநிலங்களின் சொந்த வரி வருவாயில்
(எஸ்ஜிஎஸ்டி) மாநில ஜிஎஸ்டியின் (எஸ்ஜிஎஸ்டி) பங்கு 2018-21 நிதியாண்டில் 55.4 சதவீதமாக
இருந்தது, இது 2014-2017 நிதியாண்டில் 55.2 சதவீதமாக இருந்தது. மாநிலத்தின் சொந்த வரி
வருவாயில் மாநில ஜி.எஸ்.டி வரி வருவாய், ஜி.எஸ்.டி அல்லாத மதிப்புக்கூட்டு வரியின் பங்குகளும் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
“இதன் பொருள் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தியதால்
மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதிகரிப்பதில் எந்த நன்மையும் ஏற்படவில்லை. மேலும்,
2018-21 நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமான எஸ்.ஜிஎஸ்டி வளர்ச்சியானது,
2014-2017 நிதியாண்டில் பதிவுசெய்யப்பட்ட 9.8 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக
உள்ளது,” என்று அது குறிப்பிட்டுள்ளது.
"ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட
பிறகு, மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் மத்திய வர்த்தக வரியின் (CST) விகிதம் 2017
இல் 4.16 சதவீதத்திலிருந்து 2021 (RE) இல் 0.95 சதவீதமாகக் குறைந்துள்ளது," என்றும்
கூறியுள்ளது.
மொத்தம் 17 முக்கிய மாநிலங்கள்
10 சதவீதத்திற்கும் குறைவான சராசரி மாநில ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே
சமயம் உத்தரகாண்ட் 2019-2022 இல் எதிர்மறையான வளர்ச்சி 4.02 சதவீதத்தைப் பதிவு செய்தது.
ஜிஎஸ்டியால் மாநிலங்களின் வரி வசூல் அதிகரிக்கவில்லை என இன்ட்-ரா என்ற கடன் மதிப்பீட்டு
நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்,
இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கப்படும்
என அரசு அறிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதிச் சேவைகள் செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
அரசு நிலக்கரி மீதான 5% இறக்குமதி
வரியை ரத்து செய்தது. நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி மீதான 2.5% அடிப்படை சுங்க வரி
(BCD) நீக்கப்பட்டது, மேலும் நாஃப்தா மீதான இறக்குமதி வரி 2.5% இலிருந்து 1% ஆக குறைக்கப்பட்டது.
ஃபெரோ-நிக்கல் மீதான வரி பூஜ்ஜியமாகவும், பிளாஸ்டிக்கிற்கான உள்ளீடான மெத்திலாக்சிரேன்
(புரோப்பிலீன் ஆக்சைடு) மீதான வரி வெறும் 2.5% ஆகவும் குறைக்கப்பட்டது.
பாசுமதி, பாசுமதி அல்லாத அரிசியின்
ஏற்றுமதியை தடை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ திட்டம் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் 6.11 பில்லியன்
டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அல்லாத அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது, இது
2020-21 இல் 4.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா 2021-22ல் 150 நாடுகளுக்கு
பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.
தமிழ்நாடு:
மத்திய அரசின் “மோசமான நிதிக் கொள்கைகள்” மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தாமதமான பணவியல் கொள்கை நடவடிக்கை ஆகியவை பணவீக்கத்தை அதிகரித்துள்ளன என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அனைத்து வாகன எரிபொருள் மீது கூடுதல் வரி விதித்துவிட்டு மாநிலங்களை வாகன எரிபொருள் விலையைக் குறைக்கச் சொல்கிறது. மத்திய அரசுக்கு 90% அதிகாரங்களும், மாநிலங்களுக்கு 10% அதிகாரங்களும் இருப்பதால், இது ஜனநாயகத்தையும் தர்க்கத்தையும் கேலிக்கூத்தாக்குவதாகும். மத்திய அரசு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை ஜூன் 2022 க்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக கோபியில் பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுத்துறை, கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத்துறை, உள்ளாட்சித்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் அலுவலக பணிக்குத் தேவையான, தகுதியுள்ள சங்க உறுப்பினர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவது இந்த சங்கத்தின் நோக்கமாகும். மேலும் பெண்கள் பணிசெய்யும் இடத்தில், உறுப்பினர்களின் நலன் கருதி பணி வழங்கும் அலுவலகத்துடன் அல்லது நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்.
தமிழக மின்துறையின் 3 நிறுவனங்களில் ரூ.13,040.40 கோடி உட்பட, 31 பொதுத்
துறை நிறுவனங்களில் கடந்த 2019-20ல் ரூ.18,629.83 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக தணிக்கைத் துறை தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கென மகாத்மா
காந்தி தேசிய ஊரகத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்ற சிறப்புத்
திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது.
தென் மண்டலத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இலக்கை அடைய ஏற்றுமதி வர்த்தகம் அதிகம் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். இதை 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இதற்காக பல முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. மாவட்ட வாரியாக ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது என தமிழக முதலமைச்சர்
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare
department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை அரசிடமே திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த நிதி தற்போது வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், ''மத்திய அரசு, தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் ரூ.1,045 கோடி மட்டுமே பல்வேறு அடிப்படைத் திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர். மீதம் ரூ.265 கோடி செலவு செய்யப்படாமல் அரசிற்கே மீண்டும் திரும்பவும் ஒப்படைத்தள்ளனர்.
உலகம்:
அமெரிக்காவில் 7%க்கு மேல் உயர்ந்துள்ள
பணவீக்கத்தை சமாளிக்க மே 2ஆம் தேதி அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ்
கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது. ஜூன் 1 முதல் அதன் இருப்புநிலை அறிக்கையின்
அளவைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது, மத்திய வங்கியின் வைப்பிலிருக்கும் நிதிப்பத்திரங்களின்
அளவு கணிசமாகக் குறைக்கப்படும்
தொலைதூர நீர் மீன்பிடியில் ஈடுபடாத வளரும் நாடுகள் குறைந்த பட்சம் 25 ஆண்டுகளுக்கு மீன்பிடி மானியத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் உலக வர்த்தக அமைப்பின் மீன்பிடி ஒப்பந்தம் சமமான வளர்ச்சிக்கான இடத்தை வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பல நாடுகளின் மானியங்கள், அதிகப்படியான மீன்பிடித்தல் இந்திய மீனவர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. சர்வதேச உணவு உதவி, மனிதாபிமான நோக்கங்களுக்காக பொது கையிருப்பில் இருந்து உணவு ஏற்றுமதியை உலக வர்த்தக அமைப்பு அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
ஒரு நாட்டின் உணவு மானிய வரம்பை கணக்கிடுவதற்கான சூத்திரத்தில் இந்தியா திருத்தங்களை கோரியுள்ளது. தற்போதைய விதிகளின் படி, விவசாயத்திற்கு
அளிக்கப்படும் மானியங்களின் அளவு விவசாய உற்பத்தி மதிப்பில் (1986-88 இன் அடிப்படை விலை)10% ஐ மீறக்கூடாது .ஆனபோதும் பாலி அமைச்சர்கள் கூட்டத்தில் வளரும் நாடுகளுக்கு
இந்த உச்ச வரம்பில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
“விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க மற்ற நாடுகளின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொள்கிறது. ஆனால் இந்தியா கொடுக்கும் மானியம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கொடுப்பதை விட மிகக் குறைவு. விவசாயிகளுக்கு இந்திய அரசு வழங்கும் மானியம் ஒரு விவசாயிக்கு $300ஆகவும், அமெரிக்காவில் ஒரு விவசாயிக்கு $40,000ஆகவும்
உள்ளது.
பாலி அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட அமைதிப் பிரிவில் 2013-க்குப் பிறகு தொடங்கப்பட்ட அரசுத் திட்டங்களையும் சேர்க்க இந்தியா முயன்று வருகிறது.
இந்த பிரிவின் கீழ், உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் வளரும் நாடுகள் 10% உச்சவரம்புக்கு மேல் மானியம்
அளிப்பது குறித்து வழக்காட முடியாது.
உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீட்டின்
அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் காரணமாக, 2030-ஆம் ஆண்டு காலத்தில் சராசரி கலோரி நுகர்வில் சரிவு உருவாகலாம்; அதாவது 1627-ல் இருந்து 1549 ஆக குறையலாம். இந்த சரசாரி வெப்ப நிலை உயர்வால் இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும், காலநிலை மாற்றத்தால் விவசாய விளைச்சல் 2041 - 2060 காலக்கட்டத்தில் 1.8 முதல் 6.6 சதவீதமாகவும், 2061 - 2080 காலக்கட்டத்தில் 7.2 முதல் 23.6 சதவீதமாகவும் குறையக் கூடும். இதனை தவிர்க்க அரிசியிலிருந்து மற்ற பயிருக்கு மாற வேண்டிய தேவை உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது. உணவு, தேயிலை, காபி பொருள்கள் சப்ளை செய்வதுதொடர்பாக ரஷ்ய வர்த்தகர்களிடமிருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் மிகப் பெரிய உணவுப் பொருள் சங்கிலி விற்பனையங்களைக் கொண்டுள்ள எக்ஸ்5நிறுவனம் இந்தியாவிலிருந்து அரிசி, சலவைத் தூள், தேயிலை,காபி, பழங்கள், ஜவுளி, சோடா,பீர் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளது. இது தவிர ரசாயனம் உள்ளிட்ட பொருள்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இவை பெருமளவில் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு
அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயு தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை எளிதாக்கும் வகையில் ஐக்கிய முடியரசு-இந்திய தொழில்துறை
பணிக்குழு தொடங்கப்பட்டது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டுக்குள் கையெழுத்தாகும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஓமன்
அரசும் இந்தியாவுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட ஆர்வம் காட்டியுள்ளது.
ஃபிப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நாடுகளில் 2022-ம் ஆண்டில் இந்த நாடுகளில் பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள பொருளாதாரம் சா்ர்ந்த அறிக்கையில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் 170 கோடி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகளவில் பொருளாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்சிப் பாதை மெதுவாக உள்ளது.வளர்ந்த பொருளாதாரங்கள் 2024 இல் பொருளாதார மீட்சி பெறும், ஆனால் வளரும் பொருளாதாரங்கள் கோவிட் தொற்றுக்கு முந்தைய நிலையை விட 5 சதவீதம் குறைவாக இருக்கும் என்று சர்வதேச பண நிதியத்தின் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட
நாடுகளில் உள்ள பெண்கள் தொற்றுநோயின் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்கின்றனர். தொற்றுநோய்க்கு
முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், உலகம் முழுவதும் பெண்களுக்கு வேலைகள் முன்பை விட
44 மில்லியன் குறைவாகவே கிடைத்துள்ளன. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வேலைகள்
முன்பை விட 25.5 மில்லியன் குறைவாகவே கிடைத்துள்ளன. 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன்
ஒப்பிடும்போது, 3.8 சதவீதம் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது, இது 112 மில்லியன் முழுநேர
வேலைகள் குறைந்துள்ளன.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான்,
ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பை
(IPEF) உருவாக்கி உள்ளன.. சீனாவின் வளர்ச்சி, ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில்
இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா,
புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,
தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிஃபிக் பொருளாதார வளர்ச்சி
கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.