அலுவல்பூர்வ வளர்ச்சி உதவி (ODA) என்பது வளரும் நாடுகளின்
பொருளாதார மேம்பாடு மற்றும் நலனை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு வளர்ந்த நாடுகள்
அளிக்கும் நிதி ஆகும். வளர்ந்த நாடுகள் அவற்றின் உள்நாட்டு பொருளாக்க மதிப்பில்
0.75%ஐ அலுவல்பூர்வ வளர்ச்சி உதவி நிதிக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் எனக்
கோரப்படுகிறது. 1970 முதல், பணக்கார நாடுகளின் பெரும்பாலான அரசுகள் அவர்களின்
மொத்த தேசிய வருவாயில் 0.7 சதவீதத்தை ஒதுக்கத் தவறியுள்ளன.
நிதியுதவி மிகவும் தேவைப்படும்
நாடுகளுக்கு அவசியம் முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை.
முக்கியமாக மூலோபாய நலன்களின் அடிப்படையில் கடன் அளிக்கப்படுகிறது.
ஏழை நாடுகளில் தாதுவளம் குறைவாக
உள்ள நாடுகளுக்கு கடன் அளிக்க தனியார் கடன் அமைப்புகள் அக்கறை காட்டுவதில்லை, 1980களில்
கடன் நெருக்கடியின் போது இந்நாடுகள் செலுத்தவேண்டியக் கடன் தொகையை மீட்டபின் புதியக்கடன்
ஏதும் கொடுக்காமல் இந்நாடுகள் புறக்கணிக்கப்பட்டன.
அலுவல்பூர்வ வளர்ச்சி நிதி உதவிகள்
தெற்கின் தேவைகளுக்கு ஏற்பக் கொடுக்கப்படவில்லை.
மாறாக புவிசார் அரசியல், வர்த்தகம்,
நன்கொடையாளர்களின் விளம்பர நலன்களின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. லாபகரமான
திட்டங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன; நிதியளிக்கும் நாடுகளின் நிறுவனங்களே
இதில் ஈடுபடுகின்றன.வளர்ச்சி உதவியின் வரையறை தெளிவின்றி உள்ளது. கடைசி பைசா வரை திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக
உள்ளது. கடன் குறைப்பு, வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், ஆய்வு நிறுவனங்களுக்கான
நிதி, அகதிகளுக்கான செலவுகள் ஆலோசனை மற்றும் நிபுணர் குழுக்கான சம்பளம் இவையாவுக்குமே
அலுவல்ரீதியான வளர்ச்சி நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்த நிதியில் மிக சொற்ப அளவே பயனுள்ள
செலவுகளுக்கு எஞ்சுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கில் ஒரு நாடு உணவு, விமானத்தை
அனுப்ப முடிவு செய்யும் போது துன்பத்தில் உள்ள ஒரு நாட்டிற்கு மருந்துகள், விமானத்தை
வாடகைக்கு எடுப்பதற்கான செலவு, உணவு, மருந்துகளுக்கான செலவுகள், தயாரிப்பவர்கள் அல்லது
உடன் செல்பவர்களின் சம்பளம் சரக்குகள் அனைத்தும் வழங்கப்பட்ட உதவித் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடன் அளிக்கப்படும் மூன்றாம் உலக
நாட்டில் கடன் தொகை சாதாரண மக்களுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்தப்படுவதில்லை.
அதன் மூலம் மிகப்பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களான பேரணைகள், மின்னாக்கிகள், ரயில்வே
திட்டங்கள் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. இந்தப் பொருத்தமில்லாத பெருந்திட்டங்கள்
வெள்ளை யானைகள் என அழைக்கப்படுகின்றன. கடனின் மூலம் பெருமளவில் மக்களை அடக்குமுறை செய்யும்
ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்படுகின்றன. தங்களது உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று
குவித்த ஆயுதங்களை வாங்குவதற்காகப் பெற்றக் கடனை மக்களே அடைக்கிறார்கள். கடன் அளிக்கும்
நாடுகளிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையிலும்
கடனளிக்கப்படுகிறது, தேவையில்லாத, விலையுயர்ந்த பொருட்கள் அந்நாடுகளின் தலையில் கட்டப்படுகிறது.
மக்களுடைய உண்மையான தேவைகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சர்வாதிகாரர்களின் செல்வசெழிப்பு
வங்கிகளுக்கு ஒரு உத்தரவாதம் அளித்தது. அத்தகைய தலைவர்கள் உடன்பட மறுத்தாலோ, கடனைத்
திருப்பிச் செலுத்த மறுத்தாலோ அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும். ஊழல், கொள்ளை இதில்
முக்கியப் பங்கு வகித்தது.
1970களிலிருந்து 2000 வரை மூலப்பொருட்கள்,
விவசாயப் பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ந்தது. கடன் திரும்பச் செலுத்தவேண்டிய
போது எந்த நாணயத்தில் கடன் பெறப்பட்டதோ அதே நாணயத்தில் திரும்ப செலுத்தவேண்டும். டாலரில்
கடன் வாங்கினால் டாலரிலே கடனைத் திரும்ப செலுத்தவேண்டும். ஆனால் வளரும் தென் நாடுகளின்
ஏற்றுமதிப் பொருட்களின் விலை வீழ்ந்ததால் ஏற்றுமதி வருவாய் குறைந்தது. அதனால் கடனை
அடைக்க கூடுதலாக பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டியிருந்தது. உதாரணமாக சாம்பியா, சிலி
தாமிரத்தையும், கினியா, ஜமைக்காவும் பாக்ஸைட்டை அதிகளவில் ஏற்றுமதி செய்தன. குறைந்த
வருவாயில் அதிகம் கடனுக்கு செலுத்தவேண்டியிருந்தது. 1970களில் அமெரிக்காவில் வட்டி
விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதனால் கடன் பெற்ற நாடுகளின் வட்டிவிகிதம் திடீரென்று
மூன்று மடங்கு உயர்ந்தது. பழையக் கடன்களை அடைக்க புதியக் கடன்கள் பெறப்பட்டன. ஆஃப்ரிக்க
நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகள்
ஆகியவை கடன் வலையில் சிக்கின. கடனின் மூலம்
புதுவித காலனியாதிக்கம் நடைமுறைக்கு வந்தது. அதிகமாக ஏற்றுமதி செய், குறைவாக செலவு
செய் என்பதே சர்வதேச நிதிநிறுவனங்களின் கட்டளையாக இருந்தது. சர்வதேச பண நிதியம் ஏழை நாடுகளுக்கு உதவும் விதத்தில் செயல்படவில்லை. கடன்
அளித்தவர்களுக்கு கடன் திருப்பி செலுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட்டது.
கடன் பெற்ற நாடுகள் ஒன்று சேர்ந்து
ஒரு முன்னணியை உருவாக்குவதும் அனைத்துவிதத்திலும் தடுக்கப்பட்டது.
உலகவங்கி, சர்வதேசப் பண நிதியம்,
பாரிஸ் கிளப், லண்டன் கிளப் ஆகியவை வளர்ந்த நாடுகளுக்கு சாதகமானக் கொள்கைகளையேத் தக்கவைத்துக் கொண்டன. பணமதிப்புக்
குறைப்பால் அதிகளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டியிருந்தது.
தார்மீக அடிப்படையில், கடன் வழங்குபவர்கள்,
பங்குதாரர்கள் அல்லது ஊக வணிகர்கள் உரிமைகள், பல கோடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு
முன் மதிப்புக்குரியது அல்ல. கிடைக்கக்கூடிய
ஆதாரங்கள் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பதிலாக செல்வசெழிப்புள்ள
கடனளித்தவர்களுக்கு வட்டி செலுத்தவேண்டும் என்று கோருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
சர்வதேச பண நிதியமும், உலக வங்கியும்
காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு கடன் கொடுத்த போது அவற்றிற்குத் தெரியும் அந்த நாட்டின் ஏழை மக்களுக்கு அந்தப் பணம்
உதவப் போவதில்லை நாட்டின் ஆட்சியாளர் மொபுடுவை வளப்படுத்தவே பயன்படுத்தப்படும் என்று
.
தெற்கில் உள்ள நாடுகள் கடனை அடைப்பதை
நிறுத்த வேண்டும். அந்தக் கடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரத்தால் ஒப்பந்தம்
செய்யப்பட்டிருப்பதால், சட்டவிரோதமானது, அவை ஊழல் அரசுகள் தங்கள் சுய லாபத்திற்காக
பெற்ற கடன்கள். ஏழைகள் மீது பணக்கார நாடுகளின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு செலுத்துவதற்கான
கருவியாக கடன் உள்ளது. பல நூற்றாண்டுகளின் சுரண்டலின் விளைவாக. வடநாடுகள் செல்வங்களைக்
கொள்ளையடித்ததன் விளைவாகவே இது சாத்தியமாகியுள்ளது.
ஐந்து நூற்றாண்டுகளின் கொள்ளை,
அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்தாலும், அதற்குப் பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கட்டமைப்பு
சரிசெய்தல் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்ட தென் நாட்டு மக்களுக்கு தாங்கள் அனுபவித்த
அனைத்து துன்பங்களுக்கும் துயர்துடைப்புகோர உரிமை உண்டு. வடக்கின் கடன் வழங்குபவர்களால் அமைக்கப்பட்ட ஒரு கண்ணுக்கு தெரியாத பொறிமுறை
தெற்கின் ஆளும் வர்க்கங்களின் ஆதரவுடன். செயல்படுகிறது.ஆகவே கடனை முழுவதுமாக ரத்துசெய்யவேண்டும்.
நமது சக்தி கட்டுப்பாட்டிற்கு
அப்பாற்பட்ட வெளிப்புற சூழ்நிலைகள் காரணமாக, Force majeure செயல்படுத்தி கடனை திரும்பப்
பெறலாம். மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சி அல்லது வட்டி விகிதங்களில் திடீர் உயர்வு
ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
ஆணையம் ஏற்றுக்கொண்ட கடன் பிரச்சினை மற்றும் கட்டமைப்பு சரிசெய்தல் பற்றி 1999 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் ஒன்று
கடனாளி நாடுகளின் மக்களின் உரிமைகள் உணவு, வீடு, உடை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதார
சேவைகள் மற்றும் ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றை கட்டமைப்பு சரிசெய்தல் கொள்கை (SAP), கடன்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும்
கடன் சார்ந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடிபணியச் செய்யக்கூடாது என்கிறது.
ஒரு அரசு அதன் பள்ளிகள், அதன்
பல்கலைக்கழகங்களை மூடி நீதிமன்றங்கள், மற்றும் அதன் பொது சேவைகளை குழப்பமான நிலைக்கு
கைவிட்டு சமூகத்தில் அராஜகத்தை தலைதூக்கவிட்டு வெறுமனே கடன் பணத்தை திருப்பி செலுத்த
வேண்டும் என எதிர்பார்க்க முடியாது
—ஐ.நா ஆணையத்தின் சர்வதேச சட்டம்,
1980, தொகுதி. 1 குறிப்பிடுகிறது.
." 1983 வியன்னா ஒப்பந்தத்தின்
38வது பிரிவு
புதிதாக சுதந்திரம் பெற்ற நாடு
அதன் பழையக் கடன்களை செலுத்துவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்கமுடியாது என்று குறிப்பிடுகிறது.
கடன்களை ஒப்பந்தம் செய்த ஆட்சி
எத்தகையது திரட்டப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை அறியவேண்டிய பொறுப்பு
கடனளித்தவர்களுக்கு உள்ளது.
No comments:
Post a Comment