பைபிள்:
பைபிளில் ஜூபிலி பற்றிய கருத்து
உள்ளது, ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்கும் ஒருமுறை ஜுபில் ஆண்டு அனுசரிக்கப்படும். ஜுபிலி
ஆண்டின் போது கடன்கள் ரத்து செய்யப்படும் அல்லது "மன்னிக்கப்படும்"
ஒரு ஜூபிலி ஆண்டு சமூக, சுற்றுச்சூழல்
நடவடிக்கைகளால் குறிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் நிலம் தரிசாக விடப்படும், அடிமைகளுக்கு
விடுதலை அளிக்கப்படும், கடன்கள் ரத்துசெய்யப்படும்.
வாழ்வாதார காரணங்களுக்காக, பணக்கடன்
வழங்குவது சட்டபூர்வமானது.
ஆனால் அதற்கு எந்த வட்டியும் வசூலிக்கப்படுவதில்லை
மற்றும் கடன் ஏழு ஆண்டுகளுக்கு அதிகமாக பெறப்படுவதில்லை.ஒருவரது நிலைமை மிக மோசமாகி
அவர் தன்னை அடிமையாக விற்கும் நிலைக்கு உட்படுவாரானால் அடிமையாகி, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட
வேண்டும் என்று பைபிள் கூறுகிறது.
குரான்
இஸ்லாத்தின் உரையின்படி, வர்த்தகத்தின்
களம்,
பரிமாற்றம் ஒரு தார்மீக அடிப்படையில், சமூகரீதியாக, மதரீதியான பரிமாணத்தைக்
கொண்டிருக்கவேண்டும். ரிபா எனப்படும் கந்துவட்டிக்கு கடன் கொடுக்கும் நடைமுறை குரான்
நிராகரிக்கிறது.
இஸ்லாம் அதை ஒரு நியாயமற்ற நடைமுறையாகக்
கருதுகிறது, ஏனெனில்
கடன் வாங்குபவர் சிரமங்களின் மூலமாக
கடன் வழங்குபவர் எந்த முயற்சியும் இல்லாமல் பணக்காரர் ஆக்க முடியும்.
அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்துள்ளார்,
வட்டியைத் தடை செய்தார்.
என்று குரான் கூறுகிறது.
மேலும் (கடனாளி) நெருக்கடியில்
இருந்தால், அவர் நிம்மதி பெறும்வரை கடன் ஒத்திவைக்கப்படட்டும்; உங்களுக்கு தெரிந்திருந்தால்
நீங்கள் அதை பிச்சையாக கொடுப்பது உங்களுக்கு நல்லது என்றும் குரான் குறிப்பிடுகிறது.
பண்டைய கிரீஸ், ரோமிலும், யூத
கலாச்சாரத்திலும், கடன் ரத்து செய்யப்படும்
வழக்கம் பொதுவாகக் காணப்பட்டது.
யூத பாரம்பரியத்தில், ஜூபிலி ஆண்டு
என்பது அனைத்து கடன்களையும் நீக்கும் ஆண்டாகும். ஒவ்வொரு நூறு வருடங்களுக்கும் ஒரு
முறை ஜூபிலி ஆண்டு அனுசர்க்கப்படுகிறது. ஏழையாயிருப்பதில் கடன்பட்ட, பெரும்பான்மையான மக்கள் மகிழ்ச்சி அளித்து அடிமைப்படுத்தும் அச்சுறுத்தலில்
இருந்து விடுதலை அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment