மத்திய காலத்துல ஐரோப்பாவின் வங்கிமையம் ஃபுளோரன்ஸிலிருந்து ஜெர்மனிக்கு மாத்தப்பட்டுருக்கு. ஃபுளோரன்ஸின் வங்கியமைப்பு எப்புடி வீழ்ச்சியடைஞ்சுச்சுண்ணு ஏற்கெனவே பாத்தோம். புதிய வங்கி மையமா ஜெர்மனி எப்புடி உருவானுச்சு என்பதைப் பத்தியும் கள்ளக் கூட்டு முதலாளித்துவ நிறுவனத்தின் முதல் மாதிரியைப் பத்தியும் இப்ப பாப்போம்.
ஆக்ஸ்பர்க்கின் ஃபக்கர்
குடும்பம்:
ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஆக்ஸ்பர்க்
நகரத்துல 1367 முதல் வசிச்சு வந்த ஃபக்கர் குடும்பம், நெசவு செஞ்ச துணி, ஆடைகளை வர்த்தகம்
செய்யுறதிலிருந்து தான் தொழிலை ஆரம்பிச்சுருக்கு. இந்த குடும்பம் மூணு தலைமுறைகளுக்குள்ள,
முன்னணி வணிகக் குடும்பமா வளர்ந்ததோட மட்டுமில்லாம வங்கிக் குடும்பாகவும் வளர்ந்து
தேவாலயத்திலும் அரசாங்கத்திலும் முக்கியமான பதவிகளை அடைஞ்ச பிரபுக்களின் குடும்பாகவும்
வளர்ந்துருக்கு. இந்த குடும்பம்
பதினாறாம் நூற்றாண்டில்
ஐரோப்பிய பொருளாதாரத்தின்
பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி
எக்கச்சக்கமான செல்வத்தைக்
குவிச்சிருக்கு. இந்த வங்கிக்
குடும்பம் மறுமலர்ச்சியின்
போது ஐரோப்பா
முழுக்க தாக்கம் செலுத்துன
மெடிசி குடும்பத்தின்
இடத்தைப் பிடிச்சுருச்சு. இந்த குடும்பம்
உயர்ந்த ஹாப்ஸ்பர்க்
வம்சத்துடன் நெருக்கமாக
இருந்ததுடன், அவங்களுக்கு
நிதியும் அளிச்சிருக்கு.
ஃபக்கர்
குடும்பம் ஆரம்பகால
முதலாளித்துவ சகாப்தத்தின்
வர்த்தக நிறுவனத்தின்
முன்மாதிரியாகக் கருதப்படுது.
ஏண்ணா இந்த குடும்பத்தினர்
வங்கியையும், வர்த்தகத்தையும் ஒருங்கிணைத்துருக்காங்க, வணிக லாபங்களுக்காக அரசு அதிகாரத்தைப்
பயன்படுத்தியிருக்காங்க, அதோட பரந்த, ஒரு சர்வதேச வலையமைப்பையும் நிறுவியிருக்காங்க.
இவங்களோட
ஆரம்பகால-முதலாளித்துவ மாதிரியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
வங்கி,
வர்த்தகத்தின் ஒருங்கிணைப்பு: ஃபக்கர்ஸ் நீண்ட தூர வர்த்தகத்தை
(ஜவுளி, வாசனைப் பொருட்கள் போன்றவை) விரிவான நிதி சேவைகளுடன் இணைச்சாங்க, போப்பாண்டவர்
நிர்வாகத்துக்கான வங்கி, பணப் பரிமாற்ற சேவைகளை செஞ்சாங்க, நாணயங்களை
உற்பத்திசெய்றதுக்கான உரிமையை குத்தகைக்கு எடுத்துருக்காங்க. இந்த பன்முகப்படுத்தப்பட்ட
அணுகுமுறையால் அவங்க பெருமளவுக்கு மூலதனத்தை சேமிக்கமுடிஞ்சுது.
தொழில்துறை
முதலீடு: உற்பத்தியில அவங்க நேரடியா முதலீடு செஞ்சுருக்காங்க. குறிப்பாக
ஆட்சியாளர்களுக்கு கொடுக்குற கடன்களுக்கான பிணையமாக டைரோலியன், ஹங்கேரிய வெள்ளி செப்பு
சுரங்கங்களை எடுத்துருக்காங்க. இதன் மூலமா செப்பு சந்தையில கிட்டத்தட்ட ஏகபோக உரிமையையும்,
மதிப்புமிக்க வளங்களையும், விநியோகச் சங்கிலிகளையும் தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள
கொண்டுவந்துருக்காங்க.
கள்ளக்
கூட்டுக்கான முன்மாதிரி: ஜேக்கப் ஃபக்கர் தனது செல்வத்தை வெச்சு
அரசியல் ஆதாயங்களை அடைஞ்சுருக்காரு. அரசு அதிகாரத்திற்கும் தொழில் வர்த்தகத்துக்கும்
இடையிலான ஆரம்பகால கள்ளக்கூட்டுக்கு எடுத்துக்காட்டாக சார்லஸ் V ஐ புனித ரோமானிய பேரரசராகத்
தேர்ந்தெடுப்பதற்கு நிதியளிச்சுருக்காரு. அதற்கு ஈடாக, ஜேக்கப் ஃபக்கருக்கு சாதகமான
சுரங்க உரிமைகளையும், வர்த்தக சலுகைகளையும் (எ.கா., அல்மடனில் உள்ள ஸ்பானிஷ் பாதரச
சுரங்கங்களில்) கிடைச்சுருக்கு.
சர்வதேச
வலையமைப்பும் உள்கட்டமைப்பும்: இந்த குடும்ப நிறுவனம் வெனிஸ்,
ஆண்ட்வெர்ப், லிஸ்பன், செவில் உள்ளிட்ட ஐரோப்பா முழுவதும் உள்ள முக்கிய வணிக மையங்களில்
பரந்த அளவிலான அலுவலகங்கள், முகவர்களின் வலையமைப்பைக் கொண்டிருந்தது. இது நவீன பன்னாட்டு
நிறுவனங்களைப் போலவே சிக்கலான தளவாடங்களை நிர்வகிக்கவும், சந்தை தகவல்களை சேகரிக்கவும்,
கண்டம் விட்டு கண்டம் செல்லும் பொருட்களின் ஓட்டங்களை எளிதாக்கவும் உதவிருக்கு.
அதிநவீன வணிக நடைமுறைகள்: பாரம்பரிய கில்ட்
கட்டமைப்புகளைத் தாண்டி நகர்ந்து, வணிக சாதுர்யம், இடர் மதிப்பீடு, மூலோபாய திட்டமிடல்
ஆகியவற்றில் கவனம் செலுத்துற நவீனமான, ஒற்றை குடும்பக் கட்டுப்பாட்டு நிறுவனத்தை உருவாக்குனாங்க.
(தொடரும்)
No comments:
Post a Comment