அமைதி விரும்பிகளாகக் கருதப்படுற மதபோதகர்கள் தான் பல போர்களை ஏவிவிட்டுருக்காங்க. அதுக்கு உதாரணமா சிலுவைப்போரை சொல்லியிருந்தோம், உண்மையான கிறித்துவர்களா இருந்த சிலுவைப் போர்வீரர்களான டெம்ப்ளர்களை மத நிந்தனையாளர்களா ஃபிலிப் மன்னன் எரிக்கும் போது போப் தான் அதுக்கு உடந்தையா இருந்தாரு. இன்னொரு போப் ஆட்சியைக் கவுக்க சதி செஞ்சாரு, ஃபுளோரன்ஸுல மெடிசி வங்கிக் குடும்பம் ஆட்சியாளர்களா இருக்கும் போது தான் அது நடந்துச்சு. கீழ வர்ற வரலாற்றுக்கதையில அதுவும் ஒரு பகுதியா இருக்கு என்னண்ணு பாருங்க.
மத்திய காலத்துல ஐரோப்பாவின் வங்கிமையமா
ஃபுளோரன்ஸ் வளர்ந்துச்சுண்ணு பாத்தோம். ஃபுளோரன்ஸின் வங்கியமைப்பு 15ஆம் நூற்றாண்டுல
வீழ்ச்சியடைஞ்சுருச்சு. எதுனால தெரியுமா? .
1463ல வெனிஸுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும்
இடையே போர் வெடிச்சிருக்கு, அதுனால ஆசியாவுடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டுருக்கு,
போருல பல வெனிஸ் வர்த்தக நிலையங்கள் தீப்பிடிச்சு எரிஞ்சுருச்சு. வணிகர்களும்
இறந்துருக்காங்க, பாய்மரக்கப்பல்கள் கடலின் அடியில மூழ்கடிக்கப்பட்டுருக்கு,
சரக்குகள் தடுத்து வைக்கப்பட்டுருக்கு. வர்த்தக நிலையங்கள், வணிகர்கள், கப்பல்கள்,
சரக்குகள் நிதியளிச்ச வெனிஸ் வங்கியாளர்கள், நொடிச்சுப் போயிட்டாங்க, இந்த
நெருக்கடியால இத்தாலிய வங்கிகள் மூழ்கியது. இதுனால மெடிசி வங்கிக்கு நேரடி
பாதிப்புகள் குறைவாக தான் இருந்துருக்கு. ஆனா நிலுவைக்கடன்களால, வைப்புத்தொகையும்
குறைஞ்சுருக்கு. ஃபுளோரன்சில் கடுமையான மந்தநிலை ஏற்பட்டது.
இங்கிலாந்திலிருந்து கம்பளி கிடைக்குறதுல
ஏற்பட்ட சரிவுனாலயும் ஃபுளோரன்ஸ் அடி வாங்குனுச்சு. வங்கித் தொழில் மட்டுமில்லாம
பட்டு, வெல்வெட், டமாஸ்க், உயர்தர கம்பளி துணிகளின் தயாரிப்பும், வணிகமும்
ஃபுளோரண்ஸில் வளர்ந்துருந்துச்சு. கம்பளி தயாரிப்புகளுக்கு அவங்களுக்கு இங்கிலாந்து
கம்பளி தேவைப்பட்டுச்சு. ஆனால் இங்கிலாந்து ரோஜாக்களின் போர்களால பேரழிவை
சந்திச்சுருந்துச்சு, மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யுறதுக்குப் பதிலாக
இங்கிலாந்திலேயே துணியை உற்பத்தி செய்வதற்கான ஒரு திட்டமிட்ட கொள்கை
அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால ஃபுளோரன்ஸுக்கு இங்கிலாந்து கம்பளி கிடைப்பது
கஷ்டமா போச்சு. அதுனால 15 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில ஃபுளோரன்ஸின் துணி
உற்பத்தி குறைஞ்சுருச்சு.
1478 இல் மெடிசியை பதவி நீக்கம் செய்யுறதுக்காக
சிஸ்டைன் தேவாலயத்தின் போப் சிக்ஸ்டஸ் IV சதித்திட்டத்தை அரங்கேத்தியிருக்காரு. இருந்தாலும்
மெடிசி ஜெயிச்சிட்டாரு, ஆனா போப் அதுக்கப்புறம் மெடிசி வங்கியின் வாடிக்கையாளரா
இல்லாம போயிட்டாரு. ரோமானியக் கிளை தான் வங்கி லாபத்துல பாதிக்கும் மேல கொடுத்ததால
இது மெடிசி வங்கிக்கு கடுமையான அடியா போச்சு.
இது மட்டுமில்லாம மெடிஸி வங்கி
பிரபுக்களுக்கும், அரசர்களுக்கும் ஏராளமா கடன் கொடுத்துருக்கு, அதையெல்லாம் வசூல்
பண்ண முடியல. 1494 ல் ஃபிரெஞ்சு மன்னர் சார்லஸ் VIII இன் இத்தாலி மேல தொடுத்த
போரால இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுச்சு. மெடிசி குடும்பத்தினர் வெளியேத்தப்பட்டாங்க.
அவங்க ஃபுளோரன்ஸுக்கு பிரபுக்களாக திரும்புனாலும் கூட வங்கித் தொழில் முடிவுக்கு
வந்துடுச்சு.
(தொடரும்)
No comments:
Post a Comment