சாதிய முதலாளி வர்க்கம்:
இந்தியாவுல இருக்குற
முதலாளிகளை சாதிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் ஏற்கெனவே பகுத்துப்
பாத்துருக்கோம், ஆனா அது மட்டும் பத்தாதுங்க. ஏண்ணா இந்தியா தான் பல தேசிய
இனங்களின் சிறைக்கூடமா இருக்குதே. அதுனால இந்தியாவுல உள்ள முதலாளிகளை தேசிய
இனங்களின் அடிப்படையிலயும் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியமா இருக்கு.
இப்போதைக்கு நாம நம்ம ஆய்வோட எல்லையை தமிழ்நாட்டு அளவுக்கு குறுக்கிக்குவோம். தமிழ்நாட்டின்
பொருளாதாரத்துல ஆதிக்கம் செலுத்துற பிற தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளைப் பத்தி
இப்போ பாப்போம். தமிழ்நாட்டுல பெரிய அளவுல லாபம் சம்பாதிக்கிற தமிழ்நாட்டைச் சேராத
தென்னாட்டு, வடநாட்டு முதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் கண்டுபிடிச்சு
பட்டியல் போடுறது தான் இப்ப நம்மோட வேலை.
தமிழ்நாட்டுல எல்லா
நகரங்கள்லயுமே சேட்டுக்கள் என்றழைக்கப்படுற மார்வாடிகள், அடகுக்கடை, வணிக
நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் வெச்சிருக்காங்க. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விக்கிற
பெரும்பாலான கடைகள் மார்வாடிகளுடையதா இருக்கு. அது போல குஜராத்திகளும் பெருமளவுல
வணிக நிறுவனங்களை வெச்சுருக்காங்க. தமிழ்நாட்டில் வட்டி முதலாளிகளாகவும், வட்டி
முதலாளிகளாகவும் மார்வாரிகளும், குஜராத்திகளும் இருக்காங்க. இந்த விசயம் பொதுவா
எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.
ஆனா இப்போ நாம நமக்கு
கெடைக்குற தரவுகளின் அடிப்படையில விவரமா இதை பத்திப் பாப்போம். மொதல்ல நம்ம
எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச அம்பானி, அதானியிலிருந்து ஆரம்பிப்போம்.
மராத்தி இனத்தைச் சேர்ந்த
பனியா முதலாளி தான் முகேஷ் அம்பானி. இவரோட ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட
1,300 சில்லறை விற்பனைக் கடைகளுக்கு உரிமையாளரா ரூ. 25,000 கோடிக்கு மேல் முதலீடு செஞ்சுருக்கு.
அம்பானியின் ஜியோ தமிழ்நாட்டுல ரூ.35,000 கோடிக்கு மேல் முதலீடுகளைச் செஞ்சுருக்கு.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்பாடு செஞ்சிருந்த 2024 உலக முதலீட்டாளர்
மாநாட்டுல பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முதலீடுகளை
தமிழ்நாட்டுல செய்யப்போவதாகவும், தமிழக அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட
விரும்புவதாகவும் முகேஷ் அம்பானி சொல்லியிருந்தாரு.
முகேஷ் அம்பானியின்
அண்ணனான அனில் அம்பானி ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தோட சொந்தக்காரர். இந்த
நிறுவனத்தோட பேரு 2008ல் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர் லிமிடெட்-ணு
மாத்தப்பட்டுருக்கு. இந்த நிறுவனம் தமிழ்நாட்டுல நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள்
கட்டுமானத்துல ஈடுபட்டுருக்கு.
அடுத்து மோடிக்கு
நெருக்கமான குஜராத்தி இன ஜெயின் முதலாளியான கௌதம் அதானியோட முதலீடுகளைப் பத்தி
பாப்போம். தமிழ்நாட்டுல அதானி குழுமத்தோட முதலீடுகள், துறைமுகங்கள், தளவாடங்கள், சமையல்
எண்ணெய், மின் பரிமாற்றம், நகர எரிவாயு விநியோகம், தரவு மையங்கள், பசுமை ஆற்றல், சிமென்ட்
உற்பத்தி என பல துறைகளை ஆக்கிரமிச்சிருக்கு.
அதானி துறைமுகங்கள்
நிறுவனம் காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களை இயக்கி வருது - இதுவரைக்கும், திருவள்ளூர்
மாவட்டத்துல மொத்தம் ரூ.3,733 கோடி முதலீடு செஞ்சுருக்கு. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்
நீர்மின்சார உற்பத்திக்கான முதலீடுகளை பன்முகப்படுத்தும் விதத்துல தென்மலை, அல்லேரி,
ஆழியார் ஆகிய இடங்களில் மொத்தம் 4,900 மெகாவாட் திறனை இலக்காகக் கொண்டு ரூ.25,000 கோடி
முதலீடு செய்யப்போகுதாம்.
அதானி-எட்ஜ்கனெக்ஸ் சென்னையின்
சிப்காட் ஐடி பூங்காவுல தரவு மையத்தை இயக்குது. 33 மெகாவாட் திறன் கொண்ட அதானி-எட்ஜ்கனெக்ஸ்
தரவு மையம் 200 மெகாவாட் தரவு மையமாக மேம்படுத்த ரூ.13,200 கோடி முதலீடு செய்யப்போறதா
சொல்லியிருக்காங்க.
அம்புஜா சிமென்ட்ஸ், ஏசிசி
ஆகியவை தமிழ்நாட்டுல ஆண்டுக்கு 1 மில்லியன் டன் திறன் கொண்ட உற்பத்தித் திறனை உருவாக்க
ரூ.550 கோடி முதலீடு செஞ்சுருக்கு. மதுக்கரையில் 2 மில்லியன் டன் திறன் கொண்ட ஒரு ஆலையையும்;
காட்டுப்பள்ளி, தூத்துக்குடியில் தலா 6 மில்லியன் டன் திறன் கொண்ட இரண்டு ஆலைகளையும்
அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்போறாங்களாம்.
கடலூர், திருப்பூர் மாவட்டங்களின்
நகர எரிவாயு விநியோகத்தையும் அதானி குழுமம் அதானி டோட்டல் கேஸ் மூலமா ஆக்கிரமிச்சுருக்கு.
இதன் மூலமா 5,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் எரிவாயு விநியோகிக்கப்படுது. ரூ. 180 கோடி முதலீட்டில்
100 கி.மீ.க்கும் மேற்பட்ட குழாய்களை அமைச்சுருக்காம். அதானி டோட்டல் கேஸ் தமிழ்நாட்டில்
அதன் முதலீட்டை ஒன்பது மடங்குக்கு மேல் அதிகரிக்க திட்டமிட்டுருக்கு.
(தொடரும்)

No comments:
Post a Comment