சாதிய முதலாளி வர்க்கம்:
தமிழ்நாட்டுல காலுன்றிய
வட நாட்டு, பிற தென்னாட்டு முதலாளிகளைப் பத்தித் தான் இப்ப பாத்துட்டு இருக்கோம்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான
தமிழக அரசு ஏற்பாடு செஞ்சிருந்த 2024 உலக முதலீட்டாளர் மாநாட்டுல கலந்துகொண்ட
அதானி, தன்னோட அதானி குழுமம் தமிழ்நாட்டில் ரூ.42,700 கோடிக்கு மேல் முதலீடு
செய்யப்போறதா அறிவிச்சிருந்தாரு. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் (MoU)
கையெழுத்திடப்பட்டுருக்கு. அதுல அதானி கிரீன் நிறுவனம் 24,500 கோடி ரூபாயும், அதானி
கனெக்ஸ் நிறுவனம் 13,200 கோடி ரூபாயும், அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம் 3,500 கோடி
ரூபாயும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 1,568 கோடி ரூபாயும் தமிழ்நாட்டுல முதலீடு
செய்யப்போறதா அறிவிக்கப்பட்டுருக்கு.
அதானி நிறுவனம் TANGEDCO-
உடன் கூட்டுச் சேர்ந்து செஞ்ச ரூ.3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் பத்தி
உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். இந்தியா முழுக்க கொள்ளையடிக்கிற அதானி மத்த
நாடுகளையும் விட்டுவைக்கல. ஸ்ரீலங்கா, தான்சானியா, வியட்நாம், ஆஸ்திரேலியா,
இஸ்ரேல்ண்ணு பல நாடுகள்ல கொள்ளை முதலீடுகள் செஞ்சுருக்காரு. ஆஸ்திரேலியாவுல மக்கள்
இயக்கங்களால கட்டமைக்கப்பட்ட #StopAdani பிரச்சாரத்தால அதானியோட அழிவுகரமான
திட்டங்கள் ஆஸ்திரேலியாவுல தடுக்கப்பட்டுருக்கு. தமிழ்நாட்டையும், இந்தியாவையும்
பாதுகாக்க நாமும் #StopAdani பிரச்சாரத்தை முழு வீச்சுல செய்யவேண்டியது ரொம்ப
ரொம்ப அவசியமா இருக்கு.
அடுத்து ஹரியனாவைச் சேர்ந்த ஜின்டால் முதலாளிகளைப் பத்தி பாப்போம்.ஓம் பிரகாஷ் ஜிண்டாலோட புள்ளக்குட்டிகள் எல்லாருமே தமிழ்நாட்டுல சொந்தமா நிறுவனங்கள் வெச்சிருக்காங்க.
சஜ்ஜன் ஜிண்டாலுக்கு சொந்தமான ஜே.எஸ்.டபுள்யு குழுமம் ஜே.எஸ்.டபுள்யு ஸ்டீல் லிமிடெட், ஜே.எஸ்.டபுள்யூ எனர்ஜி லிமிடெட் நிறுவனங்கள் மூலமா தமிழ்நாட்டுல ரூ.15,000 கோடிக்கு மேல் முதலீடு செஞ்சுருக்கு. 2024 முதலீட்டாளர் மாநாட்டுல தமிழ்நாட்டுல ஜிண்டால் அட்வாண்சுடு மெட்டீரியல்ஸ் (ஜி.ஏ.எம்) நிறுவனம் 1000 கோடி ரூபாய் முதலீட்டுல திருச்சியில் உற்பத்தி நிறுவனத்தை ஏற்படுத்தப்போறதா ஒப்பந்தம் செஞ்சுருந்தாங்க. ஜே.எஸ்.டபுள்யூ குழுமம் சேலத்துல உருக்காலையையும், தூத்துக்குடி, தாராப்பூர்ல காற்றாலைகளையும் சொந்தமா வெச்சிருக்கு. இவையல்லாம பல வணிக நிறுவனங்களையும், விநியோக சங்கிலிகளையும் கொண்டதா இருக்கு.
சஜ்ஜன் ஜிண்டாலோட
சகோதரரான நவின் ஜிண்டாலுக்கு சொந்தமான ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட் நிறுவனம்
சென்னையில இருக்கு. இவரோட ஜிண்டால் ரினீயூவபுல் நிறுவனம் கரூர்ல காற்றாலைகளை
உருவாக்குற திட்டத்துல ஈடுபடுது.
பிரித்வி ஜிண்டாலுக்கு சொந்தமான ஜிண்டால் சா லிமிடெட்
நிறுவனம் சென்னையில இருக்கு.
ரடன் ஜிண்டாலுக்கு சொந்தமா சென்னையில ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்
ஸ்டீல்வே லிமிடெட் நிறுவனம் இருக்கு. ரடன் ஜிண்டாலோட மனைவி தீபிகா ஜிண்டாலுக்கு சொந்தமான
ஜிண்டால் லைஃப் ஸ்டைல் நிறுவனமும் சென்னையில தான் இருக்கு.
சாவித்ரி ஜிண்டாலுக்கு சொந்தமான
இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோட டீலர்களா மெட்ராஸ் ஸ்டீல் &
டியூப்ஸ், ஸ்ரீவஸ்தா டியூப் கார்ப்பரேசன் நிறுவனங்கள் செயல்படுறதும்
குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)

No comments:
Post a Comment