ஆதிமனுசங்க தங்களை அலங்கரிச்சு அழகுபடுத்திக்க பயன்படுத்துன ஆபரணங்களிலிருந்து பணம் தோன்றியிருக்கலாம். ஆனா அதே சமயத்துல பணமாகப் பயன்படுத்துன பொருட்களும் நாளடைவுல ஆபரணங்களா பயன்படுத்தப்பட்டிருக்கலாம்ணு பால் எயின்சிக் சொல்றாரு. ஆபரணப் பொருட்கள், பணம் இவை ரெண்டுல எதுலிருந்து எது தோன்றுனுச்சு? இதை பத்தி பால் எயின்சிக் சொல்றதை இப்ப கேப்போம்.
ஆபரணம், சடங்கு
செயல்பாடுகள் மூலம் பணத்தின் தோற்றம்:
ஆபரணங்களிலிருந்து பணம் தோன்றியதற்கு ஆதரவாக உண்மையில்
ஏராளமான வாதங்கள் இருக்கு. ஹெல்ஃபெரிச்சின் கூற்றுப்படி, ஆபரணங்கள் பணப் பயன்பாட்டிற்குத்
தகுதியானவை, ஏண்ணா அவற்றை சேமிக்குறதுக்கான ஆசைக்கு வரம்பே இல்லை. வெற்றாரவாரம், பகட்டு,
அலங்காரத்திற்கான ஆசை ஒருபோதும் முழுமையாக திருப்தி அடையுறதுல்ல. அதுனால, தேவைகளுக்கு
அதிகமாக வெச்சிருப்பவங்க, அவற்றை விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு மகிழ்ச்சியோட பரிமாறிக்குவாங்க.
வீட்டுவசதியையும்,
உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யுறது எளிதாக இருந்த வெப்பமண்டலப் பகுதிகள்ல, ஆடை
முக்கிய தேவையாக இல்லைணாலும் கூட, ஆபரணங்கள் ரொம்ப விரும்பப்பட்ட செல்வமாகக் கருதப்பட்டதாக
லாஃப்லின் சுட்டிக்காட்டியிருக்கார்.
இதுவே ஃபிஜியின்
நாணயமாக திமிங்கலங்களின் பற்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், அங்கு தனியார் உடைமை
பற்றிய கருத்துக்கள் ரொம்ப உறுதியா நிறுவப்படல. இன்னொரு கவனிப்புப்படி, ஆதிகால மனிதன்
என்ன “விலை” கொடுத்தாவது மோசமானவன் என்ற அவபெயரைப் பெறுவதைத் தவிர்ப்பதுக்கு முயற்சிக்க
வேண்டியக் கட்டாயம் இருந்துருக்கு. சமூக அபிப்ராயம் அவனைத் தன்னோட உடைமைகளை தாராளமாக
விநியோகிக்க கட்டாயப்படுத்துது. ஆபரணங்களை வெளிக்காட்டுவது மோசமானவன் என்று குற்றம்
சாட்டப்படாமல் செல்வத்தை சேமிக்கக்கூடிய சில வடிவங்களில் ஒன்றாக இருந்தது.
பணத்தின் அலங்கார தோற்றம் பற்றிய கோட்பாடு கூறுவது நிச்சயமா வலுவானது தான். இருந்தாலும், பணப் பயன்பாட்டின் காரணமாக மதிப்புமிக்க உடைமைகளாக மாறிய பொருள்கள் பின்னர் கவர்ச்சிகரமான ஆபரணங்களாகக் கருதப்பட்டதற்கும் சமமான சாத்தியப்பாடு இருக்கு. இது நிச்சயமாக செல்வத்தை வெளிக் காட்டும் பழமையான விருப்பத்துக்கு ஏற்ப உள்ளது. காலனியாதிக்க சக்திகள் பழங்குடியினரை காகிதப் பணத்தையும் வங்கிகளையும் பயன்படுத்தத் தூண்டுறதுல இருந்த சிரமங்களில் ஒன்றாக இருந்தது, பண நோட்டுகளை ஆபரணங்களாக அணிய முடியாததும், வங்கி இருப்புக்கள் கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்ததும்
தான். பழமையான நாடுகளில் உள்ள வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையின் தோராயமான அளவைக் குறிக்கும் அலங்கார பேட்ஜ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நடைமுறையை ஏற்றுக்கொண்டால் இந்த சிரமம் குறையும்.
பணமும் ஆபரணமும்
முந்தைய காலங்களில் - இன்னும் பல பின்தங்கிய சமூகங்களில் உள்ளன - முற்றிலும் ஒரே மாதிரியாக
இருந்ததால், இவை இரண்டுல எது முதல்ல தோன்றுனுச்சு, எது பின்னாடி உருவானுச்சுண்ணு கருத்தை
உருவாக்குவது பெரும்பாலும் கடினம் தான். சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கிலாந்தின்
பகட்டான வீடுகளின் இரவு உணவு மேசைகளை அலங்கரித்த வெள்ளித் தட்டுகள் பண இருப்புக்களாகக்
கருதப்பட்டு அடிக்கடி பயன்படுத்தப்பட்டன.”
ஆபரணங்கள்-நகைகளை
பழங்குடியினர் அணியுறதுக்கு பல காரணங்கள் இருக்கு, அழகுணர்ச்சி, வீரம், வளமை ஆகியவற்றின்
வெளிப்பாடாகவும் அவங்க ஆபரணங்கள் அணிஞ்சுருக்காங்க, சடங்குகள், தீய சக்திகளிலிருந்து
தங்களைப் பாதுகாத்துக்குறதுக்காகவும் ஆபரணங்கள் அணிஞ்சுருக்காங்க. உதாரணமா மசாய் பழங்குடிகள்
தங்களோட நகைகளை வீரம், வலிமை, ஒற்றுமையின் அடையாளமா சிகப்பு மணிகளால் அலங்கரிக்கிறாங்க.
வானம், ஆற்றலைக் குறிக்கும் விதத்தில் ஊதா மணிகளை கோர்க்குறாங்க. உடல்நலம், இயற்கை,
இனப்பெருக்க ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும் விதமா பச்சை மணிகளால் அலங்கரிக்கிறாங்க. இதுல செல்வத்தின்
வெளிப்பாடு நேரடியாக அடையாளப்படுத்தப்படல.
அதுனால ஆபரணங்கள்
என்பது முழுக்க முழுக்க செல்வத்தின் வெளிப்பாடு என்று சொல்வது பழங்காலத்துல மட்டுமில்ல,
இன்னைக்கும் கூட பொருந்தாது. தங்க, வெள்ளி நகைகள் வாங்கமுடியாத பெண்கள் பிளாஸ்டிக்,
கண்ணாடி, மண் வளையல்கள், பிளாஸ்டிக், கவரிங்க் தோடுகள், பாசிமணிகளை போட்டுக்குறாங்க.
பிளாஸ்டிக், கண்ணாடி வளையல்கள் போடுறதால தன்னை வசதியில்லாதவராக மத்தவங்க எடை போடுவாங்க
என்பதைக் காட்டிலும், அதையெல்லாம் போட்டுக்குட்டா அழகா இருக்கும் என்று கருதுற அழகுணர்ச்சி
மேலோங்குவதால தான் அணியுறாங்க. பணத்தையே கடவுளா
மதிக்குற இன்றைய சமூகத்துலயே நெலைமை இப்புடி இருக்கும் போது ஆடம்பரத்துக்காகத் தான்
நகைகள் போடுறாங்க, சமூக அந்தஸ்தை வெளிக்காட்டிக்கத் தான் நகை அணியுறாங்க என்பது போன்ற
நாகரிக கால சிந்தனைகளையெல்லாம், ஆதிமனுசங்க மேல திணிக்குறதும், அவங்க தங்களோட செல்வத்தை
விளம்பரப்படுத்தத் தான் நகைகள் அணிஞ்சதாக விளக்கம் கொடுக்குறதும் வரலாற்றுப் பிழை தான்.
(தொடரும்)

No comments:
Post a Comment