யம்மு பாட்டி: நல்லா முழிச்சுக்கிட்டு இருந்து மிச்ச கதையையும் கேட்டுருங்க சரியா… பன்னாட்டு மனுச அழகிகள் உலக அழகுப் போட்டில கலந்துக்குறதா முடிவு பண்ணுனதை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கிட்ட தெரியப்படுத்துனாங்களாம்.
போட்டி
ஒருங்கிணைப்பாளர்கள்: நீங்க உலக அழகுப் போட்டில தாராளமா கலந்துக்கலம் ஆனா ஒரே ஒரு
கண்டிசன்…
பன்னாட்டு
மனுச அழகிகள்: என்ன கண்டிசன்…
போட்டி
ஒருங்கிணைப்பாளர்கள்: மேக்-அப் போடாம தான் போட்டியில கலந்துக்கணும்ணு விதிமுறைகளை
மாத்திட்டாங்க, அதுனால
பன்னாட்டு
மனுச அழகிகள்: நீங்க ஒண்ணும் சொல்லவேணாம், எங்களுக்கு இப்ப ரொம்ப நல்லா புரிஞ்சுபோச்சு, நீங்க எல்லாரும் வேணும்ணே எங்கள அவமானப்படுத்துறதுக்காகவே
இப்புடி பண்ணியிருக்கீங்க… நாங்க இதை எதிர்த்து வழக்கு போடுவோம்…
பன்னாட்டு மனுச அழகிகள் போட்ட வழக்கு விசாரணைக்கு வந்துருச்சாம்
காட்டு-நாட்டு
நீதிபதி: இதுல புதுசா சொல்ல ஒண்ணுமேயில்லம்மா, இதுவரைக்கும் நடத்திவந்த உலக அழகிப் போட்டிக்கும்
அழகுக்கும் சம்மந்தமில்லைணு தான் இப்ப போட்டியோட பேரையும் விதிமுறைகளையும் மாத்திருக்காங்க.
ஒங்களுக்கு மேக்-அப் போடாம கலந்துக்கமுடியாட்டி இது தான் வழி, இதுவரைக்கும் நடத்திவந்த
உலக அழகிப் போட்டியோட பேரை இனிமே மேக்-அப் போட்டிணு மாத்தணும், மார்க்கெட் பத்தி கவலைப்படாதிங்க,
ஏண்ணா நீங்க எப்பவும் போல அதுல கலந்துகிட்டு வியாபாரம் பண்ணலாம். ஆனா மேக்-அப் போடாம
நடக்குற உண்மையான அழகுப்போட்டில எல்லா உயிரினங்களும் கலந்துக்குவாங்க… அதை ஒங்களால
ஒண்ணுமே பண்ணமுடியாது… ஒங்களோட மேக்-அப் போட்டி தனியா நடக்கும், ஒங்களுக்கு சம்மந்தமில்லாத
உலக அழகுப்போட்டியும் இன்னொரு பக்கம் நடக்கும். அவ்வளவு தாம்மா, நடையக் கட்டுங்க…
பன்னாட்டு உலக அழகிகள் மூஞ்சியைத் தூக்கிவெச்சிக்கிட்டு அங்கேருந்து
வெளியேறிட்டாங்களாம்…
அதுனால மகாஜனங்களே! ஒரு முக்கியமான அறிவிப்பு, இதுவரைக்கும்
உலக அழகிப் போட்டிங்குற பேருல மேக்-அப் சாமான் வித்தவங்களுக்கும் அழகுக்கும் எந்த சம்மந்தமும்
இல்லைணு உங்களை எச்சரிக்கிறோம். மேக்-அப் சாமான்
வித்தவங்க இனிமே உலக அழகிப்போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டுருக்கு. அவங்க இனிமே மேக்-அப்
போட்டி மட்டும் தான் நடத்தமுடியும். அழகுக்கலைங்குற பேருல இனிமே அவங்க அழகுக்கொலை செய்வதை
ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதுனால அழகு, கிழகுங்குற பேருல அவங்க ஒல்லிப்பிச்சான்கள்
மூலமா மேக்-அப் சாமான் விக்குறதை பாத்து ஏமாந்துடாதீங்க. சட்டத்துக்குப் புறம்பா அழகு,
கிழகுங்குற பேருல அவங்க ஊரை ஏமாத்துனாங்கண்ணா கா.பி.கோ 343 பிரிவின் படி அவங்களுக்கு
பத்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். இல்லைணா
பத்துகோடி ரூபாய் அபராதமும் கட்டி ஆயுள் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
அதுனால மேல் சொன்ன மேக்-அப் தொழிலில் ஈடுபட்டவங்க இனிமேலாவது திருந்தி மக்களுக்கு உபயோகமான,
உருப்படியான வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம். வழி தெரியலைனா திருந்திவாழ்வோர்
சங்கத்திலோ, அல்லது சீர்திருத்தப்பள்ளியிலோ சேர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
கதைய சொல்லி முடித்த யம்முப் பாட்டி அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்
இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
(தொடரும்)

No comments:
Post a Comment