Saturday, September 6, 2025

இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (60)

 



சாதிய முதலாளி வர்க்கம்:

2017லேருந்து ஜிஎஸ்டி கொடுமையால மக்கள் கஷ்டப்படுறாங்க, மாநில அரசுகளோட வரி உரிமைகள் பறிக்கப்பட்டதால வருவாயும் கொறைஞ்சுப் போச்சு. ஆனா இந்தியாவுக்குள்ளயே இருந்துக்குட்டு உள்நாட்டு ஜி.எஸ்.டி வரியையும் கட்டாம, வெளிநாட்டுலேருந்து இறக்குமதி ஏற்றுமதி பண்ணுறதுக்கு ஒரு பைசா கூட வரி கட்டாம பல பணக்கார நிதி முதலைகள் சொகுசா வாழுறதுக்கு மோடி குஜராத் கிஃப்ட் சிட்டியில ஏற்பாடு பண்ணிக் கொடுத்துருக்காரு.

ஆமாங்க, இந்தியாவின் வரிப்புகலிடமான குஜராத் கிஃப்ட் சிட்டியில இருக்குற நிதி நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பொருட்களையோ, சேவைகளையோ வாங்குறதுக்கு ஒரு பைசா கூட சுங்கவரி கட்டவேண்டியதில்லை.

குஜராத் கிஃப்ட் சிட்டியில இருக்குற நிதி நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையிலிருந்து (Domestic Tariff Area) வாங்கும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் ஒரு பைசா ஜி.எஸ்.டி வரியும் கட்டவேண்டியதில்லை.

இது மட்டுமில்லாம குஜராத் கிஃப்ட் சிட்டியில இருக்குற நிதி நிறுவனங்கள் சேவைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் போதும் ஒரு பைசா வரி கட்டவேண்டியதில்லை.

பணத்துல புரளுர நிதி முதலைகளுக்கு வரிச்சலுகை, ஏழை எளிய மக்களுக்கு வரிச்சுமை இது தான் பாஜக ஆட்சியின் லட்சணம்.

2025 ஜூன் மாசத்துல இந்திய முதலாளிகள் வெளிநாடுகள்ல செஞ்ச நேரடி அந்நிய முதலீடுகளைப் பத்தி தான் இதுக்கு முன்னாடி பாத்துக்குட்டு இருந்தோம். அதுல தான் ஐஎஃப்.எஸ்.சி கிஃப்ட் சிட்டியும் வருது. இந்தியாவுல மொத்தம் 29 நிறுவனங்கள்/ முதலாளிகள் ஐஎஃப்.எஸ்.சி கிஃப்ட் சிட்டியில மொத்தம் 3,613 கோடியே 45 லட்சத்து 91ஆயிரத்து424.05 ரூபாய் (41.3077 கோடி டாலர்) முதலீடு செஞ்சுருக்காங்க. கிஃப்ட் சிட்டியில அதிக முதலீடுகள் செஞ்ச முதல் மூணு நிறுவனங்களை ஏற்கெனவே பாத்துட்டோம்.

நாலாவது இடத்துல இருக்குறது பராக் பரீக் ஃபைனான்சியல் அட்வைசரி சர்வீசஸ் லிமிடெட். இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில பிபிஎஃப்ஏஎஸ் அல்டர்னேட் அசட் மேனேஜர்ஸ் ஐ.எஃப்.எஸ்.சி லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 9 லட்சத்து 337 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

அஞ்சாவது இடத்துல இருக்குறது வாட்டர்ஃபீல்ட் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில வாட்டர்ஃபீல்ட் இண்டர்நேஷனல் ஐ.எஃப்.எஸ்.சி பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 5 லட்சத்து 795 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

ஆறாவது இடத்துல இருக்குறது இரேஜ் புரோக்கிங்க் சர்வீசஸ் எல்.எல்.பி. இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில இரேஜ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜ்மெண்ட் எல்.எல்.பி என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 5 லட்சத்து 500 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

ஏழாவது இடத்துல இருக்குறது அஸ்பதா கேபிடல் அட்வைசர்ஸ் எல்.எல்.பி. இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில அஸ்பதா இன்வெஸ்ட்மெண்ட் மேனஜர்ஸ் (ஐ.எஃப்.எஸ்.சி) எல்.எல்.பி என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 5 லட்சத்து 100 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

எட்டாவது இடத்துல இருக்குறது ட்ரூ நார்த் மேனேஜர்ஸ் எல்.எல்.பி. இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில ட்ரூ நார்த் (கிஃப்ட்) ஸ்பான்சர் எல்.எல்.பி என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 3 லட்சத்து 238 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

ஒன்பதாவது இடத்துல இருக்குறது ஜியோக்னோ இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனம் குஜராத் கிஃப்ட் சிட்டியில ஜியோக்னோ ஸ்கைவொர்க்ஸ் (ஐ.எஃப்.எஸ்.சி) பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 2 லட்சத்து 76 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

பத்தாவது இடத்துல இருக்குறது பிட்டா ஃப்ரன்ட் டெக்னாலஜிஸ்  பிரைவேட் லிமிடெட் இந்த நிறுவனம் பிட்டா ஃப்ரன்ட் செகியூரிட்டிஸ் (ஐ.எஃப்.எஸ்.சி) லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை சொந்தமா வெச்சிருக்கு. அதுல 2 லட்சத்து 15 டாலர் முதலீடு செஞ்சுருக்கு.

வரிப்புகலிடங்கள் மூலமா நிதிமுதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுத்துட்டு, நம்மள மாதிரி ஏழை, எளிய மக்களை எல்லாம் வரியால வாட்டி வதைக்குறது தான் முதலாளித்துவ போலி ஜனநாயகம் என்பதை மறந்துடாதீங்க.

(தொடரும்)


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...