அமெரிக்காவுல கடன் ஆயுதத்தின் மூலமா மக்களோட உடைமைகள் பறிக்கப்பட்ட வரலாற்றைப் பத்தி பொருளாதார அறிஞர் எரிக் துசைண்ட் என்ன சொல்றாருண்ணு கேப்போம்.
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சொத்துக்களை அபகரித்தலுக்கும், அதை
எதிர்த்து நடந்த கிளர்ச்சிகளுக்கும் சில எடுத்துக்காட்டுகள்:
“அமெரிக்காவில், சுதந்திரத்திற்குப் பிறகு
விரைவிலேயே, வரி செலுத்தாததற்காக நிலத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்ட
விவசாயிகளால் எதிர்ப்பு இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டன. கட்டணங்களை பணத்தில் ரொக்கமாக
செலுத்தவேண்டியிருந்தது, ஆனால் பல விவசாயிகளிடம் ரொம்ப குறைவாகவே இருந்தது அல்லது எதுவும்
இல்லை, ஏனெனில் அவர்கள் அடிப்படையில் பண்டமாற்று மூலமும், பண்டங்களில் கட்டணம்
செலுத்தியும் வாழ்ந்தனர். இந்த விவசாயிகளில் பலர் புரட்சிகரப் படைகளில் பணியாற்றினர்,
ஆனால் அவர்களின் முழு ஊதியத்தையும் ஒருபோதும் பெறவில்லை. மாசசூசெட்ஸில், 1782 இல் க்ரோட்டனிலும்,
மீண்டும் 1783 இல் உக்ஸ்பிரிட்ஜிலும், குடிமக்கள் ஒன்றுகூடி உள்ளூர் அதிகாரிகளைத் தாக்கி,
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெறக் கோரினர். 1786 இல் ஷேஸின் கிளர்ச்சியின்
தொடக்கத்தில், ஆளுநர் பௌடோயின் வரிக் கடன்களை வசூலிக்க சிவில் நடவடிக்கைகளை அதிகரித்து
பின், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடனில் மாசசூசெட்ஸின் பங்கை செலுத்துவதற்கு சட்டமன்றம்
கூடுதல் சொத்து வரியை விதித்த பிறகு, நார்தாம்ப்டன் மற்றும் வொர்செஸ்டரில் நீதிமன்றங்களின்
அமர்வை திரளாக மக்கள் தடுத்தனர். இந்த இயக்கம் டேனியல் ஷேஸ் அவர்களது பெயரைப் பெற்றது,
டேனியல் ஷேஸ் ஒரு ஊதியம் பெறாத படைவீரர். வரி
செலுத்தாததற்காக அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1798 ஆம் ஆண்டு தொடங்கி,
கடனாளிகள் ஒரு சுய பாதுகாப்பு இயக்கத்தை கட்டமைத்து, கடன் வழங்குபவர்கள், நீதிமன்றங்களின்
மனம் போன போக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை
விடுத்தனர். 1800 ஆம் ஆண்டில் ஒரு கூட்டாட்சி சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் அது
கடன் செலுத்தாத வங்கியாளர்களுக்கும், வணிகர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கியது.
மேலும், வெவ்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த சட்டங்களைத் தொடர்ந்து
நடைமுறைப்படுத்தின, அவை பெரும்பாலும் கடன் வழங்குபவர்களுக்கே சாதகமாக இருந்தன.
1828 ஆம் ஆண்டு வெளியான "The Patriot; or,
People's Companion" என்ற புத்தகத்தை ஸ்காட் ஸ்டாண்டேஜ் மேற்கோள் காட்டுகிறார்.
கடன் என்பது கறுப்பின மக்களின் அடிமைத்தனத்திற்கு ஒப்பான "குடிமை அடிமைத்தனத்தின்"
ஒரு வடிவம் என்றும், கடனாளிகளுக்கோ அல்லது அடிமைகளுக்கோ அரசியலமைப்பின் கீழ் எந்தப்
பாதுகாப்பும் இல்லை என்றும் கூறி, கடனாளிகளின் சிறைச்சாலைகளை ஒழிக்க வேண்டும் என்று
அது வாதிட்டது.
கடன் வழங்கியவர்களிடமிருந்து
தப்பிக்கவேண்டும் என்பதே கிழக்கத்திய அமெரிக்காவிலிருந்து தூர மேற்கு நாடுகளுக்கு
நடந்த இடம்பெயர்வுக்கு ஒரு காரணமாகும்.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில்
புதிய உலகின் குடியேற்றத்தில் பங்கேற்ற பெரும்பாலான ஐரோப்பியர்கள் தங்கள் பயணத்திற்கு
பணம் செலுத்துவதற்காக கடனில் மூழ்கினர், இதன் விளைவாக அவர்கள் தங்களுக்கு கடன் வழங்கியவர்களுக்கு
அடிமைகளாகும் நிலையில் சிக்கினர். பல நீண்ட ஆண்டுகளாக, அவர்கள் ஆரம்ப கடனை திருப்பிச்
செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை
விதிக்கப்படும் அல்லது உடல் உறுப்புகள் சிதைக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டனர்.
1630-1776க்கு இடையில் வட அமெரிக்காவில் பதின்மூன்று பிரிட்டிஷ் காலனிகளில் குடியேறிய
ஐரோப்பியர்களில் பாதி முதல் மூன்றில் இரண்டு பங்கு வரை ஒப்பந்த அடிமைத்தனத்தின் கீழ்
வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையான கடன் அடிமைத்தனம் 1917 வரை அமெரிக்காவில்
ஒழிக்கப்படவில்லை."
(தொடரும்)

No comments:
Post a Comment