ஏஜிஇக்கள் எனப்படுற நச்சுப்பொருட்கள் உடம்புல உள்ள புரதங்களுடன் தேவையில்லாத குறுக்குப் பிணைப்புகளை ஏற்படுத்தது. தோலில் உள்ள கொலாஜன், எலாஸ்டின் போன்ற புரதங்களோட ஏஜிஇக்கள் குறுக்குப் பிணைப்புகளை ஏற்படுத்துவதால் தோலில் சுருக்கம் ஏற்படுது, இணைப்புத் திசுக்கள் நெகிழ்வுத் தன்மையை இழந்து இருக்கமடையுது. பிஸ்கெட், சிப்ஸ்ல உள்ள அக்ரலமைட் போன்ற வேதிப்பொருட்கள் புற்று நோயையும் ஏற்படுத்துது.
பிஸ்கெட் பாக்கெட்டுலயும், பாக்கெட் செஞ்சு விக்கிற
திண்பணடங்கள்லயும் அதுல எவ்வளவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு
(trans fat) இருக்குன்னு போட்டுருப்பாங்க. அது என்ன டிரான்ஸ் கொழுப்பு (trans
fat), அது இயற்கையில உள்ளதா, இல்ல செயற்கையா தயாரிக்கிறதா? இயற்கையில மாமிச உணவுகள்லயும்,
பால் பொருட்கள்லயும் குறைந்த அளவுல டிரான்ஸ் கொழுப்பு இருக்கு. உணவு தொழில்துறையில
செயற்கையாகவும் டிரான்ஸ் கொழுப்பை (trans
fat) உற்பத்தி செய்யுறாங்க. கொழுப்பு அல்லது எண்ணெயை ஹைட்ரஜனேற்றம் செஞ்சு டால்டா,
மார்கரைன் தயாரிக்கும் போது அதுல அதிக அளவுல டிரான்ஸ் கொழுப்பு உற்பத்தி ஆகுது. கடைகள்ல
நெய்க்கு பதிலா பயன்படுத்தப்படுற வனஸ்பதி ஒரு டிரான்ஸ் கொழுப்பு தான். பேக்கரி பண்டங்கள்ல
பயன்படுத்தப்படுற மார்கரைன் (margarine), ஷாட்டனிங்க் (shorrtening) போன்றவையும் டிரான்ஸ்
கொழுப்பு தான்.
கொழுப்பை அடிப்படையில ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு
நிறைவுற்ற கொழுப்பு (saturated fat), ரெண்டாவது நிறைவுறாத கொழுப்பு (un saturated
fat). நிறைவுற்ற கொழுப்பு அறை வெப்பநிலையில திட நிலையில இருக்கும், நிறைவுறாதக் கொழுப்பு
அறை வெப்பநிலையில திரவ நிலையில இருக்கும். கார்பன் அணுவோட இணைதிறன் 4ன்னு பள்ளிக்கூடத்துல
படிச்சது நினைவு இருக்கும்னு நினைக்கிறேன். நிறைவுற்ற கொழுப்போட கொழுப்பு அமிலத்துல
உள்ள எல்லா கார்பன்களுமே நான்கு அணுக்களோட இணைஞ்சு நிறைவுற்ற நிலையில ஒற்றைப் பிணைப்போட
தான் இருக்கும். ஆனா நிறைவுறாத கொழுப்பு அமிலத்துல ரெட்டைப் பிணைப்புகளோ, மும்மைப்
பிணைப்புகளோ இருக்கும்.
நிறைவுறாத கொழுப்பு அமிலம் சிஸ் வடிவத்திலோ அல்லது
டிரான்ஸ் வடிவத்திலோ இருக்கலாம்.
கொழுப்பு அமிலத்தோட இரட்டைப் பிணைப்பிற்கு இரு பக்கமும்
உள்ள கார்பன் அணுக்களோட பிணைந்துள்ள ஹைட்ரஜன் அணுக்கள் (functional groups) ஒரே பக்கத்துல
இருந்தா அவை சிஸ் கொழுப்பு அமிலங்கள்னு அழைக்கப்படுது. கொழுப்பு அமிலத்தோட இரட்டைப்
பிணைப்பிற்கு இரு பக்கமும் உள்ள கார்பன் அணுக்களோட பிணைந்துள்ள ஹைட்ரஜன் அணுக்கள் வெவ்வேற
பக்கத்துல இருந்தா அவை டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அல்லது மாறுபக்க கொழுப்பு அமிலங்கள்னு
அழைக்கப்படுது. இந்த டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கொழுப்பு டிரான்ஸ் கொழுப்புன்னு
அழைக்கப்படுது.
கொழுப்பு அல்லது எண்ணெயை அதிகமா சூடுபடுத்தும் போதும்
டிரான்ஸ் கொழுப்பு உருவாகுது. எண்ணெயை ரொம்ப நேரம் சூடுபடுத்தும் போதும் டிரான்ஸ் கொழுப்பு
உருவாகுது. ஒரு முறை பயன்படுத்துன எண்ணெய திரும்ப பயன்படுத்தும் போதும் டிரான்ஸ் கொழுப்பு
உருவாகுது. அதுனால தான் ஒரு முறை பயன்படுத்துன எண்ணெயை மறுபடி பயன்படுத்தக்கூடாதுன்னு
சொல்றாங்க. ஆனா கடைகள்ல எல்லாம் எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்துறாங்க. வீடுகள்லயும்
கூட எண்ணெயை திரும்பவும் பயன்படுத்துறாங்க. எப்புடி தெரியுமா வடகம், அப்பளம் பொறிச்ச
எண்ணெயை வெச்சு குழம்பு அல்லது கூட்டு பொரியலுக்கு தாளிப்பாங்க. வடை, பூரி சுட்ட எண்ணையை
தோசை, சப்பாத்தி சுடுறதுக்கு ஊத்துவாங்க. இதெல்லாம் செய்யவே கூடாது. அப்போ வடை, பூரி
சுட்ட எண்ணெயை என்ன பண்ணுறதுன்னு கேக்குறீங்களா. அதுனால தான் சொல்றேன் வடை, பூரியே
சுடாதிங்க. அப்பளம், வடகம் பொறிக்காதிங்க. தேவையில்லாம எண்ணெயையும் வீணாக்க வேண்டியதில்ல,
நச்சுக் குப்பைகளை சாப்பிட்டு உடல்நலத்தையும் பலி கொடுக்க வேண்டியதில்ல. ஏன்னா டிரான்ஸ்
கொழுப்பு உடம்புக்கு நல்லதே கிடையாது. டிரான்ஸ் கொழுப்பு ரத்தத்துல உள்ள நல்ல கொலஸ்டிராலை
கொறைச்சு, கெட்ட கொலஸ்டிராலை அதிகப்படுத்திடும். டிரான்ஸ் கொழுப்பால உடல் பருமனும்
கூடும் நீரிழிவு நோய், புற்று நோய் கூட ஏற்படும், டிரான்ஸ் கொழுப்பால ஹார்ட் அட்டாக்,
ஸ்டுரோக், இதய நோய்கள், திடீர் இறப்புகள் ஏற்படுது.
எந்தெந்த
உணவு பண்டங்கள்ல எல்லாம் டிரான்ஸ் கொழுப்பு இருக்கு தெரியுமா? சிப்ஸ், பிஸ்கெட், கேக்
போன்ற பேக்கரி உணவுகள், எண்ணெயில பொறிச்ச திண்பண்டங்கள், பிட்ஸா, பர்கர் போன்ற துரித
உணவுகள் இவை எல்லாத்துலயுமே டிரான்ஸ் கொழுப்புகளும் இருக்கு, ஏஜிஇக்கள், ஏஎல்இக்கள்
எனப்படுற நச்சுப்பொருட்களும் இருக்கு. அதுனால இதையெல்லாம் சாப்புடாதிங்க.
இப்பெல்லாம் எண்ணெய் இல்லாமலே “ஏர் ஃபிரையர்”
(air fryer) வெச்சு எல்லா பலகாரங்களும் செய்யலாம்னு விளம்பரம் போடுறாங்க, யுடியூப்ல
வீடியோ போடுறாங்க. அப்போ ஏர் ஃபிரையர்ல செய்யுற தீனிகள் எல்லாம் உடலுக்கு ஆரோக்யமானதா?
ஏர் ஃபிரையர்ல எண்ணெய் இல்லாமலோ அல்லது கொஞ்சமா எண்ணெய் ஊத்தியோ நொறுக்குத் தீனிகள்
பலகாரங்களை செய்யலாம்னு சொல்றாங்க. ஏர் ஃபிரையர்ல அதிக வெப்ப நிலையில உலர் வெப்பத்தால
சமைக்கப்படுது. அதுனால ஏர் ஃபிரையர்ல செய்யும் போதும் உணவுப்பண்டங்கள்ல அதிக அளவுக்கு
நச்சுப்பொருட்களான ஏஜிஇக்கள், ஏஎல்இக்கள் உருவாகுது. அதுனால ஏர் ஃபிரையர்ல செய்யுற
பண்டங்களும் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும் என்பதை மறந்துடாதிங்க.
(தொடரும்)

No comments:
Post a Comment