Sunday, June 1, 2025

பொம்மைகளின் புரட்சி (101)

 

பெப்போ: விளையாடுற நேரம் வந்தாச்சு வாங்க மாடிக்குப் போவோம்.

மஞ்சா: சாப்பாட்டையும் எடுத்துட்டுப் போயிடுவோமா, இல்லைனா திரும்ப, திரும்ப மேலயும், கீழயுமா அலைஞ்சுகிட்டே இருக்கனும்

அட்லு தாத்தா: வயசான நாங்களே அதைப் பத்தி கவலைப்படல, ஓடி விளையாடுற வயசுல நீ ஏன் அதைப்பத்தி கவலைப்படுற…

மஞ்சா: இன்னும் கொஞ்சம் நேரம் கூட விளையாடலாம்ல தாத்தா அதுக்குத் தான்…

அட்லு தாத்தா: என்னம்மா யோசிக்கிறா பாரு, சரி இந்தாங்க தட்டு, டம்ளர், தண்ணி சொம்பு எல்லாத்தையும் கொண்டு போங்க, மத்ததையெல்லாம் நானும் யம்முவும் கொண்டு வர்றோம்…

யம்மு பாட்டி: தண்ணி கீழ சிந்தாம சொண்டுபோகனும்…

அட்லு தாத்தா: அப்பாடி ஒரு வழிய சாப்பாட்டைக் கொண்டு வந்து சேர்த்தாச்சு…

பிம்பா: சரி வாங்க, நேத்து மாதிரியே ரெண்டு அணியா ரெண்டு பக்கட்டும் பிரிஞ்சு நில்லுங்க…

மஞ்சா: நேத்து மாதிரியே வேணாம், நான், குக்கு, தாத்தா மூணு பேரும் ஒரு அணியா இருக்கப்போறோம், நீ, பாட்டி, பெப்போ மூணு பேரும்  ஒரு அணியா நில்லுங்க

அட்லு தாத்தா: சரி மஞ்சா சொன்ன மாதிரியே வெச்சுக்குவோம்…

பிம்பா: சரி ஆடிக்கிட்டே பாடனும் 1, 2, 3 ஜூட்

தாத்தா அணி: விளையாடுவோம் வா வா வா

விளையாடுவோம் வா வா வா

பாட்டி அணி: வேலை கெடக்கு போ போ போ

வேலை கெடக்கு போ போ போ

தாத்தா அணி: கடைக்குப் போவோம் வா வா வா

பாட்டி அணி: கதை பேசனும் போ போ போ

தாத்தா அணி: படத்துக்குப் போவோம் வா வா வா

பாட்டி அணி: பாட்டு பாடனும் போ போ போ

தாத்தா அணி: காட்டுக்குப் போவோம் வா வா வா

பாட்டி அணி: காப்பி குடிக்கனும் போ போ போ

தாத்தா அணி: காப்பி குடிப்போம் வா வா வா

பாட்டி அணி: டீ குடிக்கனும் போ போ போ

தாத்தா அணி: ஊரு சுத்துவோம் வா வா வா

 பாட்டி அணி: குளுப்பாட்டனும் போ போ போ

பொம்மைய குளுப்பாட்டனும் போ போ போ

 தாத்தா அணி: ஆத்துல குளிப்போம் வா வா

பாட்டி அணி: ஆட்டம் போடனும் போ போ போ

தாத்தா அணி: புத்தகம் படிப்போம் வா வா வா

பாட்டி அணி: வீட்டுப்பாடம் பண்ணனும் போ போ போ

தாத்தா அணி: சேந்து படிக்கலாம் வா வா வா…

பாட்டி அணி: சேரமாட்டேன் போ போ போ

தாத்தா அணி: அப்பறம் பேசமாட்டேன் வா வா வா

பாட்டி அணி: நானும் பேசமாட்டேன் போ போ போ

தாத்தா அணி: கோச்சுட்டு போயிருவேன் வா வா வா

பாட்டி அணி: கவலையில்லை போ போ போ

தாத்தா அணி: டூகா விட்டுட்டேன் போ போ போ

பாட்டி அணி: பழம் விடுறேன் வா வா வா

இப்போ ரெண்டு அணியும் சேர்ந்து:

விளையாடப்போறோம் ஏலேலோ

பாட்டு பாடுவோம் ஏலேலோ

ஆட்டம் போடுவோம் ஏலேலோ

ஒளிஞ்சு பிடிப்போம் ஏலேலோ

தாவிக் குதிப்போம் ஏலேலோ

குளத்துல குதிப்போம் ஏலேலோ

ஆத்துல குளிப்போம் ஏலேலோ

சந்தைக்குப் போவோம் ஏலேலோ

ராட்டனம் சுத்துவோம் ஏலேலோ

பூங்காவுக்குப் போவோம் ஏலேலோ

ஊஞ்சல் ஆடுவோம் ஏலேலோ

படம் பாப்போம் ஏலேலோ

ஊரு சுத்துவோம் ஏலேலோ

வீடு திரும்புவோம் ஏலேலோ

கதை பேசுவோம் ஏலேலோ

புத்தகம் படிப்போம் ஏலேலோ

வீட்டுப்பாடம் பண்ணுவோம் ஏலேலோ

தூங்கி முழிப்பொம் ஏலேலோ

ஒழுங்கா பள்ளிக்கூடம் போவோம் ஏலேலோ

(தொடரும்)


No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...