சாதிய முதலாளி வர்க்கம்:
நீங்களும் முதலாளிகள் தான் நம்ம நிறுவனத்துல
யாரு வேணாலும் பங்குதாரரா ஆகலாம், சட்டு புட்டுன்னு பங்கை வாங்கி பங்காளி ஆகுங்க, பங்கு
முதலாளிகளா வளருங்கன்னு ஆசை காட்டி மக்கள்கிட்டேருந்து பணத்தைப் பறிக்கிற நிறுவனங்கள்
மக்களோட முதல்லேருந்து கிடைச்ச லாபத்தைக் கொடுக்காம ஏமாத்தி வாயில போட்டுக்குறாங்க.
அது செபியோட அறிக்கையிலயும் தெளிவா தெரியவந்துருக்கு பாருங்க.
நிறுவனங்களோட யோக்கிதையப் பத்தி செபி விட்டுருக்க
அறிக்கையில வேற என்னெல்லாம் சொல்லிருக்காங்கன்னு இப்ப பாப்போம்.
நிறுவனங்கள் தங்களோட தாய் நிறுவனங்களுக்கு
ராயல்டி மட்டும் கொடுக்குறதுல்ல. ராயல்டி அல்லது பிராண்ட் கட்டணங்களைத் தவிர, தொடர்புடையத்
தரப்பினருக்கு (தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள்) நிறுவனங்களிடமிருந்து செல்லும் பணத்தைப்
பொதுவாக 'மேலாண்மை கட்டணங்கள்', 'தொழில்நுட்ப உரிமக் கட்டணங்கள்' என்று அழைக்கப்படுது.
இத்தகைய கட்டணங்கள் ஒழுங்குமுறைக் கண்ணோட்டத்துல ராயல்டிக்கான வரம்புக்குள்ள வராது,
அதோட அத்தகைய கட்டணங்களின் அளவு சங்கோஜப்படுத்துற அளவுக்கு பெருசாவும் இருக்கலாம்.
பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்திய
துணை நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு மத்த புவியியல் பகுதிகள்ல இருக்குற சக துணை நிறுவனங்களிடமிருந்து
வசூலிக்கப்படும் ராயல்டி விகிதங்களைப் பத்தி ரொம்ப குறைவான தகவல்களை மட்டும் தான் தெரிஞ்சுக்கமுடியுது.
ராயல்டி கட்டணங்கள் குறித்த பல்வேறு நிறுவனங்களின்
சுயேட்சையான நியாயத்தன்மை கருத்துக்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் கணிசமாக வேறுபடுற
விதமா இருக்கு. பொதுவான மதிப்பீட்டைக் காணமுடியல. இது மதிப்பீட்டையும், ராயல்டி விகிதங்களின்
நியாயத்தன்மையையும் சுற்றி அதிகப்படியான அகநிலைத்தன்மை இருப்பதைக் குறிக்குது.
அனைத்து பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும்
ஈவுத்தொகையுடன் ஒப்பிட்டுப் பாக்கும்போது, சுமார் 40% நிகழ்வுகள்ல தொடர்புடையத் தரப்பினருக்கு
ராயல்டி செலுத்திய பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை செலுத்தாம
இருந்துருக்காங்க அல்லது ஈவுத்தொகையை விட அதிக ராயல்டியை செலுத்தியிருக்காங்கன்னு கண்டறியப்பட்டுருக்கு.
நிலர லாபத்துல தொடர்புடைய தரப்பினருக்குக்
கொடுக்கப்படும் ராயல்டி விகிதங்கள் அதிகமா இருந்ததுனால, அத்தகைய ராயல்டி கட்டணங்கள்
பங்குதாரர்களுக்கு கொடுக்குற மொத்த ஈவுத்தொகையை விட அதிகமாக இருந்த நிகழ்வுகளின் சதவீதம்
கணிசமாக அதிகரிச்சுருக்கு.
நிலர லாபத்துல தொடர்புடைய தரப்பினருக்குக்
கொடுக்கப்படும் ராயல்டி விகிதங்களை அதிகப்படுத்தும் போது பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை
செலுத்துவதற்கான இடம் கணிசமாகக் குறைஞ்சு போயிடுது.
இதுலேருந்து என்ன தெரிய வருதுன்னா நிலர லாபத்துல
தொடர்புடைய தரப்பினருக்குக் கொடுக்கப்படும் ராயல்டி விகிதங்களை அதிகப்படுத்தும் போது,
அத்தகைய ராயல்டி கட்டணங்கள் ஒரு நிறுவனத்தின் லாபத்தை அரித்து, இறுதியில் சிறுபான்மை
பங்குதாரர்களின் நலன்களைப் பாதிக்கக்கூடும்னு செபி சுட்டிக்காட்டியிருக்கு.
இதுவே நிறுவனங்கள் மக்கள்கிட்டேருந்து கடன்
வாங்கியிருந்தா முதலாளித்துவ நியாயப்படி மாசா மாசம் வட்டி கட்டி தான் ஆகனும். ஆனா மக்கள்கிட்டேருந்து
மூலதனத்தைத் திரட்டுற நிறுவனங்கள் மக்களை பங்குதாரர்கள்னு பேரளவுல மட்டும் தான் சொல்லிக்கிறாங்க.
பங்குதாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய லாப பங்கை கொடுக்காம ஏமாத்தி வாயில போட்டுக்குறாங்க
என்பதை இதுலேருந்து தெரிஞ்சுக்கலாம்.
(தொடரும்)

No comments:
Post a Comment