1. உயர்சாதி முதலாளி வர்க்கம்:
தமிழ்நாட்டைச்
சேர்ந்த மத்த உயர்சாதி முதலாளிகளை இப்ப பாப்போம்.
குழந்தைவேல் முதலியார் ( தி சென்னை சில்க்ஸ் , குமரன் தாங்க மாளிகை மற்றும் SCM குழுமங்களின் நிறுவனர்), எஸ். முத்துசாமி முதலியார் (நீலகிரி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர்), எம். எத்திராஜ் முதலியார் (பின்னி மில்ஸ், திருமகள் ஸ்பின்னிங் மில், எஸ்.வி. குலோபல் மில்ஸ் உரிமையாளர், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரர்),
கணபதி முதலியார் (கணபதி சில்க்ஸ் நிறுவனர்), வி.எஸ். கண்டிகாச்சலம் ( வி.எஸ்.ஜி டெக்ஸ், நண்டு பிராண்ட் லுங்கிஸ் நிறுவனர்), எம். முத்துசாமி முதலியார் ( எம்.ஆர்.சி & கோ, சென்னை கேட் பொன்னி அரிசி , முத்து மஹால் நிறுவனர்), எம். உமாபதி (வொல்டெக் குழுக்களின் நிறுவனர்), எஸ். பெருமாள் முதலியார் (நிறுவனர், எஸ்.பி. அப்பேரல்ஸ் லிமிடெட்), டி.எஸ். நடராஜ முதலியார் (ஜான்சன் குழுமத்தின் நிறுவனர்), குப்பண்ணா முதலியார்
( ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல், ருக்மணி அம்மன் உணவகத்தின் நிறுவனர்), ராமசாமி முதலியார் (கோயம்புத்தூர் ஷார்ப் மோட்டார்கள் , பைண்ட் பம்புகளின் நிறுவனர்), என். அருணாச்சலம் (நிறுவனர் National dothis பிராண்ட் ), ஆர். ராதா முதலியார் ( ரேன் இந்தியா ஸ்டீல்ஸ் நிறுவனர், லிஜோ ஹோட்டல் நிறுவனர்), எஸ்.பி. சம்பந்தன் முதலியார் ( சேலம் சம்பந்தம் நூற்பு ஆலை, SPM மருத்துவமனை, சித்தேஸ்வரா நூற்பு ஆலைகளின் நிறுவனர்), வி.எஸ். வேலாயுதம் முதலியார் ( ஸ்ரீ கோமதி நூற்பு ஆலைகளின் நிறுவனர்),
கே.கே.பாலுசாமி முதலியார் (கே.கே.பி டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளி, இந்து சர்வதேச பள்ளி, டாக்டர் ரான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர்), பி.வி.வி. கந்தசாமி முதலியார் ( இராசிபுரம் சொர்ண லட்சுமி நூற்பு ஆலைகள் ), பி.வி.வேலுசாமி முதலியார் (சின்னம்மாள் திருமண மண்டபத்தின் நிறுவனர்), மாசிலாமணி நந்தகோபால்
( நிறுவனர், மோகன் புரூவரிஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ் லிமிடெட்), டி.ஏ. ராமசாமி முதலியார் ( ராஜா சைசிங், ராஜா அரிசி ஆலை, வர்க்ஷா உலகளாவிய பள்ளி, டி.ஏ.ராமசாமி முதலியார் திருமண மண்டபம்),
திருவேங்கடம் முதலியார் ( குட்டி நூற்பு ஆலை, செங்குந்தர் நூற்பு ஆலை, குட்டி சைசிங் மில், திருச்செங்கோடு ஜோதி தியேட்டர்கள் நிறுவனர்), வி.வி.சி.ஆர் வையாபுரி முதலியார்
(புள்ளிகார் நூற்பு ஆலை நிறுவனர்), சி. ஆர். சதாசிவ முதலியார் ( கோவை பங்கஜா ஸ்பின்னிங் மில் நிறுவனர்), சென்னியப்பா முதலியார்
( எஸ்.கே.சி சில்க்ஸ் நிறுவனர்),
ஆர்.செல்வராஜ் முதலியார்
(சேலம் கந்தகிரி ஸ்பின்னிங் மில்லின் நிறுவனர்), பி. தங்கவேலு முதலியார் ( சேலம் தங்கவேலு டெக்ஸ்டைல்
மில் நிறுவனர்), பி.டி சம்பந்தம் முதலியார் (ஆரணி கிருஷ்ணா தியேட்டர்கள், கிருஷ்ணா தியேட்டர்கள்,
தணிகை டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றின் நிறுவனர்), வி.வி. நடராஜ முதலியார் ( கோவை வி.வி. நடராஜா முதலியார் & மகன்கள் ஜுவல்லர்ஸ் நிறுவனர்) இவங்க எல்லாருமே உயர்சாதி முதலாளிகள் தான்.
2. இடைச்சாதி முதலாளிகள்:
இடைநிலை
சாதிகளைச் சேர்ந்த முதலாளிகள் எல்லாம் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவங்க தான். பொதுவா
இந்தியாவுல உள்ளவங்க எந்த சாதியைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் ரொம்ப வசதி வாய்ப்புகள்
வந்த பெறகு உயர்சாதி நடைமுறைகள், பழக்கவழக்கங்களை கடைபிடிக்கிறது தான் வழக்கமா இருக்கு.
இதுல சில விதிவிலக்குகள் இருக்கலாம். இடைச்சாதி முதலாளிகளும் பெரும்பாலும் ஆதிக்க சாதி
மனப்பான்மை உள்ளவங்களா தான் இருக்காங்க. ஆளும் வர்க்க உயர்சாதி முதலாளிகளுடன் சமரசம்
செஞ்சுக்குட்டு இணக்கமா இருக்குறவங்களா தான் பெரும்பாலான இடைச்சாதி முதலாளிகள் இருக்காங்க.
தங்களோட ஆதாயத்திற்காக உயர்சாதி முதலாளிகளை ஆதரிப்பவர்களா, அவர்களுடன் கள்ளக்கூட்டு
உறவுகளைக் கொண்டவர்களாகத் தான் பெரும்பாலான இடைச்சாதி முதலாளிகள் இருக்காங்க. இதுல
விதி விலக்குகள் இருக்கலாம். எல்லாருக்கும் தெரிஞ்ச ரொம்ப பிரபலமான இடைச்சாதி முதலாளிகள்
யாரு தெரியுமா? சிவநாடார், மாறன் சகோதரர்கள் (கலாநிதி மாறன், தயாநிதி மாறன்) தான்.
இவங்க தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த இடைச்சாதி முதலாளிகளா இருக்காங்க. வசந்த் குமார்
(வசந்த் & கோ), செல்வராஜ் (சரவணா ஸ்டோர்ஸ்), வி.வி.தனுஷ்கோடி (விவிடி), ஆர்.ஜி.சந்திரமோஹன்
(அருண் ஐஸ்கிரீம்ஸ்), முத்து (இதயம் நல்லெண்ணெய்), ராஜகோபால் (சரவண பவன்), வி.பி.எஸ்.அய்யம்பெருமாள்
(வி.பி.எஸ்.அய்யம்பெருமாள் நாடார் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்), அய்யா நாடார் குடும்பம்,
வி.ஜி.பன்னீர்தாஸ் (விஜிபி.குழுமம்) இவங்களும் இடைச்சாதி முதலாளிகள் தான்
(தொடரும்)
No comments:
Post a Comment