Sunday, January 26, 2025

பொம்மைகளின் புரட்சி (83):

 

மதியம் சாப்புட்ட பெறகு மிமி தூங்கிட்டா… பெப்போ தான் மொதல்ல ஆட ஆரம்பிச்சான்…

யம்மு பாட்டி: சாப்புட்ட ஒடனே ஆடக்கூடாது கண்ணா, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தெட்டு ஆடலாம்…

பெப்போ: அதெல்லாம் எனக்கு ஒன்னும் பண்ணாது யம்மு பாட்டி… ஆடனும்னு நெனச்சா ஒடனே ஆடிறனும், வெயிட் பண்ணி காத்துக்கெடக்க என்னால முடியாதுப்பா…

குக்கு: நீ என்ன ஏதோ வித்தியாசமா ஆடுறியே... இந்த டேன்ஸோட பேரு என்ன…

பெப்போ: இதை ஷஃபிள் டேன்ஸுன்னு சொல்லுவாங்க…

குக்கு: இவ்வளவு வேகமா ஆடுனா ஒன்னுமே புரியலையே, கொஞ்சம் மெதுவா ஆடி சொல்லிக்குடுக்கிறியா…

பெப்போ: சரி இரு கொஞ்ச நேரம் ஆடிட்டு சொல்லித்தர்றேன்…

இப்ப வாங்க சொல்லித்தாறேன்… ஷஃபிள் டேன்ஸுக்கு அடிப்படையே ரன்னிங்க் மேன் ஸ்டெப் தான்… மொதல்ல வலது மொழங்காலை இப்புடி தூக்கனும், அப்பொறம் குதிச்சு வலது காலை முன்னாடியும், எடது காலை பின்னாடியும் வெச்சு “A” ஷேப்ல நிக்கனும், திரும்பவும் அதையே எடது கால்ல பண்ணனும்… எங்க போடு பாப்போம்…

பெப்போவுக்கும், மஞ்சாவுக்கும் ஷஃபிள் டேன்ஸ் ஏற்கெனவே தெரியுமா, அதுனால அவுங்க டக் டக்னு அந்த ஸ்டெப்பை போட்டுக் காட்டுனாங்க… குக்கு மெது மெதுவா போட்டுப் பாத்தா…

பெப்போ: குக்கு ஏன் சோகமா இருக்க… பரவால்ல நீ நல்லா தான் போடற, ஆனா ரொம்ப மெதுவா போடுறா, தெனசரி ஆடி பயிற்சி எடுத்தீன்னா வேகமா ஆடுவ சரியா… அதுனால கவலைப்படாம டேன்ஸ் ஆடிக்கிட்டே இரு...

பெப்போ: ரன்னிங்க் மேன் ஸ்டெப்லயே நெறைய வகை இருக்கு… அதையே இப்புடி வேற மாதிரி மாத்தி போடலாம்… இப்ப பாரு… இது டி ஸ்டெப்… இது டைமெண்ட் டி ஸ்டெப்… இது சார்லஸ்டன் ஸ்டெப், இது பாலி பாக்கெட்… இது ட்விஸ்ட், இது ஹேப்பி ஃபீட், இது ஸ்லைட், இது தான் மூன் வாக் ஷஃபிள்… எப்புடி நல்லாருக்கா…

யம்மு பாட்டி: அட்டகாசமா ஆடுறானே பெப்போ… எங்க எனக்கும் சொல்லிக் கொடுங்க நானும் ஆடிப்பாக்குறேன்…

குக்கு: யம்முபாட்டி, ரன்னிங்க் மேன் ஸ்டெப்ப இப்புடி போடு

யம்மு பாட்டி கொஞ்ச நேரம் மெதுவா போட்டுப் பாத்தாங்க… அப்புறம் கொஞ்சம் தண்ணீய குடிச்சிட்டு வந்தாங்க பாரு… அட இப்ப யம்மு பாட்டி குஷியா ஆட ஆரம்பிச்சுட்டாங்களே, ஹையோ! குக்குவும் நல்லா ஆடுறாளே… பெப்போவை கேக்கவா வேணும்…. அவன் சுத்தி சுத்தி ரன்னிங்க் மேன் போட்டுக் காமிச்சான்… அப்புறம் இப்ப அவங்க பிரபலமான ஷபிள் டேன்ஸ் பாட்டுகளை எல்லாம் போட்டு ஆட ஆரம்பிச்சுட்டங்க மொதல்ல பிளாக் விண்டர், அப்புறம் ஃபிரெண்ட்ஷிப், ஸ்ட் ராங்க் அஸ்மி, பாரா பெய்லர் எல்லாத்துக்கும் ஆடுனாங்க… அப்புறம் தமிழ் பாட்டைப் போட்டு ஆடுனாங்க, முக்கால முக்காபுல்லா, ஜும்பலக்கா ஜும்பலக்கா, இப்போ நாக்க முக்காவுக்கு ஆடிக்கிட்டு இருக்காங்க…

(தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026) (2)

  பிரதேசங்களுக்கு இடையிலான சமத்துவமின்மை: உலகளாவிய சராசரிகள் பிரதேசங்களுக்கு இடையிலான மிகப்பெரிய பிளவுகளை மறைக்கின்றன . உலகம் தெளிவ...