பத்மவிருதுகளை பத்தி பேசிக்கிட்டிருந்தோம்
இல்லையா, அப்போ எனக்கு இன்னொரு முக்கியமான விசயத்தைப் பத்தி சொல்லனும்னு தோணுச்சு.
அதான் இப்ப சொல்லப்போறேன். பல பத்மவிருதுகளை பொருத்தமில்லாம அதுக்கான தகுதி இல்லாதவங்களுக்குத்தான்
கொடுத்துருக்காங்க. ஆனா தகுதியான பலபேரு, சிறப்பா ஆய்வுசெய்யுற பலபேரு விருதோ, அங்கீகாரம்
இல்லாம தான் வேலையப் பாத்துக்கிட்டு இருக்காங்க. சமீபத்துல ஒரு தோழர் மூலமா எனக்கு
ஒரு புத்தகம் படிக்க கெடைச்சுச்சு. அதை படிச்ச பெறகு பல கேள்விகளுக்கு விடை கெடைச்சுச்சு,
தெளிவு பொறந்துச்சு. அப்புடி அந்த புத்தக்கத்துல என்ன தான் இருந்துச்சுன்னு சொல்லமாட்டியா?
இந்த இந்தியாவுலயும் சரி, நம்ம தமிழ்நாட்டுலயும் சரி எது ரொம்ப பெரிய பிரச்சினையா இருக்கு,
கேவலமான அவமானசின்னமா இருக்குன்னு கேட்டா சாதி தான்னு கண்ண மூடிக்கிட்டு நீங்க பதில்
சொல்வீங்க. அந்த சாதிகளைப் பத்திய அறிவியல் ஆய்வுகள் போதாக்குறையா தான் இருந்துருக்கு.
ஆனா இப்போ சாதியைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு புதிய பாதை கெடைச்சிருக்கு. என்ன சொல்லுற?
ஆமாங்க “தமிழகத்தில் சாதிகள்” என்ற புத்தகத்தின் மூலமா தோழர்.ஜெ.சிதம்பரநாதன் தான்
அதற்கான பாதையை நமக்கு அமைச்சுக் கொடுத்துருக்காங்க. சாதிகள் எப்படி உருவானுச்சு, எப்படி
வளர்ச்சியடைஞ்சுச்சு, என்பதைப் பத்தி புதிய கண்டுபிடிப்புகளை செஞ்சுருக்காங்க ஜெ.சி
தோழர், இந்த புத்தகத்துல மார்க்சிய அடிப்படையில சாதியோட இயங்கியலை தோழர் புட்டு புட்டு
வெச்சுருக்காங்க. கொஞ்சம் வெவரமா தான் சொல்லேன்? அப்புடி என்ன தான் கண்டுபுடிச்சாரு?
இல்லைங்க ஒங்களுக்கும், ஜெசி தோழருக்கும் எடையில மூணாவது நபரா நான் வரவேணாம்னு பாக்குறேன். அது எனக்கு ரொம்ப சங்கடத்த
கொடுக்கும். அவர் மூலமாவே நீங்க அவரோட கண்டுபிடிப்புகளை தெரிஞ்சுக்கங்க. சரி நீங்க
ஒரு படம் பாக்க தியேட்டருக்குப் போறிங்க. படத்தோட கதையை முன்னாடியே சொல்லிட்டா நல்லாருக்குங்களா?
படத்துல உள்ள திருப்பங்கள் எல்லாம் முன்னாடியே தெரிஞ்சுட்டா படம் பாக்க விறுவிறுப்பாவே
இருக்காதே. ஒரு படத்துக்கே இப்படீன்னா, நம்மளோட நிஜ வரலாறையே காட்சிபடுத்துற இந்த புத்தகத்தைப்
பத்தி சொல்லவா வேணும். அதை படிக்கிறது மூலமா ஒங்களுக்கு கெடைக்குற தனிப்பட்ட அனுபவத்தை,
சுவாரசியத்தை செதைக்குறதுக்கு எனக்கு துளி கூட மனசு இல்ல. அதுனால மன்னுச்சிக்குங்க.
நீங்களே இந்த புத்தகத்தை தவறாம படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கங்க. இனிமே சாதியைப்
பத்தி விவாதிக்கும் போதோ, ஆய்வுசெய்யும் போதோ இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டாம இருக்கவே
முடியாது. அந்த அளவுக்கு முக்கியமான புத்தகம். ஜெசி தோழரை இந்தியாவின் ஹென்றி மார்கன்னு
அழைக்கலாம். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா, இந்த புத்தகம் பரவலா அறியப்படாம இருக்கு, சரியா
அங்கீகரிக்கப்படாம இருக்குங்குறது தான் பெரிய கொறையா இருக்கு. யாராருக்கோ விருது கொடுக்குறாங்க,
பாராட்டு விழா எடுக்குறாங்க, இப்பேர்ப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை
செஞ்ச ஜெ.சிதம்பரநாதன் தோழருக்கு விருது கொடுக்கவேண்டாமா? பாராட்டுவிழா எடுத்து அவரை
கொண்டாட வேண்டாமா? இந்த சாதனையைப் புரிந்த ஜெ.சிதம்பரநாதன் தோழருக்கு ஜனநாயக அமைப்புகளும்,
இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து விருது கொடுக்கனும், தோழரை சிறப்பிக்கனும் என்று தாழ்மையுடன்
கேட்டுக்குறேன். இன்னைக்கு எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது
அவசியமான உடனடித்தேவையா இருக்கு. தோழர்.ஜெசி தோழரை சிறப்பிக்கப்போற விழாவே இடதுசாரி
அமைப்புகளை ஒருங்கிணைக்ககூடிய தொடக்கப்புள்ளியா இருக்கட்டுமே. தயவுசெஞ்சு அதற்கு ஏற்பாடு
பண்ணுங்க தோழர்களே. இதை நிறைவேற்ற பரவலா பகிர்ந்து உதவுமாறு ஒங்க எல்லோரையும் பணிவன்புடன்
கேட்டுக்குறேன். நன்றி.