சமீபத்துல ஐஐடி இயக்குநர் காமகோடி மாட்டு கோமயத்தோட மகத்துவத்தை சிலாகிச்சிருந்தாரு. ஒரு உயர் கல்வி ஆராய்ச்சி மையத்தோட இயக்குநர் காஞ்சி சங்கராச்சாரியரை பத்தியெல்லாம் பேசவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? இவருக்கு வக்காளத்து வாங்க வந்தாரே ஸ்ரீதர் வேம்பு அவரும் அதே வகையறாவை சேர்ந்த உயர்சாதி முதலாளி தான். காமகோடி ஒரு திறமையான ஆராய்ச்சியாளர், சிறந்த கல்வியாளர்னு அவர் சொல்லுறது அறிவியல் தான்னு அறிவியலே நாக்கை புடிங்கிக்கிற மாதிரி ஒரு விளக்கம் கொடுத்தாரு. சரி இதையெல்லாம் பத்தோடு பதினொன்னா ஒதுக்கித் தள்ளிட்டு நாம முன்னாடி போய்கிட்டே இருக்கனும். ஆனா நேத்து ஒரு செய்தி வந்துச்சே கேட்டீங்களா? இதே ஸ்ரீதர் வேம்பு ஸோஹோ நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செஞ்சுட்டாராம். ஏன்னா அவர் தலைமை விஞ்ஞானியா பொறுப்பேத்துக்கப் போறாராம். இவரெல்லாம் தலைமை விஞ்ஞானி ஆனா நாடு என்ன கதியாகும் நெனச்சுப்பாருங்க? இந்தியா கோமயத்துல தான் எப்பவும் மூழ்கிக் கெடக்கனும். காமகோடி பேசுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி இன்னொரு விசயமும் நடந்துச்சு. எங்க தெரியுமா? துருக்கியில தான். துருக்கியில ஒரு நாய் செத்துப் போகுற நிலையில உணர்வற்று இருந்த தன்னோட நாய்க்குட்டியை வாயில கவ்விக்கிட்டு கால்நடை மருத்துவமனைக்கு (Beylikdüzü Alfa Veterinary Clinic) போயிருக்கு. அங்க இருந்த மருத்துவர் எமிர் அந்த நாய்க்குட்டியை நல்லபடியா காப்பாத்திட்டாரு. இப்ப சொல்லுங்க இந்த காமகோடி, ஸ்ரீதர் வேம்பு, அந்த துருக்கி நாய் இவங்கள்ல யாரு அறிவாளி, யாரு அறிவியல் அடிப்படையில பகுத்தறிவா நடந்துக்கிட்டா? நல்லவேளை அந்த துருக்கி நாய், இந்த காமகோடி, ஸ்ரீதர் வேம்பு மாதிரி மெட்ராஸ் ஐஐடில படிக்கல. இல்லைனா அதுவும் நாய்க்குட்டிக்கு கோமயத்த குடுத்து சாகடிச்சிருக்கும். நீங்களே இந்த செய்தியை படிச்சுப்பாருங்க.
காமகோடி
பசுப் பாதுகாப்பு பத்தி பேசிருக்காரு, ஆமா காமகோடி வகையறா எப்பவுமே மாட்டுக்காக கவலைப்படுவாங்க,
விலங்குகளுக்காக குரல் கொடுப்பாங்க, ஆனா மனுசனை மனுசனா மதிக்கமாட்டாங்க, நடத்தமாட்டாங்க.
இன்ஃபொசிஸ் முதன்மை நிர்வாக இயக்குநர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் உட்பட அந்த நிறுவனத்தின்
18 பேர் மேல எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டது
இதற்கான சமீபத்தைய உதாரணமா இருக்கு. இந்த நாட்டுல உழுதவனுக்கு உண்ண உணவு இல்ல, நெசவாளிக்கு
உடுத்த துணி இல்ல. ஆனா முதலாளிகளுக்கு மட்டும் அதுவும் உயர்சாதி முதலாளிகளுக்கு மட்டும்
விருதுகளும், கௌரவமும் கெடைக்குது. சரி இந்த நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்மபூஷன்
விருது கொடுத்துருக்காங்களே. அவரு அதுக்காக என்ன பாடுபட்டாரா, உழைச்சாரா?, உழைக்கல
சரி, ஏழைப்பொண்ணுங்க கல்யாணத்துக்காவது இலவசமா பட்டுப்புடவைகள கொடுத்தாரா? அதுவும்
இல்ல. நல்லி சில்க்ஸுக்கு நட்சத்திர வாடிக்கையாளர்கள் தான் அதிகம். அட இந்த இந்திய
அரசு ஊரை உலையில போட்டு கொள்ளையடிச்ச நிதிமுதலை ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கே பத்மஸ்ரீ
விருது கொடுத்துருக்கே. அப்புறம் இதையெல்லாம் கேக்கவா வேணும். நல்லி குப்புசாமி
2003லயே பத்மஸ்ரீ விருதையும் வாங்கிட்டாரு. பணத்துக்கும், புகழுக்கும் தொழில் செய்யாமல்,
மனப்பூர்வமாகத் தொழில் செய்தால் உன்னத நிலையை அடையலாம்”ணு குப்புசாமி வேற பஞ்ச் டயலாக்
விட்டுருக்காரு. அருண் ஐஸ்கிரீம் சந்திரமோகனுக்கும் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துருக்கு.
பணக்காரங்களுக்காக பட்டுப்புடவையும், ஐஸ்கிரீமும் தயாரிக்கிறது தான் ஆகச்சிறந்த சேவைனு
விருது குடுத்து போற்றுது இந்திய அரசு.
(தொடரும்)
No comments:
Post a Comment