யம்மு
பாட்டி: இந்தாடா குக்கு கிண்ணத்துல உள்ள எல்லா பழங்களுமே ஒனக்கு தான், சாப்புடு…
குக்கு: நெறையா இருக்கே யம்மு பாட்டி, சரி
வாங்க நான் ஒங்களுக்கு ஊட்டிவிடுறேன்… தாத்தா ஒங்களுக்கு செல்லப்பேரு பழத்தாத்தான்னு
வெக்கப்போறேன்…
யம்மு பாட்டி: நான் வேணும்னா ஒனக்கு ஊட்டிவிடட்டுமா...
குக்கு:
ஊம் அத தான் நானே கேக்கலாம்னு நெனச்சேன் யம்மு பாட்டீ...
அடைக்கலம்
தாத்தா: குக்கு அன்னைக்கு எனக்கு கதை சொன்ன மாதிரி சாப்புட்ட பெறகு யம்மு பாட்டிக்கு கதை
சொல்றியா...
குக்கு:
ஊம் தாத்தா ஒங்களுக்கு நான் அட்லு தாத்தானு செல்லப்பேரு வெக்கப்போறேன், நல்லாருக்கா
அட்லு தாத்தா: அட்லு எனக்கு புடிச்சிருக்குடா அப்டியே கூப்புடு,
யம்மு இந்த மஞ்சாவும், பிம்பாவும் எங்க போனாங்க…
யம்மு
பாட்டி: மொட்டை மாடில வெளையாடிக்கிட்டு இருக்காங்க…
குக்கு:
மஞ்சா, பிம்பான்னா யாரு தாத்தா...
அட்லு
தாத்தா: லீவுக்கு பேரன் பேத்தி வீட்டுக்கு வந்துருக்காங்கன்னு சொன்னனே அவங்க தான், மஞ்சா
என் பேத்தி, பிம்பா என்னோட பேரன்… இந்தா அவங்களே வந்துட்டாங்களே... ஒங்க கூட வெளையாடுறதுக்கு
குக்கு வந்துருக்கா பாருங்க... வாங்க இப்புடி ஒக்காருங்க...
பிம்பா:
இரு தாத்தா, தண்ணி குடிச்சுட்டு வந்துடுறோம்
மஞ்சா:
குக்கு நீ நல்லா கதை சொல்லுவியாமே எங்க இப்ப ஒரு கதை சொல்லு கேப்போம்…
குக்கு:
சரி எல்லாரும் கேக்குறீங்க அதுனால சொல்லுறேன்… மஞ்சா, பிம்பா கதைய கேட்டுக்கிட்டே
நீங்களும் பழம் சாப்புடுங்க… இந்த கதை என்னோட சொந்த கதை இல்ல, எங்க அம்மா சொன்னது,
எனக்கு இது ரொம்ப புடிச்ச கதை…
யம்மு
பாட்டி: சொல்லு, குக்கு பாரு மஞ்சாவும், பிம்பாவும் ஒன் கதைய கேக்குறதுக்கு எவ்வளவு ஆர்வமா
இருக்காங்கன்னு…
குக்கு:
ஊம்… ஒரு ஊர்ல நீரான்னு ஒரு குட்டி பாப்பா இருந்தாளாம்… அம்மா, அப்பா அவளை தெனமும்
காலேல ஆத்துக்குக் குளிக்க கூட்டிக்கிட்டு போவாங்களாம், ஆத்துல அம்மா, அப்பா, நீரா
மூணு பேரும் மணிக்கணக்குல நீச்சலடிப்பாங்களாம், முங்கி, முங்கி குளிப்பாங்களாம்… ஒரு
நாளு அவளுக்கு ஒரு குட்டி மீன் ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம், அது பேரு லாலியாம். லாலி பக்கத்துல
பக்கத்துல வந்து நீந்துச்சாம், துள்ளி துள்ளி குதிச்சுச்சாம், நீராவுக்கு ஒரே சந்தோசமாம்,
அடுத்த நாளு அவளுக்கு டாலின்னு ஒரு ஆமக்குட்டி ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம். நீராவுக்கு ஃப்ரெண்டா
இருந்ததுனால அந்த லாலியும், டாலியும் அவங்களும் ஒருத்தருக்கொருத்தர் ஃப்ரெண்டா ஆகிட்டாங்களாம்...
அடுத்து லில்லின்னு ஒரு தவளையும் அவங்களுக்கு ஃப்ரெண்ட் ஆயிடுச்சாம்… ஒரு நாள் அந்த
குட்டி மீன் லாலி காணாமப்போயிடுச்சாம் நீராவுக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம்…
(தொடரும்)
No comments:
Post a Comment