அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்துல தாய்வழி சமூகத்துல கொழந்தையோட அம்மா யாருங்குறத மட்டும் தான் உறுதிப்படுத்தமுடிஞ்சுச்சு. அப்பா யாருங்குறது தெளிவா தெரியல. தாய் வழி சமூகத்துல கணவனிடமிருந்து மனைவியும் எதையும் எடுத்துக்கல, அப்பாவிடமிருந்து குழந்தைகளும் எதுவும் எடுத்துக்கல. அப்பாவோட சொத்துக்களுக்கு அவரோட சகோதரிகளோட குழந்தைகள் தான் வாரிசாகுறாங்க. தனியுடைமைச் சொத்துக்கள் அதிகமான பெறகுதான் தாய்வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமா மாறிடுச்சு. தன்னோட சொத்து தனக்கு பிறந்த புள்ளைகளுக்கு மட்டுமே போகனும்னா தனக்கு பிள்ளை பெத்த ஒருத்தி இன்னொருத்தனுக்கு பிள்ளை பெக்க அனுமதிக்கவேக்கூடாது, அதை தடைசெய்யனும். ஒருத்தி ஒருத்தனுக்கு மட்டும் தான் பிள்ளை பெத்துக்கனும் என்பதை உறுதிசெய்யுறதுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறை. தனிச்சொத்துடைமையைக் கட்டிக் காக்குறதுக்காக உருவானது தான் தந்தைவழிச்சமூகம். தனிச்சொத்துடைமையைக் கட்டிக் காக்குறதுக்காகத் தான் ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறையில மனைவியும் கணவோட தனிச்சொத்தா மாத்தப்படுறா. தனிச்சொத்துடையைக் கட்டிக் காக்குறதுக்காகத் தான் கணவனோட தனிச்சொத்தான மனைவி மேல கற்பு என்ற கற்பிதமும் திணிக்கப்படுது. ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தார மணமுறை உருவாகுறதுக்கு முன்னாடி ஆண்கள், பெண்கள் எல்லாருக்குமே பலதாரங்கள் இருக்குறது தான் வழக்கமா இருந்துருக்கு. அப்ப எந்த நுண்ணோக்கி வெச்சு பாத்தாலும் “கற்பு” என்ற “அற்புதத்தை” கண்டேபுடிக்கவேமுடியல. அய்யய்யோ, இதை நான் எப்படி சொல்வேன், என் நெஞ்சே வெடிச்சுறும் போலருக்கே, என் மானம், மரியாதை, குடும்ப கௌரவம், அந்தஸ்து எல்லாம் கப்பலேறிடுச்சே, என் பொண்டாட்டி இன்னொருத்தனோட இருந்ததுனால தூய்மை இழந்துட்டாளே, கற்பை இழந்துட்டாளேன்னு ஒப்பாரி வெக்குற அளவுக்கு அப்ப இருந்த ஆண்கள். பத்தாம்பசலிகளாவும் இல்ல. ஏண்டி ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இன்னொருத்தன் கூட படுப்ப, ஒன்ன உயிரோட விட்டுவெக்கமாட்டேன்னு அவளை கொன்னுபோடுற அளவுக்கு அப்ப இருந்த ஆண்கள் கொலைகாரர்களாவும் இல்ல.
என்னோட சொத்து இன்னொருத்தனுக்கு பொறந்த புள்ளைக்கு
போகக்கூடாது, அதைத் தடுக்கனும்னா என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் புள்ளை பெத்துக்கொடுக்கனும்
அதுனால என் பொண்டாட்டி என்னோட அடிமையா என்னோட தனிச்சொத்தா மட்டும் தான் இருக்கனும்.
இதுக்காகத் தான் கற்பு என்ற கற்பிதத்த படுகேவலமா பெண்களொட யோனியில கொண்டுபோய் வெச்சுருக்கு
தந்தைவழியில வந்த ஆணாதிக்க சமூகம்.
(தொடரும்)
No comments:
Post a Comment