ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறை நடைமுறைக்கு வந்ததுலேருந்தே சொத்து தான் திருமணத்தை தீர்மானிக்கிற சக்தியா இருந்துவருதுன்னு சொல்லியிருந்தோம் இல்லையா. நம்ம காலத்துல நடக்குற திருமணங்கள்லேருந்து பழைய காலத்து மூல ஆதாரத்துக்கு போனதுனால இங்க விசயங்களை தலைகீழா சொல்லியிருக்குறோம். உண்மையா பாத்தா தனிசொத்துடைமையினால தான் ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறையே நடைமுறைக்கு வந்துச்சு. இங்க எது காரணமா இருக்கு? எது விளைவா இருக்கு? தனிச்சொத்துடைமை தான் காரணமா இருக்கு. ஒருத்திக்கு ஒருவன்குற ஒரு தாரமுறை அதன் விளைவா இருக்கு. தனிச்சொத்துடைமை எப்ப உருவாகுது. காட்டுமிராண்டி காலத்துல பொதுச்சொத்துடைமை தான் வழக்கமா இருந்துச்சு, எல்லா சொத்துக்களும் குலங்களுக்கு பொதுவா தான் இருந்துச்சு. நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துல தான் தனிச்சொத்துடைமை உருவாகுது. மனுசன் தனக்கு தேவையான உணவை தானே உற்பத்தி பண்ண ஆரம்பிச்ச பெறகு தான் தனிச்சொத்துடைமை உருவாகுது. விவசாயம் செய்யுற நிலவுடைமை சமூகங்கள்ல தான் தனிச்சொத்துடைமை வளர்ச்சியடையுது.
பொதுச் சொத்துடைமை இருக்குற வரைக்கும் ஆண்களும்,
பெண்களும் சமத்துவ நிலையில தான் இருந்துருக்காங்க. அதுக்கு பெறகு தனிச்சொத்துடைமை உருவாகும்
போது பெண்களின் மீதான ஆண்களின் ஒடுக்குமுறை தொடங்குது. சமூகத்துல வர்க்க ஒடுக்குமுறை
உருவாகுறதுக்கு முன்னாடியே பெண்களின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறை தோன்றிடுச்சு. இந்த
முரண்பாடுகள் வர்க்கப்பிரிவினையுள்ள விவசாய நிலவுடைமை சமூகத்துல கூர்மையடையுது. தனிச்சொத்துடைமையின்
வளர்ச்சியோட பெண்களின் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறையும் வளர்ச்சியடையுது. எதுனால இப்புடி
நடந்துச்சு? எதுனால பொதுச்சொத்துடைமையிலேருந்து தனிச்சொத்துடைமை உருவானுச்சு? உற்பத்திச்
சக்திகள் வளர்ச்சியடையாத காலத்துல சமூகத்துக்குத் தேவையானதை உற்பத்தி செய்யவேண்டிய
அவசியம் ஏற்படும் போது தனிச்சொத்துடைமை உருவாகுறது தவிர்க்க இயலாதது மட்டுமில்ல, உற்பத்திசக்திகளோட
வளர்ச்சிக்கு அது அவசியமானதாகவும் இருந்துருக்கு. ஏன்னா இன்னைக்கு இருக்குற மாதிரி
அப்போ டிராக்டர்கள் இல்லாததுனால பெரிய அளவுல விவசாயம் செய்யுறதுக்கு அன்னைக்கு வாய்ப்பே
இல்லாம இருந்துச்சு, அதுனால சிறு, சிறு அளவுல தான் விவசாயத்தையோ, மற்ற உற்பத்தியையோ
செய்யமுடிஞ்சுது, ஏன்னா அப்ப தொழிற்சாலைகளோ, எந்திரங்களோ கெடையாது இல்லையா. அந்த சிறிய
அளவிலான உற்பத்திமுறைகளுக்கு நிலங்கள் துண்டு துண்டுகளாக்கப்பட்டு விவசாயமும், கால்நடை
வளர்ப்பு உட்பட மத்த வேலைகளும் செய்யப்படும் போதுதான் பொதுச்சொத்துடைமை சிதைவடையுது.
தனிநபர்கள் கையில சொத்துக்கள் சேருது. தனிச்சொத்துடைமை உருவாகுது. தனிச்சொத்துடைமை
வளர வளர சுயநலமும் வளருது. தனக்குப் பின்னாடி அந்த சொத்துக்கள் யாரைச்சேரனும், தன்னோட
குலத்துக்கு சேரனுமா தன்னோட சொந்த குழந்தைகளுக்கு சேரனுமாங்குற வாரிசுரிமை கேள்விக்கு
அப்போ சுயநலம் மட்டும் தான் பதிலா வருது. தன்னோட சொத்துக்கள் தனக்கு மட்டுமே பொறந்த
கொழந்தைகளுக்கு மட்டும் தான் போய்ச்சேரனும்குற சுயநலத்தின் அடிப்படையில தான் இந்த ஒருத்திக்கு
ஒருவன்குற ஒரு தாரமுறை வழக்கமாக்கப்படுது.
(தொடரும்)
No comments:
Post a Comment