ஏற்கெனவே காதலிக்குறத அடிப்படை உரிமையாக்கனும்னு (Right to love) சொல்லியிருந்தேன். அதுலயே காதலுச்சவங்கள கல்யாணம் பண்ணிக்குற உரிமையும் வரனும்குற மாதிரி விரிஞ்ச அர்த்தத்துல தான் சொல்லியிருந்தேன். ஆனா அது பத்தாது. ஏன்னா காதலிக்குதுக்கு மட்டும் தான் உரிமை, காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உரிமை இல்லைனு அதை சாதிய உள்நோக்கங்களுக்காக தவறா நடைமுறைப்படுத்துறதுக்கு வாய்ப்புகள் இருக்குறதுனால காதலிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்குற உரிமையும் அடிப்படை உரிமையாக்கப்படனும் (Right to love marriage). காதலிக்குற உரிமை (Right to love), காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்குற உரிமை (Right to love marriage) இந்த ரெண்டுமே அடிப்படை உரிமைகளாக்கப்படனும். இந்தியாவுல காதலிக்குறதுக்கு ஏத்த சூழ்நிலையே இல்ல. நெலைமை இங்க எப்புடி இருக்கு? புள்ளைங்க ரொம்ப பாவம். அப்பா, அம்மாவுக்கு தெரியாம, சொந்தக்காரங்களுக்குத் தெரியாம பயந்து பயந்து, ஒளிஞ்சு, மறைஞ்சு தான் காதலிக்குறாங்க. அவங்களால சுதந்திரமா காதலிக்கமுடியல. எல்லாரும் காதலிக்குறத கொலைக்குற்றம் மாதிரி பாக்குறாங்க. இந்த நெலைமையை மாத்துங்க. காதலிக்குறது மனுசனோட நியாயமான வாழ்வுரிமை. புள்ளைங்க வெளிப்படையா ஒளிவு மறைவில்லாம காதலிக்க அனுமதிங்க. மத்த நாட்டு சினிமாவுல எல்லாம் காதல்ங்குறது அந்த படத்தோட கதையில் ஒரு பகுதியா மட்டும் தான் இருக்கும். ஆனா பாருங்க நம்ம நாட்டுல மட்டும் தான் காதலிக்குறது மட்டுமே படத்தோட கதையா இருக்கு. இந்த மாதிரி எத்தன ஆயிரம் படம் எடுத்தாலும் இங்க ஓடுது. இந்த அரைச்ச மாவையே அரைச்சு இத்துப்போன ஒரே காதல் கதையையே எத்தனை வாட்டி சினிமாவாக்குனாலும் இந்தியாவுல அதுக்கு சந்தை இருக்குதுன்னா அதுக்கு என்னங்க அர்த்தம். நெஜ வாழ்க்கையில காதலிக்குறது புள்ளைங்களுக்கு கஷ்டமா இருக்குறதுனால தான், காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்குறது அதவிட கஷ்டமா இருக்குறதுனால தான் இந்த ஊசிப்போன காதல் படங்களுக்கு இந்தியாவுல கிராக்கி இருக்கு. இந்தியாவுல காதலிக்குறது இயல்பான விசயமா மாறுன பெறகு தான் ஒங்களால திணுசு திணுசா நல்ல திரைக்கதை உள்ள படங்கள எல்லாம் பாக்கமுடியும். இன்னொரு விசயம். மத்த நாட்டு படங்கள்ல பாட்டே இருக்காது. சினிமா தனியா வரும், பாட்டுக்கள் ஆல்பமா தனியா வரும். இந்தியாவுல தான் படத்துக்குள்ளே பாட்டும் வரும். அந்த பாட்டும் சும்மா வராது. அதுல பெரும்பாலும் காதலர்கள் டூயட் பாடி ஆடுற மாதிரி தான் வரும். ஆனா மத்த நாடுகள்ல வெளிவருற ஆல்பங்கள்ல கூட இங்க இருக்குற மாதிரி ஆணும், பெண்ணும் மாத்தி மாத்தி சேர்ந்து பாடி ஆடுற வடிவில இருக்குற பாடல்களைத் தேடித்தான் கண்டுபிடிக்குற மாதிரி இருக்கும். ஏன் இவ்வளவு வித்தியாசம் ஏன் நம்ம நாட்டுல மட்டும் இப்புடி இருக்குன்னு யோசிச்சுப் பாத்திங்களா. மத்த நாடுகள்ல காதலிக்குறது சர்வ சாதாரணமான விசயம். அங்க காதலிக்குறவங்க, காதலிக்காதவங்க யாரு வேணாலும் சேர்ந்து ஆடுறதுக்கு சுதந்திரம் இருக்கு. அங்க காதலிக்குறதுக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் இருக்கு. ஆனா இந்தியாவுல சினிமாவுல மட்டும் தான் காதலை ஏத்துக்குறாங்க. சினிமா காதல்னா இனிக்குது, நெஜக் காதல்னா கசக்குது. இந்தியாவுல எல்லா எடத்துலயும் காதலுக்கு தடா, பொடா போடுறதுனால தான் இங்க காதல் தியேட்டர், டிவி, கம்ப்யூட்டர், மொபைல் ஸ்கிரீன்ல தஞ்சம் அடைஞ்சிருக்கு.
(தொடரும்)
No comments:
Post a Comment