குக்கு: மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது, ஆனா எங்க அம்மாவும், அப்பாவும் அப்புடி கெடையாது, அவங்க எப்பவுமே சமத்துவமா, சரிசமமா இருக்குற காதலர்களா தான் இருக்குறாங்க…, சரி நீ எனக்கு ஒன் கதைய சொல்லு…
குண்டு
கரிச்சான்: மரக்கெளையில
ஒக்காந்துக்குட்டு இனிக்க இனிக்க பாடுறது தான் எனக்கு ரொம்ப புடிக்கும், அதுக்கு என்
காதலி எசப்பாட்டு பாடுவா… தரையில தத்தி தத்தி திரியுறதும் எனக்கு ரொம்ப புடிக்கும்,
அப்புறம் பூச்சிகள், புழுக்களை நான் ரொம்ப விரும்பி சாப்புடுவேன்… எப்பயாச்சும் தோணுச்சுன்னா
பூவுல தேன் குடிப்பேன், பழங்கள் சாப்புடுவேன்… பாரு நாங்க பசங்க எல்லாம் மேல கரு கருன்னு
இருப்போம், அடியில வெள்ளையா இருப்போம், பொண்ணுங்க மேல கருஞ்சாம்பல் நெறத்துல இருக்குங்க,
அடியில வெண்சாம்பல் நெறத்துல இறக்குங்க, எங்க எல்லாருக்குமே தோள் பட்டையிலேருந்து ரெக்கை
நுனி வரைக்கும் வெள்ளை நெற பட்டை இருக்குது பாத்தியா… ஐரோப்பாவுல உள்ள ராபினை விட எங்களுக்கு
வாலு நீளம், நாங்க வடகிழக்கு ஆசியா, இந்தியாவுல அதிகமா இருக்குறோம். ஆனா பங்களாதேசத்துல
தான் எங்கள தேசியப் பறவையாக்கி கௌரவப் படுத்திருக்காங்க. எங்களால மத்த பறவைகள் மாதிரியும்
கத்த முடியும், பாட முடியும்… எனக்கு ரொம்ப நேரமாச்சு நான் இன்னொரு நாள் வந்து பேசவா…
குக்கு:
ஏன் ஏதாவது முக்கியமான
வேலை இருக்கா?
குண்டு
கரிச்சான்: ஆமா ரொம்ப முக்கியமான
வேலை என் காதலி எனக்காக காத்துக்கிட்டு இருப்பா… நாங்க கூடு கட்டனும்… அவ கூடு கட்டுவா,
நான் அதை காவல் காப்பேன்… மரப்பொந்துல தான் கூடு கட்டப் போறோம், மேல புல்லு, இலை தளை
எல்லாம் போட்டு, ஜம் ஜம்முன்னு மெத்தையாக்கிடுவோம்… அப்புறம் அதுல தினமும் நீல நிற
முட்டை போடுவா, அதுல செம்புள்ளிகள் இருக்கும்… ஆறு முட்டை போட்டதும் அடைகாப்பா, நான்
அவளுக்கு பாதுகாப்பா இருப்பேன்… அப்புறம் குஞ்சுகள் பொறிஞ்சதும்… நாங்க ரெண்டு பேரும்
புழு பூச்சிகளை ஊட்டி ஊட்டி குஞ்சுகளை செல்லமா வளப்போம், குஞ்சுகளுக்கு பறக்க கத்துக்குடுப்போம்…
குக்கு: இவ்ளோ வேலை இருக்கா, அய்யய்யோ எனக்கு தெரியாமப்
போச்சே… இனிமே தொந்தரவு பண்ணமாட்டேன்… நீ பத்துரமா போயிட்டு வா… நானே வந்து ஒன்னைய
அப்பப்ப பாத்துக்குறேன்….
குண்டு
கரிச்சான்: மனுசங்க மாதிரி
மொக்கையா பாடாம என்ன மாதிரி இனிமையா பாட ஒனக்கு வாழ்த்துக்கள், எனக்கு நேரம் கெடைக்கும்
போது நானே வந்து ஒன்னைய பாக்குறேன் சரியா, வரட்டுமா
பாட்டு பாடிக்கிட்டே பறந்து போயிட்டான் குண்டு
கரிச்சான்…
குக்கு:
பரவால்லயே, இவ்ளோ நேரம்
என்னைய தேடாம இருந்துருக்கீங்க…
குக்குவோட
அப்பா: நீ குண்டு கரிச்சானோட
பேசிக்கிட்டு இருந்தத நான் மொதலயே பாத்துட்டேன், நீ தான் சத்தம் போட்டு கூப்புடக்கூடாதுன்னு
சொல்லியிருக்கியா… விசிலடிச்சு கூப்புட்டாலும் எங்க அது பறந்துபோயிடுமோன்னு தான் பேசாம
இருந்துட்டேன்…
(தொடரும்)
No comments:
Post a Comment