உள்நாட்டு
வர்த்தகத்தோட தேவையின் அடிப்படையில பணம் உருவாகுறதப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு
இப்போ கேப்போம்.
3. உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாக பணத்தின் தோற்றம்:
“உள்நாட்டுல தயாரிக்கப்படுறதுனாலேயே ஒரு பொருளோட அளவை வரம்பில்லாம
அதிகரிக்கமுடியுமுன்னு கருதவேண்டியதில்லை. பெரும்பாலும் அதுக்கான நடைமுறை வரம்புகள்
இருக்கும். அதோட வரத்து போதாக்குறையா இருக்கலாம், அல்லது அதை கிடைக்க வெக்கிறதுல சிரமம்
இருக்கலாம், அதோட உற்பத்திக்கான செலவும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான காரணியா மாறலாம்.
ஆதிப்பணத்தோட அளவு அதிகரிக்கிறதுனால அதன் மதிப்பு குறையும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
மேல அதை உற்பத்தி செய்யுறது லாபகரமா இருக்காது. அல்லது பொருட்களோட விலைகள் கிராக்கி,
வரத்துக்கு ஏற்ப மாறாம சமூகத்தால கறாரா நிர்ணயிக்கப்பட்டுருக்கும் போது, ஆதிப்பணம்
வெச்சுருக்கவங்களால விற்பனைக்கான பணமல்லாத பொருட்கள் உள்வாங்கப்பட்ட பெறகு ,பண வரத்துல
கூடுதலா சேருறது மதிப்பில்லாம போயிடும்.
பல நிகழ்வுகள்ல ஆதிப்பணம் முழுக்க முழுக்க உள்நாட்டுத்
தன்மையைக் கொண்டதா இருந்துருக்கு. உகாண்டாவுல உள்ள அங்கோலின் முக்கிய பணமான கால்நடைகள், அவங்களோட பழங்குடி சமூகத்துக்குள்ள
மட்டும் தான் புழக்கத்துல இருக்க முடியும். தீவிரமான ஒரு அவசரநிலை வந்தாலொழிய கால்நடைகளை அவுங்க சமூகத்தை விட்டு வெளியேத்த
அனுமதி இல்ல. முக்கியமான ஆதிப் பணமா கால்நடைகள் இருக்குற கிழக்கு ஆஃப்ரிக்கா முழுக்கவும்,
தென்னாப்பிரிக்காவிலும் ஏறக்குறைய இதே நடைமுறை
காணப்பட்டுருக்கு.. உள்நாட்டு வர்த்தகத்துல பயன்படுத்துறதுக்கு முன்னாடி பண்டமாற்று
ஊடகமாக இருந்ததால கால்நடைகள் இந்த பாத்திரத்தை எடுத்துச்சா இல்ல மதம் சார்ந்த கட்டணங்களுக்காகவோ,
அரசியல் சார்ந்த கட்டணங்களுக்காகவோ, மணமகள் பணத்திற்காகவோ பயன்படுத்தப்பட்டதுனால ஆதிப்பணமா
உருவானுச்சா என்பது கேள்விக்குரியது தான்.
ஏற்றுமதிக்கான எந்த தேவையினாலயும் உருவாகாம, உள்நாட்டு
வர்த்தகத்தோட தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்ட, ஆதிப்பணங்களுக்கான (Currency) அறியப்பட்ட
எடுத்துக்காட்டுகளா ஸ்பார்டாவின் இரும்பு பணமும்
பண்டைய இத்தாலி, சிசிலி மற்றும் ஆரம்பகால ரோமினுடைய கழிப்பு செப்பு பணமும் இருந்துருக்கு.
அழியக்கூடிய தன்மை அதகமுள்ள வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் (நவீன காலம் வரை ஏற்றுமதி
செய்யப்படவில்லை), முட்டை, பாலாடைக்கட்டி போன்றவை பல்வேறு சமூகங்கள்ல பரிமாற்ற ஊடகமாக
செயல்பட்டுருக்கு. அழிந்துபோகக்கூடிய அவற்றின் பணப் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ள
செயல்பட்டுருக்கு. கடைசியா, ஆபரணங்களாக பயன்படுத்தப்படும் பல உள்நாட்டுல தயாரிக்கப்பட்ட
பொருட்கள் ஒரு பரிமாற்ற ஊடகமா, இருந்தாலும் கூட, ஆபரணங்கள தேர்வு செய்யுறதுக்கான ரசனையில
உள்ள வேறுபாடு காரணமா அவை ஏற்றுமதி செய்யப்படலை.
மேலே சொன்னதுலேருந்து,
ஏற்றுமதிக்கு சுத்தமா எந்த தேவையும் இல்லாத போதும் கூட உள்நாட்டுல உற்பத்தி செய்யப்படும்
ஒரு பொருள் பணநோக்கங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது விகிதாச்சார அளவுல எந்த வகையிலும்
புறக்கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதாகத்தான் தெரியுது. அதுனால உள்நாட்டுல உற்பத்தி
செய்யப்படும் பொருள் ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தால் மட்டுமே அது பணமாக மாறும்
என்று கூறுவது தவறானது.”
(தொடரும்)
No comments:
Post a Comment