Saturday, September 28, 2024

சூதாடும் காட்டேரி (134):


கடைசியா 1991 ஜனவரி 4ல தான் இந்தியாவுலேருந்து போன பயணக்குழுவுவால செண்டினல் பழங்குடிகளோட ஓரளவுக்கு சுமுகமான தொடர்பு ஏற்படுத்த முடிஞ்சுச்சு. அந்த பயணக்குழுவுல மதுமாலா சட்டோபாத்யாயா என்ற பெண் மானுடவியலாளரும் போயிருந்தாங்க. பயணக்குழு தேங்காய்களை தண்ணீல போட்டுருக்கு, செண்டினல் பழங்குடிகள் அத எடுத்துக்கிட்டாங்க. படகுல கொண்டுபோன தேங்காய் எல்லாம் முடிஞ்சதும் கப்பலுக்கு போய் தேங்காய்கள எடுத்துக்கிட்டு அடுத்த சுத்து வந்துருக்காங்க. அப்போ மதுமாலா சட்டோபாத்யாயா மேல குறிவெச்சு ஒரு செண்டினலி ஆண் அம்பு விடப்பாத்தாரு, ஆனா ஒரு செண்டினலி பெண் அவரைத் தடுத்துட்டாங்க. மூணாவது சுத்துல பயணக் குழுவினர் படகுல இருந்து குதித்து கழுத்தளவு தண்ணீல நின்னு, தேங்காய்களையும், மத்த பரிசு பொருட்களை கொடுத்துருக்காங்க. 1991 ஃபிப்ரவரி 21ல திரும்பவும் ஒரு பயணக்குழு செண்டினலி தீவுகளுக்கு தேங்காய்களோட போனப்போ அதப் பாத்துட்டு செண்டினலிகள் ஆயுதம் இல்லாமலே அவங்க கிட்ட போயிருக்காங்க

அதுக்கு பெறகு 1997ல இந்திய அரசும் சென்டினல் மக்களை சந்திக்கும் முயற்சியை கைவிட்டதோட அங்க போறதுக்கு சட்டபடி தடையும் விதிச்சுருச்சு. வெளியுலக தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி செண்டினலி பழங்குடியினருக்கு இல்லாததால, பயணிகளால தொற்று ஏற்பட்டு அந்த இனமே அழிஞ்சுபோற ஆபத்து இருக்குறதுனாலயும், பயணிகளோட பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுச்சு.

2004-ல சுனாமி வந்தப்போ பழங்குடிகளுக்கே உரிய கூர்மையான புலனுணர்வால பேரிடர் வரப்போறத முன்னுணர்ந்த செண்டினலிகள் உயரமான எடத்துக்குப் போய் தங்கள பாதுகாத்துக்கிட்டாங்க.  பேரிடர் மேற்பார்வைக்காக இந்திய அரசு ஒரு ஹெலிகாப்டர இந்த தீவுக்கு அனுப்பி வெச்சுச்சு. அந்த ஹெலிகாப்டரை தரை எறங்கவே விடாமல் சென்டினல் பழிங்குடிகள் அம்புகளை தொடுத்து தொரத்தி அடுச்சிட்டாங்க.

2006ல தவறுதலா அந்த தீவுல கரையொதுங்குன படகுல இருந்த ரெண்டு மீனவர்கள் செண்டினல்கள் தாக்குதலால இறந்துட்டாங்க.

“மிஷனரிகள் ஆஃப்ரிக்காவுக்கு வந்தப்ப, ​​அவங்க கிட்ட பைபிள் இருந்துச்சு, எங்ககிட்ட நெலம் இருந்துச்சு. பிரார்த்தனை செய்வோம்னு சொன்னாங்க… . கண்ணை மூடிக்கிட்டோம். கண்ணைத் தொறந்து பாக்கும்போது, ​​​​எங்ககிட்ட பைபிள் இருந்துச்சு, அவங்ககிட்ட நெலம் இருந்துச்சுன்னு” தென்னாஃப்ரிக்க பிஷப்பும் மனித உரிமை ஆர்வலருமான டெஸ்மண்ட் டுட்டு சொல்லியிருந்தாரு இல்லையா. அதுக்கு வடக்கு செண்டினல் தீவும் விதிவிலக்கு கெடையாது.

2018ல செண்டினலி மக்களை கிறிஸ்தவர்களாக்கி சாத்தானிடமிருந்து விடுவிக்கப்போறேன்னு கெளம்பிய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் அலென் சா மீனவர்களுக்கு 25000 ரூபாய் லஞ்சம் கொடுத்து பைபிளோட செண்டினலி தீவுக்குப் போயிருந்தாரு. செண்டினலி பழங்குடி மக்கள் அவரை சாத்தான் கிட்டயே அனுப்பிவெச்சுட்டாங்க. 

அதுக்கப்புறம் செண்டினல் பழங்குடி மக்கள் ரொம்ப ஆபத்தானவங்க, கொடூரமானவங்க நர மாமிசம் திங்கிறவங்க அது, இதுன்னு சில ஊடகங்கள் இஷ்டத்துக்கு கதையக் கட்ட ஆரம்பிச்சுடுச்சு.

மானுடவியலாளர் திரிலோக் நாத் பண்டிட் செண்டினலிகளை பத்தி என்ன தெரியுமா சொல்லியிருந்தாரு "அவங்க அமைதியை விரும்புறவங்க தான் அவங்கள அச்சுருத்தக்கூடியவங்களா நெனக்கிறதுல நியாயமில்ல”

"எங்கள் தொடர்புகளின் போது அவங்க எங்களை அச்சுறுத்துனாங்க தான், ஆனா அது அவங்க எங்களை கொல்லுற அளவுக்கோ அல்லது காயப்படுத்துற அளவுக்கோ போகலை. அவங்க கிளர்ந்தெழுந்த போதெல்லாம் நாங்கள் பின்வாங்கினோம்"னும் அவர் சொல்லியிருந்தாரு.

"அவங்க நாகரிகம் இல்லாதவங்க கெடையாது. அவங்க நம்மள விட இயற்கையை நல்லா புரிஞ்சுவெச்சிருக்காங்க, மறந்துடாதீங்க, அவங்க சுனாமி வருதுன்னு தெரிஞ்சுகிட்டு, உயரமான இடங்களுக்குப் போயிட்டாங்க.. அவங்க அனிமிசத்தை பின்பற்றுறாங்க, நம்ம மாதிரி இல்லாம அவங்க இயற்கையை வணங்கி, நேசிக்கிறாங்க.”னு செண்டினலிகளை பத்தி மானுடவியலாளர் மதுமாலா சட்டோபாத்யாயா சொல்லியிருந்தாங்க.

(தொடரும்)

 


No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...