உள்வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறதப் பத்தி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு இப்போ கேப்போம்.
3. உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாக பணத்தின் தோற்றம்:
“வெளி வர்த்தகத்தின் மூலமா பணம் உருவாகுறதப் பத்தி பாக்கும் போது ஒரு சமூகத்தோட பிரதான தயாரிப்பு பொருளுக்கு ஏற்றுமதிக்கான நிலையான தேவை இல்லாதவரை அது பணமா (currency) செயல்பட முடியாதுன்னு சொல்லுற கோட்பாட்டை பாத்திருந்தோம். அப்படியிருக்கனும்னு அவசியம் இல்லை . ஏன்னா பணமாகுமா என்கிற கேள்விக்குரிய தயாரிப்புப் பொருள் ஒரு முக்கிய நுகர்வுப் பொருளா இருந்தால், அப்படி இருக்க வேண்டியதில்லை. சமூகத்துல அந்த மாதிரியான பொருட்களுக்கு எப்பவுமே வலுவான கிராக்கி இருக்கும். அந்த பொருளுக்கு இருக்குற கிராக்கியே அந்த பொருளை எல்லா வகையான பொருட்கள் சேவைகளுக்கான கட்டணமாக பொதுவாக ஏற்றுக்கொள்ளும் தன்மையை பாதுகாக்க போதுமானதாக இருக்கக்கூடும். அதுனால கோதுமை வளர்கிற சமூகங்கள்ல கோதுமை நுகர்வுப் பொருளாக இருக்கு, இந்த காரணத்தாலேயே பெரும்பாலும் அது ஆதிப் பணத்தின் செயல்பாடுகளை எடுத்துக்குது. பொருளை விற்க வேண்டியவங்க தங்களுக்குத் தேவையானதை விட அதிகமான கோதுமையைக் கூட கட்டணமா ஏத்துக்குவாங்க. ஏன்னா அவங்க பொருளை வாங்கும் போது கோதுமையை கட்டணமா ஏத்துக்குற ஒருவரைக் கண்டுபிடிக்கிறதுல சிரமம் இருக்காது என்பது அவங்களுக்குத் தெரியும். முக்கிய நுகர்வுப் பொருளாக அரிசு இருக்கும் சமூகங்களுக்கும், நிலத்துல வெளைஞ்ச மத்த பொருட்களுக்கும் இது பொருந்தும்.
விலங்குகள், விலங்குகள்லேருந்து கிடைச்ச பொருட்கள், ஆடைகள், கருவிகள், பாத்திரங்கள் ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றோட முறையான உள்நாட்டு நுகர்வு இந்த பொருள்களை உள்ளூர் பணங்களாகத் தேர்ந்தெடுப்பதற்கான பொருத்தமான அடிப்படையை உருவாக்கலாம். உள்நாட்டு நுகர்வு எந்த அளவிற்கு உள்நாட்டு உற்பத்தியை உள் வாங்கும் திறன் கொண்டதா இருக்கு என்ற கேள்வியைக் கருத்தில் கொள்வதும் அவசியம். எல்லா உற்பத்தியையும் உள்நாட்டிலேயே உள்வாங்க முடியாவிட்டால், தேவையற்ற உபரி அதிகமாறதன் காரணமாக, பணமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் மதிப்பிழப்பு அடையும் ஆபத்து எப்போதுமே இருக்கும் என்று பொதுவாக வாதிடப்படுது. உண்மையில, ஆதி சமூகங்கள் இந்த மாதிரியான உபரிகளை உள்வாங்குறதுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைக் கொண்டதா தான் இருந்துருக்கு. அவங்களோட பலி கொடுக்குறதுக்கான தேவைகளினாலயும் அல்லது அதிகாரம் படைச்ச பழங்குடியினர் பெரிய பங்குகளை சேர்த்துவைப்பதன் மூலமும் அல்லது தனி நபர்கள் அந்த பொருளை சேமிக்குறதுக்கான ஊடகமாகப் பயன்படுத்துறதன் மூலமும் ஓரளவு உள்வாங்கப்படலாம். பெருமளவிலானவை பொதுவா பண்டிகைகளின் போது தீர்ந்துபோயிடும் அல்லது நுகரப்படும், அல்லது இறந்தவர்களுடன் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும். அழிந்துபோகக்கூடிய பொருட்களின் வரம்பில்லா அதிகரிப்பை இயற்கையே தடுத்துறது. உடைகள், பாத்திரங்கள் போன்றவை தேய்மானம் அடைவதுனாலயும், உடைகள் கிழிவதானலும் அதிக விரயம் ஏற்படுது. அதிக அளவுல ஆதிப் பணம் பாதுகாப்பா வைக்கிறதுக்காக புதைக்கப்படுது, அது ஒருபோதும் கண்டுபிடிக்கப்படுறதுல்ல. இன்னொரு பக்கம், நிச்சயமா பெரிய அளவுல அந்த பணப் பொருளை பயன்படுத்த முடியும் என்ற காரணமே அதோட உற்பத்தியை அதிகப்படுத்திருக்கும் என்பதையும் மனசுல வெக்கனும். அந்த அதிகரிப்பு சமூகத்தின் உள்வாங்கும் திறனை விட அதிக விகிதாச்சாரத்தையும் எடுத்துருக்கலாம்.”
(தொடரும்)
No comments:
Post a Comment