பிரிட்டிஷ்
காலனியாதிக்க காலத்துலேருந்து சமீப காலம் வரைக்கும் கடற்படை
அதிகாரிங்க, மானுடவியலாளர்கள், போலீஸ்காரங்க,
அரசியல்வாதிகள், நிர்வாகிகள்னு
இந்திய அரசு தரப்பு ஆளுங்க செண்டினலிகளோட தொடர்பையும், நட்புறவையும் ஏற்படுத்தி
மோசடி செய்ய பல முறை முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா எதுவுமே வெற்றி பெறல.
1967ல இந்தியாவோட பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மண்டலத் தலைவராக இருந்த மானுடவியலாளர் திரிலோக்
நாத் பண்டிட் தலைமையில 20 பேரைக் கொண்ட ஒரு பயணக்குழு வடக்கு சென்டினல் தீவுக்குப் போனுச்சு.
அவங்கள பாத்த செண்டினலிகள் காட்டுக்குள போய் ஒளிஞ்சுக்கிட்டாங்க. கடற்கரையை
யொட்டிய பகுதில
ஒரு இடத்துல
புல்லால் வேயப்பட்ட
குடிசை இருந்ததையும்,
சுடப்பட்ட மீன்
துண்டுகள், பழங்கள்,
வில், அம்புகள்
கிடந்ததையும் பார்த்துருக்காங்க.
யாரோடவும் தொடர்பு கொள்ள முடியாமலேயே
கரையிலயே பல பரிசுப் பொருட்களை போட்டுட்டு வந்துருக்காங்க.
1970ல
மறுபடியும் போனப்ப செண்டினலிகள் ஆயுதங்களை கீழ போட்டுட்டு மீனை எறியும்படி சைகை
காட்டிருக்காங்க. செண்டினலி பொண்ணுங்க வேடிக்கை பாத்துருக்காங்க. ஆண்கள் மீனை
எடுத்துட்டு போயுருக்காங்க. இருந்தாலும் அவங்க விரோதப்போக்கை விடல. கோபத்தோட, கடுமையான முகத்தோட வில், அம்பு ஆயுதம்
ஏந்தி தங்களோட நிலத்தை பாதுகாக்க தயாரா இருந்துருக்காங்க.
செண்டிலிகளோட நடத்தை, பாசையை புரிஞ்சுக்க உதவுறதுக்காக
மூணு ஓங்கே பழங்குடியினரையும் அழைச்சுட்டுப் போயிருக்காங்க. ஆனா அவுங்களுக்கும் செண்டினலி
பாசை புரியல. தீவுக்குள்ள போகமுடியாத போதும் நல்லுறவை உருவாக்குற முயற்சில பயணக்குழு பரிசுகளை கரையில விட்டுட்டுப் போயிருக்காங்க. பானைகள், பெரிய தேங்காய்கள், சுத்தியல் மாதிரியான இரும்புக் கருவிகள், நீண்ட கத்திகள், ஆடைகள்,
முகம் பார்க்கும் கண்ணாடிகளோட
உயிருள்ள
பன்னியையும் விட்டுட்டு
வந்துருக்காங்க. இவங்க கொண்டு போன பன்னியை
செண்டினலிகள் ஈட்டியால கொன்னு மணலுக்குள்ள பொதைச்சுட்டாங்க.
1974ல
ஆங்கில தொலைக்காட்சி,
நேஷனல் ஜியோகிராபிக்,
சார்பா சென்டினலிகளை
பத்தி "மேன், இன் சர்ச் ஆஃப் மேன்"னு ஒரு ஆவணப்படம்
எடுப்பதுக்காக ஆயுதம்
தாங்கிய போலீஸ்படையோட
படக் குழுவினர் மோட்டார்
படகுல செண்டினல் தீவுக்குப் போயிருக்காங்க.
கரையை அடைஞ்சதும்
அவங்க ஒரு
பன்றி, அலுமினிய
பாத்திரம், பொம்மை,
பொம்மை கார்,
தேங்காய் இதையெல்லாம் வெச்சுட்டு
காத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இதையெல்லாம் பாத்த செண்டினலிகள்
தூரத்துல இருந்தபடியே அம்பால
தாக்கியிருக்காங்க. ஆவணப்பட
இயக்குனரின் தொடையில்
ஒரு அம்பு
பாய்ஞ்சுருச்சு. பயந்து போன படக்
குழுவினர் படமும் வேணாம் ஒன்னும்
வேணாம்னு தப்புச்சோம், பொழைச்சோம்னு வந்த
வழியே திரும்பிட்டாங்க.
செண்டினலிகள் அவங்க கொண்டு வந்த பன்னியையும்
பொம்மையையும் ஈட்டியால் குத்திப்போட்டுட்டு, தேங்காய் அலுமினிய சமையல் பாத்திரங்களை
மட்டும் எடுத்துக்குட்டுப் போயிருக்காங்க.
(தொடரும்)
No comments:
Post a Comment