விசப் பாம்பு புறா மாதிரி வேசம் போட்டா சமாதான புறா ஆயிடுமா… ஆகாதுல்ல, அதே மாதிரி தான் பாஜக என்ன தான் ஜனநாயக வேசம் போட்டு நடிச்சாலும் அத ஆர்.எஸ்.எஸ்ஸோட பி டீமா கூட காட்டி ஏமாத்தமுடியாது, ஏன்னா இப்ப பாஜக தான் ஆர்.எஸ்.எஸ்ஸோட கோர் டீமா இருந்து நாசவேலை செய்யுது. இப்ப மோடியோட குருஜி கோல்வால்கர் சொல்றத தொடர்ந்து கேப்போம்:
“இப்போது நாம் இந்த விஞ்ஞானக்
கருத்தின் வெளிச்சத்தில் நமது தேசியத்தைப் புரிந்துகொள்வோம். இதோ நமது பரந்த நாடு,
ஹிந்துஸ்தான், ஹிந்துக்களின் தேசம், அவர்களின் தாய்நாடு, வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்திலிருந்தே இந்த நாட்டில் வாழ்கிறது, பழங்கால இனம் - ஹிந்து இனம், பொதுவான
மரபுகளால், பொதுவான, புகழின் நினைவுகளால், பேரழிவுகளால் ஒன்றுபட்டது. இதேபோன்று
வரலாற்று, அரசியல், சமூக, மத மற்றும் பிற அனுபவங்களால், ஒரே தாக்கங்களின் கீழ்,
ஒரு பொதுவான கலாச்சாரம், ஒரு பொதுவான தாய் மொழி, பொதுவான பழக்கவழக்கங்கள், பொதுவான
நாட்டங்களின் கீழ் வாழ்ந்து பரிணாம வளர்ச்சிபெற்றுள்ளது. இந்த மகத்தான ஹிந்து
இனத்தின் புகழ்பெற்ற மதம் ஹிந்து மதம் என்று அழைக்கப்படுகிறது, உலகின் மிகவும் தகுதிவாய்ந்தது
என்று வகைப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரே மதம், அதன் பல்வேறு அம்சங்களில்
இன்னும் ஒரு ஒருங்கிசைவான முழுமையாய் உள்ளது, அனைத்து நிலைகளில், தரங்களில் உள்ள
உன்னத நாட்டங்களையும் திறமைகளையும், திறன்களையும் கொண்ட எல்லா மனிதர்களுக்கும்
உணவளிக்கும் திறன் கொண்டது. வாழ்க்கையின் உன்னதமான தத்துவத்தால் அதன் அனைத்து
செயல்பாடுகளிலும் செழுமைப்படுத்தப்பட்டு, தெய்வீக ஆன்மீக மேதைகளின் இடைவிடாத தொடர்ச்சியான
வாரிசுகளால் புனிதமானது, எந்த ஒரு விவேகமுள்ள மனிதனும் நியாயமாக பெருமைப்படக்கூடிய
ஒரு மதம். தனிமனிதன், சமூகம், அரசியல் என அனைத்து நிலைகளிலும் ஹிந்து மதத்தால்
வழிநடத்தப்பட்டு, ஹிந்து இனம் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியது, கடந்த பத்து
நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் மற்றும் ஐரோப்பியர்களின் தாழ்த்தப்பட்ட
"நாகரிகங்களுடன்" சீரழிந்த தொடர்பு இருந்தபோதிலும், இது இன்னும் உலகில்
உன்னதமான மதமாக உள்ளது. பழம் மரத்தின் மதிப்பை நிரூபிப்பது போல், மக்களின் பொது
மனது அதன் கலாச்சாரத்தின் மதிப்பை நிரூபிக்கிறது. பரந்து விரிந்த ஆன்மா, தாராள
மனப்பான்மை, சகிப்புத்தன்மை, உண்மை, தியாகம் மற்றும் அனைத்து உயிர்களின் மீதான
அன்பும், சராசரி ஹிந்து மனதைக் குறிக்கும், மேற்கத்திய தாக்கத்தால் முற்றிலும்
பாதிக்கப்படாமல் இருப்பது, ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவத்திற்கு சாட்சியாக
உள்ளது. அயல்நாட்டுச் செல்வாக்குகளால் மாசுபடுத்தப்பட்டாலும் கூட, உலகின் பிற
நாடுகளில் உள்ள சிறந்தவற்றுடன் ஒப்பிடும் போது சிறப்பாகவே உள்ளது. இந்த கலாச்சாரம்
மனிதனை கடவுளின் சித்திரத்திற்குப் ஈடாக உருவூட்டி குறிப்பிடத்தக்க வகையில்
சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல், கற்றல் துறையிலும் (கற்றல் மற்றும் அறிவை
வேறுபடுத்துகிறோம்) இனத்தின் அழியாத புகழுக்குமான, சிறந்த அறிவார்ந்த மேன்மக்களை
உருவாக்கியுள்ளது. நவீன அறிவியல் உலகின் மிகப் பெரிய அறிவாளிகளை உருவாக்கியுள்ளது.”
என்று குதிக்கிறாரு கோல்மால். மக்களோட வாழ்க்கைய கலாச்சாரத்தை, சமூக அரசியலை,
பொருளாதாரத்தை எல்லாத்தையுமே நேரடியாக ஹிந்து மத வெறியாகவும் மறைமுகமா சாதி
வெறியாகவும் குறுக்கல்வாதம் செய்யுற இந்த நச்சு புடிச்ச ஆர்.எஸ்.ஏஸ்-பாஜக விஷக்
களைகள் இந்தியாவுக்கு ரொம்ப ரொம்ப ஆபத்தானவை, பயங்கரமானவை, அதுகள உடனடியா
களையெடுக்கனும். அதுனால தான் சொல்றேன் இந்த
பாட்டி சொல்லைத் தட்டாதீக பாஜகவுக்கு ஓட்டு போடாதீக.
(தொடரும்)
No comments:
Post a Comment