Saturday, March 30, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (41):

 

மோடியோட குருஜி கோல்வால்கார் சொல்றாரு: ஹிந்து இனத்தைப் போல் வேறு எந்தவொரு இனமும் இத்தகைய உன்னதமான மற்றும் மிகவும் பயனுள்ள கலாச்சாரத்துடன் நிச்சயமாக இருந்ததில்லை. அத்தகைய கலாச்சாரத்தை உருவாக்கக்கூடிய ஒரு மதத்தை வழங்கும் உயர்ந்த அதிர்ஷ்டம் எந்த இனத்திற்கும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், இந்த தேசம் இத்தகைய மத மற்றும் கலாச்சார பரிசுகளைக் கொண்டுள்ளது. கடைசியாக, மொழி, சில சிரமங்களை முன்வைக்கிறது, ஏனெனில் இந்த நாட்டில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் சொந்த மொழி உள்ளது. மொழி ஒற்றுமை தேவை என்பது போல் தோன்றுகிறது, மொழி வேறுபாடுகளால் ஒன்றல்ல பல "தேசங்கள்" உள்ளன. ஆனால் உண்மையில் அது அப்படியல்ல. சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி மட்டுமே உள்ளது. மற்ற மொழிகள் வெறும் கிளைகள், தாய் மொழி சமஸ்கிருதத்தின் குழந்தைகள், கடவுளின் பேச்சுவழக்கு, இமயமலை முதல் தெற்கில் கடல் வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைவருக்கும் பொதுவானது, மேலும் அனைத்து நவீன சகோதரி மொழிகளும் அதன் வழியாகவே வந்துள்ளன.  அவ்வளவு இடைத்தொடர்பு உள்ளதால் அவை அனைத்துமே ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். எந்த மொழியுடனும் பழகுவதற்கு கொஞ்சம் உழைப்பு தேவை. மேலும் நவீன மொழிகளிலும் கூட ஹிந்தி என்பது பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்டு வெவ்வேறு மாகாணங்களில் உள்ளவர்களிடையே கருத்துப் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டின் பரந்த தன்மை பல்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு பேச்சுவழக்குகளைப் பிறப்பிக்கத் தேவையான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த உள்ளூர் மொழிகள் அனைத்தும் இயற்கையாகவே தங்கள் பெரிய பெற்றோரான சமஸ்கிருதத்தில் ஒன்றிணைந்து அடிப்படையில் ஒன்றாக உள்ளன என்று கூறுவதில் தயக்கம் இல்லை. தேசத்தின் ஐந்தாவது கூறு - மொழியின் இருப்பு குறித்து எந்த சந்தேகமும் இல்லை. தேசம் பற்றிய நவீன புரிதலை நமது தற்போதைய நிலைமைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம், இந்த நாட்டில், ஹிந்துஸ்தானில், ஹிந்து மதம், ஹிந்து கலாச்சாரம் மற்றும் ஹிந்து மொழி, (சமஸ்கிருதத்தின் இயற்கை குடும்பமும் அதன் வாரிசுகளும்) தேசக் கருத்தை நிறைவு செய்கிறது என்ற முடிவை சந்தேகத்திற்கு இடமின்றி நாம் வந்தடைகிறோம். ஹிந்துஸ்தானில், பண்டைய ஹிந்து தேசம் மட்டுமே இருக்க வேண்டும், ஹிந்து தேசத்தைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. தேசியம், அதாவது ஹிந்து இனம், ஹிந்து மதம், ஹிந்து கலாச்சாரம் மற்றும் ஹிந்து மொழிக்கு சொந்தமில்லாத அனைவரும், இயற்கையாகவே உண்மையான 'தேசிய' வாழ்க்கைக்கு வெளியே உள்ளனர்.

நாங்கள் மீண்டும் சொல்கிறோம்; ஹிந்துக்களின் நிலமான ஹிந்துஸ்தானில், நவீன உலகத்தின் அறிவியல் தேசக் கருத்தாக்கத்தின் ஐந்து அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஹிந்து தேசம் வாழ்கிறது, வாழ வேண்டும். இதன் விளைவாக, ஹிந்து தேசியத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், மீண்டும் உயிர்ப்பித்தல் மற்றும் அதன் தற்போதைய முட்டாள்தனமான ஹிந்துக் கருத்தாக்கத்திலிருந்து விடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ள அந்த இயக்கங்கள் மட்டுமே உண்மையான 'தேசியத்தன்மையுடையதாக உள்ளன. அவர்கள் மட்டுமே தேசியவாத தேசபக்தர்கள், ஹிந்து இனத்தையும் தேசத்தையும் தங்கள் இதயத்திற்கு நெருக்கமாக வைத்து அதை புகழடையச்செய்ய வேண்டும் என்ற நாட்டத்துடன், செயல்பாட்டில் தூண்டப்பட்டு அந்த இலக்கை அடைய பாடுபடுகிறார்கள். மற்ற அனைவரும் தேச துரோகிகள் மற்றும் தேசிய நோக்கத்திற்கு எதிரிகள், அல்லது, கொஞ்சம் தளர்ந்த  பார்வையில், அவர்கள் முட்டாள்கள்.”னு வையுறாரு கோல்மால்.

அதாவது ஹிந்து இனமா, ஹிந்து மதத்தையும், ஹிந்து கலாச்சரத்தையும் கடைபிடிச்சு, சமஸ்கிருதம் பேசுறவுக மட்டும் தான் ஹிந்துஸ்தான், ஹிந்துராஷ்டிராவின் குடிமக்களா இருக்கமுடியும், புத்த மதத்தவரோ, கிறிஸ்துவர்களோ, முஸ்லிம்களோ ஹிந்துஸ்தானின் குடிமக்களா இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது, அவுகள நாட்டை விட்டு வெளியேத்தனும் ஏன்னா ஹிந்தியாவுல ஹிந்துக்கள் மட்டும் தான் வாழனும். அதுனால ஹிந்துவெறி புடிச்சு ஹிந்துராஷ்டிராவ உருவாக்க நாச வேலை செய்யுற சங்கிகள் தான் தான் உண்மையான தேசபக்தர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களோட மண்டைய ஒடைக்குற சங்கி குண்டர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள், இவுகள நாட்டை விட்டு வேளியேத்துறதுக்காக இஸ்லாமியப் பெண்கள், கிறிஸ்துவப்பெண்களை பாலியல் வன்முறை செய்யுற சங்கிகள் தான் உண்மையான தேசபக்தர்கள். மதச் சார்பற்ற ஜனநாயக இந்தியாவை உருவாக்க பாடுபட்ட அனைவருமே, காந்தியிலிருந்து பகத் சிங் வரைக்கும் எல்லாருமே தேசதுரோகிகள்னு கோல்வால்கர் வெளக்கம் கொடுத்துருக்குறாரு. இதே வரைமுறைய தான் பாஜகவும் பயன்படுத்துது. ஹிந்துவா இல்லாதவர்களை நாட்டை விட்டு வேளியேத்தனும்குற கோல்வால்கரோட இந்த திட்டத்தை செயல்படுத்தத்தான் பாஜக அரசு சி.ஏ.ஏ-என்.ஆர்.சினு குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்துருக்கு. அதுனால தான் சொல்றேன் இந்த பாட்டி சொல்லைத் தட்டாதீக பாஜகவுக்கு ஓட்டு போடாதீக.

 (தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...