Saturday, March 23, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (39):

 

மோடியோட குருஜி கோல்வால்கர் தொடர்ந்து என்ன சொல்றருன்னு கேப்போம்: “மற்றொரு குறிப்பிடத்தக்க உதாரணம் ரஷ்யா; இந்த 'தேசம்' எந்த குறிப்பிட்ட மதக் கொள்கையையும் கூறாததால், இதை நாம் பரிசீலனைக்காக ஒதுக்கியுள்ளோம். போருக்குப் பிறகு அது எப்படி மாறியிருந்தாலும், அது இன்னும் முழுமையான தேசக் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. தொடக்கத்தில், சோசலிசத்தின் புதிய கோட்பாடு, அதன் கம்யூனிஸ்ட் வடிவத்தில் ரஷ்யாவில் முழு வீச்சில் இருந்தபோது, ​​"உலகின் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபடுங்கள்" என்ற முழக்கம் இருந்தது. மக்கள் தேசியத்தின் எல்லைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, முழு மனித குலத்தையும் தனது பணிக் களமாகக் கொண்டு சர்வதேசியத்திற்குப் புறப்பட்டது போல் தோன்றியது. ஆனால் உலகின் பிற பகுதிகளும், ரஷ்யாவில் உள்ள பெரும்பாலான மக்களும் கூட அத்தகைய பரந்த இலட்சியத்தைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. மனித மனம் என்பது அது இருக்கும் படித்தான் இருக்கும், அது உயர்ந்த தத்துவ மனப்பான்மையை எடுத்துக் கொள்ளாத வரை, அது உலகின் ஒருமைப்பாட்டைக் கூட கற்பனை செய்ய முடியாது. இதன் இயல்பான விளைவாக ரஷ்ய சர்வதேசியம் என்பது இல்லாமல் போனது, அநேகமாக, உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இன்று ரஷ்யா இன்னும் அதிகமாக மரபுவழி தேசமாக இருப்பதைக் காண்கிறோம். அது இப்போது பழைய வகையான தேசம் அல்ல, அவ்வளவுதான், ஆனால் அது ஒரு தேசம் என்பது தெளிவாகத் தெரிகிறது, பழைய நாடும் அதன் பழைய இனமும் உள்ளது.

ரஷ்யா இதுவரை மாறவில்லை, ஒரே மாற்றம் என்னவென்றால், தேசம் தனது பழைய மதம் மற்றும் கலாச்சாரத்தை கைவிட்டு, அதன் இடத்தில் புதியவற்றைக் கட்டியெழுப்பியுள்ளது, ரஷ்யாவில் இப்போது சோசலிசம் என்ற புதிய மதம் உள்ளது தொழிலாளர்களுடைய புதிய கலாச்சாரம் அவர்களின் பொருள்முதல்வாத மதத்திலிருந்து உருவானது. வாசகர்கள், கலாச்சாரம் - ரஷ்யாவின் பொருள்முதல்வாத கலாச்சாரம் தொடர்பாக எங்களுடன் உடன்பட மாட்டார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்; சோசலிசம் நவீன ரஷ்யாவின் மதம் என்று நாங்கள் சொல்வதால் அவர்கள் ஆச்சரியப்படக்கூடும். ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பெரும்பாலானவர்களுக்கு, மதம் என்பது தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காகவும் கடவுளை அடைவதற்காகவும் பிடிவாதமாக பின்பற்றப்பட வேண்டிய கருத்துகளின் தொகுப்பாகும். இங்கு கடவுள் நம்பிக்கை இல்லாத மதமும் உள்ளது. இது ஒரு கடவுள் இல்லாத மதம், ஆனாலும் அது ஒரு மதம் தான். ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்களின் தீர்க்கதரிசி கார்ல்மார்க்ஸ் , அவரது கருத்துக்களே அவர்களின் புதிய ஏற்பாடு. உலகின் பிற பகுதிகளில் கூட கடந்த காலங்களில் கடவுள் இல்லாத மதங்கள் இருந்தன. அந்த பண்டைய மதங்களின் நவீன வடிவமே ரஷ்ய மதம். சோசலிஸ்டுகள் உண்மையில் விரோச்சனா மற்றும் சார்வாகரின் வழித்தோன்றல்கள். ஆனால் ரஷ்ய தேசம் மத ஆர்வத்துடன் கடைபிடிக்கும் நம்பிக்கைகளைப் பற்றி விவாதிப்பது நமக்குப் பயனளிக்காது. இந்த நம்பிக்கைகள் அவர்களுக்கு புனிதமானவை மேலும் அவற்றிலிருந்து வேறுபட்ட அல்லது பிற அல்லது முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட அனைவருக்கும் அவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள். செமிடிக் மத சகிப்புத்தன்மையின்மையின் மற்றொரு உதாரணம், இந்த வடிவத்தில், உலகை மீண்டும் இரத்தத்தில் குளிப்பாட்டியுள்ளது. ரஷ்யாவிற்கு அதன் நாடு, இனம், பொருள்முதல்வாத கடவுள் அற்ற மதம், அதன் விளைவான கலாச்சாரம் மற்றும் அதன் மொழி மற்றும் கடன் பெற்ற சர்வதேசியத்தின் இறகுகள் துண்டிக்கப்பட்ட ஒரு தேசம் அதன் முழுமையான தேசியத்தில் உலகின் முன் நிற்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.” என்று கோல்மால் சொல்லிருக்காரு. கோல்வால்கருக்கு மதம் புடிச்சுருக்குறதால எல்லாத்தையுமே அவரால மதமா தான் பார்க்கமுடியுது. அதைத் தாண்டி மூளை வளர்ச்சி அடையல. அதுனால அறிவியலும் அவருக்கு மதம் தான். சோஷலிசமும் இன்னொரு மதம் தான். அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் இயங்கியல் வரலாற்று பொருள்முதல்வாதத்தை, மார்க்சியத்தை உலகத்துக்கு தந்த மார்க்ஸை ஒரு இறைதூதருக்கு நிகராவும், மார்க்சியத்தை பைபிளாகவும் விமர்சிப்பது கடைஞ்செடுத்த அயோக்கியத்தனம் தான. சோஷலிசம்னா என்னன்னு தெரியாமலே சோவியத் ரஷ்யாவை விசமத்தோட விமர்சனம் பண்ணிருக்காரு. அர்ஜெண்டினாவில் பிறந்து மருத்துவரான சேகுவேரா ஒரு மார்க்சியரா, சர்வதேசியவாதியா சமூகக்கடமையாற்ற கியூபப்புரட்சியில் பங்கேற்று கியூபாவை விடுதலை செஞ்சு லத்தின் அமெரிக்கா முழுவதையும் விடுதலை புரட்சியடைய வைக்கணும்னு தன்னோட உயிரையே அர்ப்பணிச்சாரு. இன்னிக்கும் உலகப்புரட்சியாளரா நமக்கெல்லாம் புரட்சிகர உத்வேகம் ஊட்டுறாரு. நம்ம புடிச்ச கஷ்ட காலம், இந்தியாவுல பொறந்த ஹெட்கேவாரும் ஒரு மருத்துவரானாரு. ஆனா அவரு என்ன பண்ணுனாரு. இந்தியர்கள காட்டுமிராண்டிகளாக்கி ஒலகத்தையே பழமைவாத விசப்புதைகுழியில தள்ளிவிடனும் என்ற உன்னத லட்சியத்துக்காக தன் மருத்துவ சேவையை துறந்து ஆர்.எஸ்.எஸ் என்ற நாசகர இயக்கத்தைத்தான் அவரால ஆரம்பிக்க முடிஞ்சுது. ஆர்.எஸ்.எஸின் லட்சியங்களை விவரிக்கும் போது அவுக என்ன தெரியுமா சொல்லுறாக. “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் தலைவர்களுக்கு உண்மையில தேசத்தின் தலைவிதியை வடிவமைக்க அது முன்னர் இருந்தது போல் மீண்டும் பிறக்கச்செய்ய கடவுள் கொடுத்த வரலாற்று வாய்ப்பாக இருந்தது, இந்த பழங்கால தேசத்தின் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தன்மையையும், காலத்தால் சோதிக்கப்பட்ட அடிப்படை மதிப்புகளையும் அடையாளம் கண்டு, அதன் அடிப்படையில் அன்றைய தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றங்களையும் கொண்டு வந்து தேசத்தை மறுவடிவமைப்பதே உண்மையான தேவையாக இருந்தது. ஆனால் அவர்கள் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாயத நலனே ஒரு சுதந்திர நாட்டின் இலக்கு என்று கருதினர்.

அவர்களுக்கு முன் இரண்டு மாதிரிகள் இருந்தன, இரண்டுமே மேற்கிலிருந்து வந்தவை. அமெரிக்காவின் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் எல்லா விதத்திலும் தனிமனித சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது உண்மையில் தனது சமூக வாழ்வின் முக்கியத் தேவைகளை திண்பதாக இருந்தது, அதற்கு மாற்றான ரஷ்ய சோசலிசம் அதன் லட்சிய ஐந்தாண்டுத் திட்டங்களுடன், பூமியிலே சொர்க்கத்தின் முகப்பைக் காட்டியது. இதில் உண்மையில் தனி நபர் சக்கரத்தில் ஒரு பல்லாக இருந்தார். இரு மாதிரிகளாலும் கவரப்பட்டு, பொருளாயத முன்னேற்றம் மட்டுமே உரைகல்லாக ஆக்கப்பட்டது, புதிய ஆட்சியாளர்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் பின்பற்றினர் - அதனால் இறுதியில் தேசம் இந்த இரண்டின் கார்பன் நகலாகவும் இல்லை.” முதலாளித்துவம், சோஷலிசம் இரண்டுக்கும் மாற்றாக ஒரு புது மாதிரியை ஒலகுக்கே ஆர்.எஸ்.எஸ் தான் கொடுத்துருக்காகலாம். என்னது அது. அவுக சொல்றாக கேளுங்க.

“இந்த விஷயத்தில் சங்கின் சிந்தனை மிக அடிப்படையான இயல்புடையதாகவே இருந்து வருகிறது. சங்கின் தொடக்கத்திலிருந்தே ஹிந்து ராஷ்டிராவின் "பரம் வைபவத்தை" (புகழ்ச்சியின் உச்சம்) அடைவதே இலக்காக இருந்தது, அன்னிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதே அந்தத் திசையில் ஒரு படியாகும். அதிகாரப் பரிமாற்றம் அதிகபட்சமாக "ஸ்வராஜ்" (தன்னைத் தானே ஆளுவதாக) ஆக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக "சுதந்திரியம்" அல்ல (ஒருவரின் சொந்த ஆற்றலை உண்மையாக்குவது). "பரம் வைபவ்" என்ற கருத்து தேசத்தின் பௌதிக முன்னேற்றத்திலும் வேரூன்றியிருக்கிறது, அதன் அடையாளத்தையும் நலன்களையும் அடமானம் வைத்து அல்ல” என்று சொல்றாக. அப்புறம் ஏன் ஆர்.எஸ்.எஸ்ஸோட பாஜக பணமாக்குதல் திட்டத்தின் கீழ இந்தியாவையே தனியார்க்கு அடமானம் வெச்சிருக்கு.

இதையும் கேட்டுருங்க:

“ஹிந்து நூற்றாண்டை நோக்கி:

பாரதத்தின் சூழலுக்கு மட்டுமல்லை, உலகளாவிய சூழ்நிலையும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தத்துவ அடித்தளத்தின் செல்லுபடியாகும் தன்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 வரப்போகும் அல்லது இருபத்தியோராம் நூற்றாண்டு ஹிந்துத்துவா ஆதிக்கம் செலுத்தும் நூற்றாண்டாக இருக்கும் என்பது, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் உட்பட பல தரப்பிலிருந்து கேட்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை குறிக்கும்.

முதலாளித்துவ மற்றும் கம்யூனிச சித்தாந்தங்கள் ஒரே மாதிரியாக தக்கன வெல்லும், இயற்கையை வரம்பில்லாமல் சுரண்டுதல், தடையற்ற தனிமனித உரிமை, மற்றும் போராட்டம் போன்ற கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

மார்க்சியப் பார்வை அதன் சொந்த மண்ணில் கூட நொறுங்கிப் போயிருந்தாலும், முதலாளித்துவ அமைப்பு அதன் கடைசிக் கட்டத்தில் உள்ளது, வளமான அரை டஜன் தீவுகளின் ஒதுங்கிய தீவுக்கூட்டமாக உயிர்வாழ மூச்சுத் திணறுகிறது. உலகம் ஒரு சாத்தியமான மற்றும் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கை-கண்ணோட்டத்தைத் தேடுகிறது. ஹிந்துத்துவா மட்டுமே அத்தகைய பார்வையை வழங்கக்கூடிய நிலையில் உள்ளது.

ஹிந்துத்வ தத்துவத்தின் செல்லுபடியாகும் தன்மை இருபதாம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில் கூடுதல் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது, மேலும் பாரதத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாக்காளர்களைக் கண்டறிந்துள்ளது.

வரவிருக்கும் நூற்றாண்டு ஹிந்து நூற்றாண்டாக இருக்கும் என்ற பிரகடனம் ஒரு சிமிரா அல்ல, மாறாக கடினமான உண்மைகள், பகுப்பாய்வு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலானது”ன்னு சொல்லுறாக. முதலாளித்துவம், கம்யூனிசத்துக்கு மாற்றாக ஹிந்துத்துவாவ உலகுக்கே கொடுத்தாகலாம். உலகத்தையே ஹிந்துத்துவ நூற்றாண்டுக்கு அழைச்சுக்குட்டு போவாகலாம். எப்புடி இருக்கு காமெடி. நீங்க எல்லாரும் வயிறு வலிக்க குலுங்கி குலுங்கி சிரிக்கனும்னு தான் நான் கஷ்டப்பட்டு ஆர்.எஸ்.எஸ் வெப்சைட்லேருந்து இதையெல்லாம் பொறுக்கி எடுத்து எழுதியிருக்கேன். இதுலேர்ந்து இன்னா தெரியுது ஆர்.எஸ்.எஸ், பாஜகல உள்ள சங்கிகள் எல்லாமே பித்துக்குளிகள், பைத்தியக்காரப் பயலுக, லூசுக்கூட்டம்னு தெரியுது, பைத்தியக்கார பாஜகவுகிட்ட நாட்டை விட்டதுனால தான் நாடே ஒரு வழி ஆயிடுச்சு. அதுனால தான் சொல்றேன் இந்த பாட்டி சொல்லைத் தட்டாதீக, பைத்தியம் புடிச்ச லூசு பாஜகவுக்கு ஓட்டு போடாதீக.

 (தொடரும்)

 

No comments:

Post a Comment

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (WIR 2026)

  உலக சமத்துவமின்மை ஆய்வகம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சமத்துவமின்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்  2018, 2022லும் உலக சமத்துவமின்மை அற...