முதல் உலகப்போருக்குப் பெறகு லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுச்சு, இதிலிருந்துது தான் ஐக்கிய நாடுகள் அவை பின்னாடி உருவாக்கப்பட்டுச்சு. லீக் ஆஃப் நேஷன்ஸ் தன் உறுப்பு நாடுகளா உள்ள தேசநாடுகள் சிறுபான்மையினருக்கும் சம உரிமைகள் கொடுக்கனும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குனுச்சு. இதப்பத்தி மோடியோட குருஜி கோல்வால்கர் என்ன சொல்றாருன்னு இப்ப கேப்போம்:
“லீக் ஆஃப் நேஷன்ஸ் பிரபலமான சிறுபான்மை
ஒப்பந்தங்களை வகுத்து அதற்கான மாற்றங்கள், மறுசீரமைப்புகள் அனைத்தையும்
மேற்பார்வையிட்டது, இதன் மூலம் தேசிய இனங்களுடன், வெளிநாட்டு இனங்களின் உரிமைகளை
சமமாக சரிசெய்து, அத்தகைய அரசுகளில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு
வழங்கப்படுகிறது. உண்மையில், தேசியம் என்பது அரசியல் ஒற்றுமைக்கான மற்றொரு பெயர்
மட்டுமே என்றும், இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றிற்கும்
அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் உலகம் கருதினால், எந்த பிரச்சனையும்
இருந்திருக்காது, ஏனென்றால் அப்போது எந்த வர்க்கத்தை சேர்ந்த மக்களும் சிறப்பு சலுகைகளையும்,
பாதுகாப்பையும் கோர முடியாது. ஆனால் லீக் ஆஃப் நேஷன்ஸ், நடைமுறையில் உலகின்
அனைத்து நாடுகளின் சிறந்த அரசியல் மூளைகளால் ஆனது, வேறுவிதமாக சிந்திக்கிறது, அரசியல்
கிளர்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட கருத்தை எண்ணுவதாகத் தெரியவில்லை.
'சிறுபான்மை' என்ற வார்த்தையின் வரையறை "ஒரு தேசத்தின் அமைப்பில் இணைக்கப்பட்ட
"பெரும்பான்மை மக்களிடமிருந்து இனம், மதம் மற்றும் மொழி ஆகியவற்றில்
வேறுபடும் குடிமக்கள் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள்"
என்பதிலிருந்தே ஒவ்வொரு தேசமும் அதன் சொந்த தேசிய இனம், மதம் மற்றும் மொழியைக்
கொண்டுள்ளது (கலாச்சாரத்தைத் தனிச்சிறப்பாக குறிப்பிடவேண்டியதில்லை, இனம், மதம்
மற்றும் மொழி ஆகிய மூன்றும் குறிப்பிடப்படும் போதே கலாச்சாரமும் அதில்
உள்ளார்ந்ததாக உள்ளது) தெளிவாகிறது.
சிறுபான்மையினரின் பிரச்சனையைப் பற்றி
விவாதிப்பது இன்றைய நமது பிரச்சனையைப் பற்றிய சரியான புரிதலுக்கு மிகவும்
பயனுள்ளதாக இருக்கும் என்ற போதும் அது இந்தச் சிறு புத்தகத்தின் எல்லைக்கு
அப்பாற்பட்டது, ஒரு சிறு வாக்கியத்தில் மட்டும் கூறுவோம், இப்படிப்பட்ட ஒரு அந்நிய
இனம் தேசத்தின் கைகளில் விருப்பமான சலுகைகளைக் கோருவதற்கு, அது ஒரு புதிதாக
குடியேறியதாக இருக்கக் கூடாது, புதிதாக தன்தீர்வுபெற்றதாக இருக்கக்கூடாது, மேலும்
அது தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 20%க்கும் குறைவாக இருக்கக்கூடாது, இது
நாடுகடத்தப்பட்ட யூதர்களுக்கு லீக் ஆஃப் நேஷன்ஸின் உதவியுடன் அவர்கள் இழந்த
தேசியத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
பின்னர் சில சிந்தனையாளர்கள், தேசம் என்ற
கருத்தாக்கத்தில் மதம் கலாச்சாரம் மற்றும் மொழி என்ற வார்த்தைகளை கைவிடுவது புத்திசாலித்தனம்
என்று நினைத்தார்கள். தேசத்தின் யோசனையிலிருந்து முழுவதுமாக, "தேசம்" என்பது
"பாரம்பரியமாக ஒரு பிரதேசத்தில் வாழும் பொதுவான மரபுகளையும், பொதுவான நாட்டங்களையும்
கொண்ட இனம்" என்று பொருள்படும்
விதத்தில் வரையறுத்துள்ளனர். அரசியலில் மதத்தை பராமரிப்பதில் பொறுமையில்லாதவர்களை இந்த
வரையறை திருப்திப்படுத்துகிறது. தேசியம் பற்றிய இந்த புதிய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்வதன்
மூலம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி வேறுபாடுகள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்
மேலும் உலகம் சீராக இயங்கும் நிலைகளால் ஆசீர்வதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்த
வழியில் வாழ்பவர்களிடையே சிறிதும் உரசல் இல்லாமல் இருக்கும் என்பதால் அந்த அரசுகள்
சீராக இயங்கமுடியும் என்றும் கருதப்படுகிறது, நாமும் அதை மனதளவில் விரும்புகிறோம்,
ஆனால் தேசத்தின் கருத்தை வெளிப்படுத்துவதில் இந்த வார்த்தை மாற்றம் இத்தகைய விரும்பத்தக்க
நிலையை எவ்வாறு கொண்டு வரும் என்பதை நாம் பார்க்கத் தவறுகிறோம். உண்மையில் தேசம் பற்றிய புரிதல் அதன் வெளிப்பாட்டின்
இந்த மாற்றத்தால் மாறுமா? குறைந்த பட்சம் இந்த புதிய வரையறை பழையதை பதிலீடு
செய்யவில்லை என்பதுடன் பழைய கருத்தாக்கத்தை சிறுதும் மாற்றவில்லை. ஏனென்றால், இந்த
"புதிய" வரையறையானது நாடு மற்றும் இனம் ஆகிய இரண்டு முதல் கூறுகளை பல வார்த்தைகளில்
அங்கீகரிக்கிறது, ஆனால் மற்றொன்றை இதன் மூலம் "பொதுவான மரபுகள் மற்றும் பொதுவான
நாட்டங்களைக் கொண்டுள்ளது” என மாற்றியமைக்கிறது
என்பது சராசரி புத்திசாலித்தனம் கொண்ட எந்த ஒரு நபருக்கும், தெளிவாகியிருக்கும்.
"பொது மரபுகள்" என்றால்
என்ன? ஒரு இனத்தின் பாரம்பரியம் என்பது அதன் மதம், கலாச்சாரம் மற்றும் அரசியல்
வாழ்க்கை முழுவதுமே அல்லவா? மேலும் ஒவ்வொரு இனத்தின் தனித்துவமான மொழியும் அதன்
சொந்த மரபுகளின் விளைவு அல்லவா? எனவே "பொது நாட்டங்கள்" என்ற
வார்த்தைகள் நமது பழைய சோதிக்கப்பட்ட வரையறைக்கு எதையும் புதிதாக சேர்க்கவில்லை;
தேசத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த நோக்கங்களுக்காக, தேசத்துரோகிகளாக மாறி,
ஒட்டுமொத்த தேசிய இனத்திலிருந்து முரண்படும் அல்லது வேறுபட்ட நாட்டங்களில் ஈடுபடும்
அனைவரையும் அதன் தேசியத்திலிருந்து விலக்குவதற்கான மறுக்கமுடியாத உரிமையை அவை
ஒவ்வொரு இனத்திற்கும் மட்டுமே வழங்குவதாகத் தெரிகிறது.
கோட்பாடும் நடைமுறையும் எப்பொழுதும்
ஒத்துப் போவதில்லை, நடைமுறை வாழ்க்கையில் எந்த இடமும் பெறாத கோட்பாடு
நிராகரிக்கப்படத் தகுதியானது. தேசம் பற்றிய நமது கோட்பாட்டுக் கருத்தாக்கம் இந்த
இறந்த கோட்பாடுகளில் ஒன்றா அல்லது நடைமுறை வாழ்க்கையின் சோதனையாக இருக்கிறதா
என்பதை இப்போது பார்க்க வேண்டும். குறிப்பாக இன்று ஜனநாயக அரசுகள் தங்கள் கைகளை
மதத்திலிருந்து சுத்தமாக கழுவிவிட்டதாக பெருமிதம் கொள்ளும்போது, மதம் கவனமான
ஆய்வுக்கு தகுதியானது.
தர்க்கரீதியாக ஆஸ்திரியா ஒரு சுதந்திர
இராச்சியமாக இருக்கக்கூடாது, ஆனால் ஜெர்மனியின் மற்ற பகுதிகளுடன் ஒன்றாக இருக்க
வேண்டும். அதேபோல், போருக்குப் பிறகு ஜெர்மானியர்கள் வசிக்கும் பகுதிகளுடன்
சேர்க்கப்பட்ட, செக்கோஸ்லோவாக்கியா என்ற புதிய நாடும் ஜெர்மனியுடன் ஒன்றாக
இருக்கவேண்டும். ஜேர்மனியின் தந்தை நாட்டுப் பெருமையும், ஒரு திட்டவட்டமான சொந்த நாட்டிற்காக
அந்த இனத்தின் உண்மையான தேசத்தின் கருத்தாக்கம் சில பாரம்பரிய பிணைப்புகளை
அவசியமாகக் கொண்டுள்ளதும் இந்த "பாரம்பரிய பிரதேசத்தில்" அனைத்துக்கும்
மேலாக, இணையற்ற, மறுக்கமுடியாத ஒரு ஜெர்மன் பேரரசை நிறுவுவதற்காக, ஒரு புதிய உலகக்
கொந்தளிப்பைத் தொடங்கும் அபாயத்தை எழுப்பியது. ஜேர்மனியின் இந்த இயற்கையான மற்றும்
தர்க்கரீதியான நாட்டம் ஏறக்குறைய நிறைவேறியுள்ளது மற்றும் 'நாட்டின் காரணி'யின்
பெரும் முக்கியத்துவம் மீண்டும் ஒருமுறை வாழும் நிகழ்காலத்திலும்
நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் கருத்தாக்கத்தில் இனமும், கலாச்சாரமும் மொழியும்
பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன, அங்கு மதம் இருக்க வேண்டிய அனைத்தையும்
தன்மயமாக்கும் சக்தியாக இல்லை. ஜெர்மன் இனத்தின் பெருமை இன்றைய நாளின் தலைப்புச்செய்தியாக
மாறியுள்ளது. இனம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்க வைத்துக் கொள்ள ஜெர்மனி,
செமிடிக் இன யூதர்களை நாட்டிலிருந்து அழித்ததன் மூலம் உலகை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமிதம் மிக உயர்ந்த இடத்தில் வெளிப்பட்டது.
வேரூன்றிய வேற்றுமைகளையுடைய, இனங்களும், கலாச்சாரங்களும் ஒன்றுபட்டு ஒன்றாக இணைவது
எவ்வளவு சாத்தியமற்றது என்பதை ஜெர்மனியும் காட்டியுள்ளது. இது ஹிந்துஸ்தானில் உள்ள
நமக்கு ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அதிலிருந்து அனுகூலமடையவும் நல்ல
பாடமாக உள்ளது. ஜெர்மானிய அரசின் மொழி ஜெர்மன், நாட்டில் சிறுபான்மையினராக வாழும்
அந்நிய இனங்கள் தங்களுக்குள் அந்தந்த மொழியைப் பயன்படுத்த சுதந்திரம் இருந்தாலும்,
பொது வாழ்வில் தேசத்தின் மொழியையே கையாள வேண்டும். மதத்தின் காரணியும்
புறக்கணிக்கப்படக்கூடாது. குடியரசுத் தலைவர், இருந்தால் பதவிப்பிரமாணம் செய்ய
வேண்டும், அதுவும் அதன் இயல்பில் முற்றிலும் மதச் சார்புடையது. ரோமன் கத்தோலிக்க
பிரிவின் படி, அங்கு அரசு விடுமுறைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ விடுமுறைகளாக உள்ளன.
சுருக்கமாகச் சொல்வதானால், தேசத்தின் கருத்தாக்கத்தின் ஐந்து கூறுகளும் நவீன
ஜெர்மனியில் தைரியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, அதுவும் இன்று உண்மையான
நிகழ்காலத்தில், நாம் அவற்றைப் பார்க்கவும் படிக்கவும் முடியும் விதத்தில், அவை
அவற்றின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தில் வெளிப்படுகின்றன.” அதனால் ஹிட்லர் தான் ஹிந்துத்துவாவின்
வழிகாட்டினு பூரிச்சு புளகாங்கிதம் அடையுறார் கோல்மால். ஜெர்மனியில் ஹிட்லரின்
சர்வாதிகாரத்தில் யூதர்கள் அழிக்கப்பட்டத ஹிந்துக்கள் எடுத்துக்காட்டாக பாடமாக
வெச்சு, இந்தியாவுல உள்ள முஸ்லிம்களையும் மற்ற சிறுபான்மையினரையும் இன அழிப்பு
செய்து தேசத்தின் ஹிந்துத்துவ இனத்தூய்மைய காப்பத்தனும்குறது என்பது தான்
கோல்வால்கர் சொல்லும் ஹிந்துத்துவ வேலைத்திட்டம் என்பது இப்ப அம்பலமாயிடுச்சுல்ல.
கோல்வால்கர் சொன்னதெல்லாம் வேதவாக்காக மதிக்கும் மோடியும், பாஜகவும் சிறுபான்மையின
மக்களை அழிக்கும் வேலைய தான் செஞ்சுகிட்டுருக்காக. அதுனால தான் சொல்றேன் இந்த பாட்டி சொல்லைத் தட்டாதீக, மதச்சார்பின்மை,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஜென்ம விரோதியான பாஜகவுக்கு ஓட்டு போடாதீக.
(தொடரும்)
No comments:
Post a Comment