பால் எயின்சிக். சொல்கிறார்:
பணத்தைப்
பற்றிய ஒரு "சமூகக் கோட்பாட்டை" முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்தேன்,
அதன் கீழ் பணம் ஒரு தொழில்நுட்ப கருவியாக கருதப்படாமல், பழமையான மற்றும் நவீன சமூகங்களுக்கு
வேறுபட்ட வழியில் இருந்தாலும் உந்து சக்தியை வழங்கும் ஒரு சமூக நிறுவனமாக இருக்கும்,.
இறுதியாக, ஆதிப் பணத்தின் செயல்பாட்டிற்கு தனித்துவமான சில புதிய கோட்பாடுகளை விரிவுபடுத்துவதன்
மூலம் சில வெற்றிடங்களை நிரப்ப வேண்டியிருந்தது.
நமது புலனாய்வுக் காலம் எழுதப்பட்ட சான்றாதாரங்கள் உள்ள
5,000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக உள்ளது. இந்த காலகட்டத்திற்கு அப்பால் இருக்கும் இருண்ட
பகுதியையும், அவற்றின் வெற்றிடங்களையும் ஆராய முயற்சிக்க வேண்டும். கெடுவாய்ப்பாக இந்த
வரலாற்றுக் காலத்தில். நரமாமிசம் உண்ட காட்டுமிராண்டி பழங்குடியினர் முதல் உயர் நாகரிக
நாடுகள் வரை பலவகைப்பட்ட சமூகங்களை கையாள வேண்டியுள்ளது. இந்த ஆய்வின் போது பேரரசுகளின்
எழுச்சியையும், வீழ்ச்சியையும், நாகரிகங்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் நாம்
பின்தொடர வேண்டியுள்ளது. வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் கூட வரலாற்று இனங்களின் மேம்பட்ட
அறிவுத் தரநிலை. காரணமாக இது ஒப்பீட்டளவில் பணியின் எளிதான பகுதியாகும். ஒரு பண்டைய
கிரேக்கர் அல்லது ஒரு பண்டைய எகிப்தியரின்
மனதின் செயல்பாட்டைப் பின்பற்றக்கூடிய நிலையில் நாம் உள்ளோம், ஏனென்றால் பல
நூற்றாண்டு காலங்களில் அறிவு கூடுதலாக் சேர்ந்ததன் காரணமாக ஏற்படும் வித்தியாசத்தை
அனுமதித்தாலும் கூட அவர்கள் அறிவாற்றல் தரத்தில்
ஏறக்குறைய நம்மை போன்றே இருந்துள்ளனர்.,
பண்டைய காலத்தின் சிறந்த ஆளுமைகள் நமது காலத்தின் சிறந்த மூளையுடையவர்களிடமிருந்து
வேறுபட்டவர்களாய் இருந்திருக்கவில்லை;. பழங்கால நாகரிக இனங்களின் சராசரி மனத் திறன்
நம்மிடமிருந்து வேறுபட்டதல்ல. இதன் விளைவாக, நமது சொந்த மனோபாவத்துடன் ஒத்தவிதத்தில்
பணத்தைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்குகந்த நல்ல
நிலையில் நாம் இருக்கிறோம்.
.பரிணாம
வளர்ச்சியின் பழமையான கட்டத்தில் இருந்த இனங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது
உண்மையான சிக்கல் வருகிறது. அவர்களின் அப்போதைய அறிவுசார் தரநிலை மற்றும் அவர்களின்
மனநிலை முற்றிலும் வேறுபட்டது. நாம் அவர்களுடன் ஒரே அலைநீளத்தில் இல்லை என்று சொல்லலாம்.
பணத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறை பல விஷயங்களில் நம்மிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டது.
இந்த வேறுபாட்டை நாம் முறையாகப் பாராட்டாதவரை, ஆதிகாலப் பணத்தைப் புரிந்துகொள்வதற்கான
வழிகள் நம்மிடம் இருக்காது.
ஆதிப் பணம் பற்றிய ஆய்வு என்பது முரண்பாடுகள் பற்றிய ஆய்வு
ஆகும். எண்ணற்ற அமைப்புகளின் துணையுடன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் உள்ள சமூகங்களின்
உணர்வுபூர்வமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அவர்களின் அறிவுசார் திறனின் வரம்புக்கும் மற்றும்
அவர்களின் சமூக அமைப்புகளுக்கும் அவர்களின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின்
நிலைக்கும் ஏற்ப அவர்களின் பணப் பிரச்சினைகளை உள்ளுக்குள் தீர்க்க முயன்றனர்.
ஆதிப்
பணத்தைப் பற்றி படிக்கும் போது, எளிமையைத் தொடும் சில அமைப்புகளை நாம் சந்திக்கிறோம்.
மதிப்பு குறித்து எந்தவொரு வளர்ச்சியடைந்த அறிவோ அல்லது மதிப்பை அளவிடும் திறனும் இல்லாத
மக்கள், ஜாடிகள், கிண்ணங்களில் கொள்ளும் தானியங்கள் அல்லது திரவத்தின் அளவிற்கு ஜாடிகளையும்
கிண்ணங்களையும் விற்கிறார்கள். மிகவும் பழமையான கட்டத்தில் சில சமூகங்களில் எடை எடைக்கு
மாற்றப்படுகிறது. இவ்வாறு ஓர் அடிமை உப்பின் எடைக்கு மதிப்புடையவன். ஆனபோதும், ஒருதலைப்பட்ச
அறிவுசார் திறன் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் பெரும்பாலான நவீன சமூகங்களில் அடையப்பட்ட
தரத்தை விட மிகவும் மேம்பட்ட அமைப்புகளையும் கூட நாம் எதிர்கொள்கிறோம்
(தொடரும்)
No comments:
Post a Comment