Friday, January 26, 2024

பணம் பேசுறேன் (104):

 

இன்றைய காலத்தில் வளர்ச்சியடையாமல் உள்ள சமூகங்களிலிருந்து புராதன சமூகங்களை மீள் நிர்மாணம் செய்வது சரியாக இருக்காது என்றாலும் (செலிக்மேன், 1910) ஆதிமனிதன் அக்கம் பக்கத்தாருடன் அமைதியாக, நட்புறவு நிலையில் இருந்தான் எனும் கோட்பாடுகள் மெலனேசியாவுக்கு பொருந்தாது என்பதை சொல்லமுடியும்.. அதற்கு மாறாக படையெடுப்பதும், போர்புரிவதும் விதிவிலக்காக இல்லாமல் விதியாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு இனக்குழுவும் மற்றொரு இனக்குழுவுடன் வழக்கமாக சண்டையைத் தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு பக்கமும் எவ்வளவு பேர் கொல்லப்படுகின்றனர் என்பது பழிவாங்கும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டவாறே எண்ணப்பட்டு கணக்கில் கொள்ளப்படுகிறது.  இரு தரப்பில் யாரேனும் ஒருவர் போதுமானதற்கும் அதிகமாக சண்டை போட்டுவிட்டோம் என்று கருதினால் அமைதியை ஏற்படுத்தும் சடங்கு ஒரு தரப்பினராலோ மற்ற தரப்பினராலோ முன்மொழியப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதிக அளவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வாகவாகவுக்கும், மைவராவுக்கும் இடையே அமைதியை உருவாக்கும் போது (நியூ கினியாவின் கிழக்கு முனையில் உள்ள மில்னே வளைகுடாவில் உள்ளது), பன்றியின் தந்தத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள், பன்றிகளுடன் 15 ஜோடி டொயா கிளிஞ்சல் வளையல்கள், பாகி சாமகுப்தாவையும் கொண்ட ஒன்பது சப்பிசப்பி கிளிஞ்சல் வட்டுக்களாலான சங்கிலிகள், நான்கு கிளிஞ்சல்களாலான மூக்கில் அணியும் ஆபரணங்கள் ஆகியவை பரிசுப் பொருட்களாகக் கொடுக்கப்பட்டன.

போர்னியோவில் கொலைகளுக்கான தீர்வு காணப்பட்டு, இழப்பீடுகள் கொடுக்க ஏற்பாடு செய்த அமைதியை உருவாக்கும் சடங்கு குறித்து  ஃபர்னெஸ் விவரித்துள்ளார். சிறிய அளவில் மணிகளும், விலையுயர்ந்த ஜாடிகளும், பித்தளை கண்டாமணி இழப்பீடுகளாகப் பரிமாற்றப்பட்டன. இந்த  நேர்வில் கோரப்பட்டவை ஐந்து பித்தளை டவாக் கண்டாமணிகள், 5 சிறியவையுமாக மொத்தமாக 300 மெக்சிகன் டாலர்களாக இருந்துள்ளது. ஆனபோதும் இறுதியில் ஒரு டவாக் கண்டாமணி, சிறிய ஒன்று, பெருமளவு மதிப்பிடப்பட்ட லுகு செகலா மணிகளாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இவை அனைத்துமே பரிசுகள். பரிசுகளாக கொடுக்கப்பட்ட இந்த பொருட்கள் நாணயமாக பரிமாற்ற ஊடகமாகவும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்று ஹிங்ஸ்டன் குய்கின் கூறியுள்ளார்;

.ஆதிப்பணத்தை பற்றி பால் எயின்சிக் என்ன சொல்றாருன்னு இப்ப கேட்போம்.

பரிணாம வளர்ச்சியின் பழமையான கட்டத்தில் இருந்த இனங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது உண்மையான சிக்கல் வருகிறது. அவர்களின் அப்போதைய அறிவுசார் தரநிலை மற்றும் அவர்களின் மனநிலை முற்றிலும் வேறுபட்டது. நாம் அவர்களுடன் ஒரே அலைநீளத்தில் இல்லை என்று சொல்லலாம். பணத்தைப் பற்றிய அவர்களின் அணுகுமுறை பல விஷயங்களில் நம்மிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டது. இந்த வேறுபாட்டை நாம் முறையாகப் பாராட்டாதவரை, ஆதிகாலப் பணத்தைப் புரிந்துகொள்வதற்கான வழிகள் நம்மிடம் இருக்காது..

மேலும் ஏற்கனவே உள்ள சில கோட்பாடுகளை துணை நிறைவுசெய்து திருத்த வேண்டியதன் அவசியத்தையும் மேலும் சிலவற்றை மாற்ற வேண்டும் என்பதையும் நான்  வலுவாக உணர்ந்தேன்,. குறிப்பாக, அவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளில் பணத்தின் வர்த்தகம் அல்லாத தோற்றத்திற்கான சாத்தியப்பாட்டிற்கும், பணத்திற்கு முன் கடன் இருந்ததற்கான சாத்தியப்பாட்டிற்கும், பண்டமாற்றுக்கு முன் பணம் இருந்ததற்கான சாத்தியப்பாட்டிற்கும், தனியார் சொத்து அல்லது உழைப்புப் பிரிவினை ஏற்படுவதற்கு முன் பண்டமாற்று இருந்ததற்கான சாத்தியப்பாட்டிற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்தேன்.

 (தொடரும்)

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...