நியூ ஹெப்ரடிஸ் தீவுகள் உள்நாட்டு வர்த்தகத்திற்காக பல வகையான துணை நாணயங்களை கொண்டுள்ளன. தீவுகளில் உள்ள சம்பந்தப்பட்ட சமூகங்களில் பன்றிகளை பலியிடும் சடங்கு முறை எந்த அளவிற்கு நிலவுகிறது என்பதைப் பொறுத்து பன்றிகளுடன் ஒப்பிடும்போது இந்த நாணயங்களின் முக்கியத்துவம் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கும் மற்றும் பெரிய பல்வேறு பகுதிகளுக்கு இடையிலும் கூட மாறுபடும். நன்கு அறியப்பட்ட துணை நாணயங்களாக பாய்கள், கிளிஞ்சல்கள், கற்கள் மற்றும் இறகுகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
தானாவில் பன்றிக்குட்டிகள் சடங்கு பரிமாற்றங்களுக்கான பொருள்களாக உள்ளன. இந்த நோக்கத்திற்கான பன்றிகளின் வேண்டல் நிலையானவையாக இருப்பதால் அவை எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவை பரிமாற்ற ஊடகமா பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
மேவோ, அவொபா போன்ற சில தீவுகளில் பன்றிகளை விட பாய்கள் முக்கியமானவை. மலேகுலாவில் அவை சில்லறைக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவை துணை பாத்திரம்
வகிக்கும் தீவுகளில் பாய்கள் அவற்றின் விளிம்புகள் தேய்ந்து போகும் போது மதிப்பில் தேய்மானம் அடைகின்றன. மறுபுறம், அவை முக்கிய பங்கு வகிக்கும் தீவுகளில் அவை பெரிதாக வளரும்
போது அவற்றின் மதிப்பு கூடுகிறது.
ஸ்பீசரின் கூற்றுப்படி, மேவோவில் பாய்கள் தனித்தனி வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை புகையினால் சூழப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக தீ தொடர்ந்து எரிகிறது. ஒரு நபர் இந்த செயல்முறையை தொடர்ந்து கவனிக்க வேண்டும். புகைபிடிக்கும் செயல்முறைக்கு உட்பட்ட நேரத்திற்கேற்ப அவரது ஊதியம் அதிகரிக்கும் போது
பாய்களின் மதிப்பும் படிப்படியாக அதிகரிக்கிறது. இந்த புகைபிடித்த பாய்கள் சங்கங்களில் பதவி உயர்வு வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அன்றாட தினசரி பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. அவற்றின் உரிமையாளர் மாறினாலும் அவை இருந்த இடத்திலிருந்து நகர்த்தப்படுவதில்லை.
அவை கடனாக வழங்கப்படுகின்றன, அதற்கு பழைய புகைபிடித்த பாய்களை திருப்பிச் செலுத்துவதன் மூலம் வட்டி பெறப்படுகிறது. வடக்கு பெண்டிகோட்டில் நல்ல நிலையில் உள்ள வண்ண பாய்கள் அன்றாட வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாயின் விலை 5 ஷில்லிங்க். வாவோவில் ஒரு பாய் ஒரு ஷில்லிங்க் என்ற விலையில் சில நேரங்களில் நாணயமாக ஐரோப்பியர்களுடனான வர்த்தகத்திலும் கூட பயன்படுத்தப்படுகின்றன
ரிவரின் கூற்றுப்படி
பெண்டிகோட்டில் இரண்டு வகையான பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன; சிவப்பு நிறம் "புனிதமான" நிறம் ஆகையால் சிவப்பு பாய்கள் மற்றவற்றை விட மதிப்புமிக்கவை. பாய்கள் சில தீவுகளில் மதிப்பை சேமிக்கும் முக்கிய ஊடகமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை செல்வத்தை வெளிக்காட்டும் காட்சிப்பொருட்களாகக் காட்டப்படுகின்றன. பல ஆசிரியர்கள் அவற்றை நாணயமாக கருதவில்லை. ஆனபோதும் எப்போதாவது, கை மாறும் பழைய பாய்களையும், தடையின்றி புழக்கத்தில் இருக்கும் புதிய பாய்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது நல்லது. கிளிஞ்சல்கள் தீவுக் கூட்டங்கள் குழு முழுவதும் மதிப்புமிக்க ஆபரணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் சில தீவுகளில் மட்டுமே அவை பணமாக பயன்படுத்தப்படுகின்றன.
எஸ்பிரிடோ சாண்டோ, மரியோ, ஆம்ப்ரிம் ஆகிய தீவுகளில்
அவை பணமாக பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் பால் எயின்சிக்.
(தொடரும்)
No comments:
Post a Comment