நியூ ஹெப்ரடிஸ் தீவுகளில் உள்ள இளைஞர்கள் ஊதியத்தை பன்றிகளில் பெறுவதற்காக தலைவர்கள் அல்லது பிற செல்வந்தர்களுக்கு கீழ் வேலை செய்ய வேண்டும். சமீப காலங்களில், நவீன பணம் சம்பாதிக்கவும், தங்கள் வருமானத்தை பன்றிகள் முதலீடு செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. மற்றவர்களுக்காக வேலை செய்யும் இளைஞர்களுக்கு பன்றிகளை வாங்கும் திறன் அதிகரித்துள்ளதன் காரணமாக பன்றிகளின் விலை அதிகரித்து வரும் போக்கு ஏற்பட்டிருக்கலாம்.
பன்றி கடன்களின் அளவு விரிவாக்கத்திற்கு மற்றொரு காரணம் அது பாதுகாப்பானது, பன்றிகளின் உரிமையாளர்கள் அவற்றை கடன் கொடுக்க வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்வதால் பன்றிகளின் இறப்பின்
மூலம் ஏற்படும் இழப்பிற்கான அபாயத்தைத் தவிர்க்கமுடியும். தீவுகளில் உள்ள அனைவரும் ஒரு பக்கம் பன்றிகளை கடன் வாங்கியவர்களாகவும், மறுபக்கம் பன்றிகளை கடன் கொடுத்தவர்களாகவும் இருக்கும்
விதமாக சூழல் வளர்ந்துள்ளது.
ஒரு நபர் மரணம் நெருங்குவதாக உணரும் போது அவர் தனது கடனாளிகளையும், தனக்கு
கடன் கொடுத்தவர்களையும் ஒன்றாக அழைக்கிறார். அவரது மரணப் படுக்கையில் அவர்கள் நிலைமையை சரிசெய்ய முயற்சி செய்கிறார்கள்.
கடன் செலுத்தத் தவறிய கடனாளிகளைத் தூண்டிவிடுவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் அல்லது அவர்கள் மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் பல்வேறு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பன்றி மந்திரவாதியின் சேவைகள் கூட பட்டியலிடப்பட்டுள்ளன; அவர் மந்திரங்கள் மற்றும் சாபங்களால் கடனாளிகளை தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்தவைக்கிறார்.
பன்றி கடன்களை செலுத்துவதாலும் அல்லது செலுத்தாதாலும் அதிக விகிதத்தில் தகராறுகளும், கொலைகளும் நிகழ்ந்துள்ளன. பன்றிகளை வைத்திருக்கவேண்டும்
என்பதற்காகவோ அல்லது பிற பொருட்களுக்கு அவற்றைப் பரிமாறிக் கொள்ளலாம் என்பதற்காகவோ அங்கு பன்றிகள் வைத்திருக்கப்படவில்லை.
முதன்மையாக பெரிய அளவில் பன்றிகள் பலியிடக்கூடிய நிலையில் ஏதுவாக இருப்பதற்காகவும், பண்டிகைகளுக்கு ஆடம்பரமாக பங்களிப்பதற்காகவும்
கூடுதலாக இரகசிய சங்கங்களில் உறுப்பினர் மற்றும் பதவி உயர்வு வாங்க முடியும் என்பதற்காகவுமே பன்றிகள் வைத்துக்கொள்ளப்படுகின்றன. புதிய ஹெப்ரைடுகளின் முழு பொருளாதார அமைப்பும் பரஸ்பர பரிசுகளின் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. பணக்கார மனிதர்கள் தாராளமான அளவில் கொடுத்து பிறருக்கு செய்யக்கூடிய நிலையில் உள்ளனர், அத்தகைய தாராளமான பரிசுகளைப் பெறுபவர்கள் போதுமான அளவுக்கு திருப்பிச் செலுத்தும் நிலையில் இல்லை எனில் அவர்கள் குனிந்த தலையுடன் தங்களது
இயலாமையையும், தாழ்வு நிலையையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பரஸ்பரமாக
கடனுக்கு உள்ளாகும் இந்த அமைப்பு நமது சொந்த நிதி அமைப்பைப் போலவே அதன் வழியில் முழுவதும் சிக்கலானது. எந்த நேரத்திலும் மொத்த எண்ணிக்கையில் உள்ள
பன்றிகளை விட அதிக எண்ணிக்கையிலான பன்றிகளுக்கு கடன் பட்ட நிலை காணப்படும் என்கிறார்
பால் எயின்சிக்.
(தொடரும்)
No comments:
Post a Comment