கடோகா
ஓசியானியாவில்
பாலினேசிய கலாச்சாரத்துடன் உள்ள வாலிஸ் மற்றும் ஃபுடுனா பகுதிகளில் கடோகா என்ற பெயரில்
திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இப்பகுதிகள் பின்னர் ஃபிரெஞ்சு காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு
உள்ளாகின. கடோகா, இரண்டு வாலிசியன் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது: கடோவா என்ற சொல்லிற்கு
அனைவரும் ஒன்று கூடல் என்று பொருள், ஆகா என்பதற்கு "நிகழ்ச்சி நடைபெறும் இடம்".
என்று பொருள்.
அறுவடை,
திருமணம், இறுதி சடங்கு, ஒன்றுகூடல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போதும் சமூக நல்லிணக்கத்திற்காகவும்
கடோகா எனப்படும் இந்த பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது பல பாலினேசிய சமூகங்களில்
கடோகா ஒரு கறாரான சடங்காக நெறிமுறைகளுடன் பின்பற்றப்படுகிறது.
கடோகா
கொண்டாட்டத்திலும் போட்லாட்சில் செய்யப்படுவது போல் பரிசுகள் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்றன.
ஒரு தரப்பினர் மறுதரப்பினருக்கு பரிசு வழங்குகிறார்கள், பின்னர் பரிசு பெற்றவர்கள்
பரிசு கொடுத்தவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். இதன் மூலம் சமூகத்தில் செல்வம் மறுபகிர்வு
செய்யப்படுகிறது.
இந்த
விழாவின் போது, பன்றிகள், காய்கறிகளின் கூடைகள் (சேனைக்கிழங்கு வள்ளிக்கிழங்கு), பாய்,
மரவுரி போன்ற பல பொருட்கள் பரிசுகளாக பரிமாறப்படுகின்றன. கடோகா விழாவிலும் அதிகமாக
பரிசு பொருட்களை வழங்குபவர் உயர்ந்த சமூக மதிப்பைப் பெறுகிறார்.
பாலினேசிய
சமூகங்களில், "பழங்குடி தலைவர்களால் உணவு உற்பத்தி மையப்படுத்தப்பட்டு பின்னர்
கடோகா விழாக்களின் மூலம் மறுபகிர்வு செய்யப்படுகிறது.
பல
கிராமங்கள் பங்கேற்கும் இதற்கான தயாரிப்பு வேலைகளுக்கு பல வாரங்கள், மாதங்களாகும்.
பரிசுகளை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள், ஆண்கள் பன்றிகளை வளர்த்து, சேனைக்கிழங்குகளை
உற்பத்தி செய்கிறார்கள், பெண்கள் பாய்களை பின்னுகிறார்கள்.
கடோகா விழாவில் கிராமவாசிகள் நடனமாடுகின்றனர், உரைகள்,
கவிதைகள் மற்றும் வாய்மொழி பாரம்பரியத்தில் இருந்து கதைகள் ஆகிய கலாச்சர நிகழ்வுகள்
பங்கேற்பவர்களால் பரிமாறப்படுகிறது. மக்கள் கொண்டு வரும் உணவு அனைவருக்கும் மறுபகிர்வு
செய்யப்படுகிறது, விருந்தளிக்கப்படுகிறது, காவா பானம் அருந்தி விருந்தினர் கொண்டாடுகின்றனர்
கடோகா
கொண்டாட்டங்கள் 19 ஆம் நூற்றாண்டில் வாலிஸ் மற்றும் ஃபுடுனாவில் கிறிஸ்தவமயமாக்கலுக்குப்
பிறகு சிறிது மாறிவிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் டோங்காவிலும் (அங்கே அவை கட்டோங்கா
என்று அழைக்கப்பட்டன) மற்றும் மார்க்வெசாஸ் தீவுகளிலும் இதே போன்ற விழாக்கள் அனுசரிக்கப்பட்டன.
அவை ரோட்டுமாவில் கட்டோ'க என்ற பெயரிலும் கொண்டாடப்படுகின்றன 20ஆம் நூற்றாண்டிலும்
டோங்காவில் அந்த கொண்டாட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
(தொடரும்)
No comments:
Post a Comment