Thursday, December 21, 2023

சூதாடும் காட்டேரி (89):

 


பிணையப்பொருளுக்கான உரிமை பெறப்படாமல் இருக்கும்போது ஒப்பந்தம் செல்லாது:

கடனாளியும், சாட்சியும் இல்லாத போது கடனுக்கான ஆவணம் எப்படி பயனற்றதாக இருக்குமோ அதே போல், பிணையம் கடனளித்தவரால் அனுபவிக்கப்படாமல் இருக்கும் போதும் கடனளித்தவர் பிணையத்திற்கான உரிமையை பெற்றுக்கொள்ளாதபோதும், பிறருக்கும் அதை கொடுக்காத போதும் எழுதப்பட்ட ஆவணம் செல்லாது என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

ஒரு பிணையம் பயனுடையதாக இருக்கவேண்டுமெனில் கடனளித்தவர் பிணையத்தை தன்வசப்படுத்திருக்கவேண்டும், பிணையத்தை பயன்படுத்தவேண்டும் அல்லது அதற்கு மாற்றாக பிணைய பொருளை அடையாளம் காணக்கூடிய சாட்சிகளை கொண்டிருக்கவேண்டும் என்பதையே பிரஹஸ்பதியின் மேற்கூறிய விதி குறிப்பிடுகிறது. இந்த விதியின் படி கடனளித்தவர் பிணையத்தை பெறாமலோ, பிணையத்தை பயன்படுத்தாமலோ இருக்கும் போதும் அதே போல் பிணைய பொருளை அடையாளம் காணக்கூடிய சாட்சி இல்லாதபோதும், பிணையத்தைப் பற்றிய எழுதப்பட்ட ஆவணம் கூட செல்லாது. பிணையம் சம்மந்தப்பட்ட ஆவணம் உருவாக்கப்பட்ட போதும் கூட, அதை செயல்படுத்தாமல் இருக்கும்போதும், அது போலியாகவோ, மோசடியான பரிவர்த்தனையாகவோ இருக்கும் போதும் உள்ள வழக்குகளை இந்த விதி நிர்வகிக்கிறது. பரிவர்த்தனை உண்மையாக இருக்கவேண்டுமெனில் கடன் அளித்தவர் பிணையத்தைப் பெற்றுக்கொள்வதிலிருந்து ஒருபோதும் தவறமாட்டார் என்ற அடிப்படையில் இந்த விதி செயல்படுத்தப்படும்.

முன்னதாக பிணையத்தை பெற்றிருப்பவரின் உரிமைகள்:

ஒரே சொத்தை அல்லது பொருளை இரண்டு நபர்களுக்கு பிணையமாக கொடுக்கப்படும் போது (அடமானமாக வைக்கும்போது) முன்னதாக அளிக்கப்பட்ட பிணையமே செல்லும். இரண்டு முறை பிணையமாக அளித்த நபர் திருடரைப்போல் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

பிணையம், பரிசு கொடுக்கும் போதும் அல்லது விற்பனை செய்யும் போதும் முன்னதாகவே அதை பரிவர்த்தனை செய்ததற்கான சான்று இருக்கும்போது என்ன செய்யவேண்டும் என யாக்ஞவல்கியா கூறியதிலிருந்தே இந்த விதி வருவிக்கப்பட்டுள்ளது. பயனுரிமை நல்கு பிணையம் /அடமானம் தவிர,  வழக்கைப் பொறுத்து கடனை வசூலிப்பதற்கான பாதுகாப்பான நடைமுறையாக அசையா அல்லது அசையும் சொத்து பிணையமாக, அடமானமாக இருப்பது பற்றியும் இவ்விதி குறிப்பிடுகிறது. ஆனபோதும் ஒரே சொத்தை மீண்டும் அடமானம் வைப்பதை இவ்விதி தடைசெய்கிறது. இரண்டாம் முறை நிலச்சொத்து எந்த அளவிற்கு அடமானம் வைக்கப்பட்டது என்பதைப் பொறுத்து இரண்டாம் முறை அடமானம் வைத்தவருக்கு உடல் ரீதியான தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என விஷ்ணு பரிந்துரைத்துள்ளார்.

வாய்வழி அடமானத்தை விட ஆவணத்தால் உருவாக்கப்பட்ட அடமானம் மேம்பட்டது:

பிணையத்தை பெற்றிருப்பவரின் உரிமை குறித்த மேற்கூறிய பொதுவான விதிக்கு மாறாக சில விதிவிலக்குகளை காத்யாயனா அளித்துள்ளார்.

சொத்து விவரங்களை கூறும் அடமானம் விவரங்களை குறிப்பிடாத அடமானத்தை விட மேம்பட்டது:

முன்னர் வைக்கப்பட்ட அடமானம், அதற்கு பின்னர் வைக்கப்பட்ட அடமானம் இரண்டுமே எழுதப்பட்டிருக்கும் போது, ஒரு அடமானத்தில் அடமான சொத்து தெளிவாக விளக்கப்பட்டும், மற்றொன்றில் அது போன்ற விளக்கம் இல்லாதிருந்தால், சொத்து விவரம் குறிப்பிடாத அடமானம் முன்னரே வைக்கப்பட்டிருந்தாலும் கூட, சொத்து விவரத்தை கூறும் அடமானமே வெல்லக்கூடியதாக இருக்கும்.

 (தொடரும்)

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...