Tuesday, December 19, 2023

சூதாடும் காட்டேரி (88):

 

பிணைய பொருளை பிற பொருள்களுடன் கலக்கும்போது உள்ள கடப்பாடு:

பிணையத்தை வைத்திருப்பவர் பலவந்தமாக, பிணையத்தின் உரிமையாளரின் அனுமதியில்லாமல் பிணையத்துடன், பிணையமாக அளிக்கப்படாத வேறொரு பொருளை சேர்த்திருப்பாரானால், பிணையத்தின் உரிமையாளர் தன் பிணையத்தை திரும்பப்பெற உரிமையுள்ளவர். பிணையத்தை வைத்திருந்தவர் அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

கடனளித்தவரிடமுள்ள தரந்தாழ்ந்த பொருட்களுடன் கலக்கக்கூடிய பண்புடையதாக பிணையப்பொருள் இருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த விதி  பொறுந்தும். கடனளித்தவர் பிணையத்தின் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய செயலை செய்தால் அது குற்றமாகும் அவர் அதற்கான கடப்பாட்டுக்குரியவராவார்.

பிணைய பொருள் பயன்பாட்டால் பயனிழந்து போகும் போது உள்ள கடப்பாடு:

ஒரு பிணையம் பயன்படுத்துப்பட்டு மதிப்பில்லாது ஆக்கப்பட்டிருக்குமானால் பிணையத்தைப் பெற்றவர் அசல் தொகையை பெறும் உரிமையை இழந்துவிடுவார். மிகவும் மதிப்புமிக்க பிணையம் அவ்வாறு ஆக்கப்பட்டிருக்குமானால் கடனளித்தவர் பிணையத்தின் உரிமையாளருக்கு நிறைவளிக்குமாறு செய்யவேண்டும் என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

கடனளித்தவருக்கு பிணையத்தைப் பயன்படுத்தும் உரிமை இருக்கும் போது சாதாரண நேரங்களில் அது பயனிழந்து போயிருக்குமானால் பிணையத்தின் உரிமையாளர் பிணையத்தை திரும்ப பெறுவதற்கு உரிமையற்றவராகவே இருப்பார் என்பதையே இந்த விதி குறிப்பிடுகிறது. கடனாளியின் கடப்பாட்டுடன் ஒப்பிடும்போது பிணையம் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் போது இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில் பிணையத்தைப் பெற்றவர் பிணையத்தின் உரிமையாளருக்கு நிறைவளிக்குமாறு செயல்படவேண்டும்.

பாழான ஆவணத்தின் கீழுள்ள பிணையத்தை ரத்துசெய்தல்:

கடனாளியின் பாழான ஆவணித்தின் கீழுள்ளா பிணையத்தை கடனளித்தவர் அனுபவிப்பாரெனில், அரசர் அந்த பிணையத்தை அழிக்கலாம். கடனளித்தவர் அதற்காக அபராதம் கட்டவேண்டும் என காத்யாயனா பரிந்துரைத்துள்ளார்.

செல்லத்தக்க ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை பற்றி இதற்கு முன்னே கூறியிருந்தோம். சட்டத்துக்கு புறம்பான ஆவணத்தின் கீழ் பிணையம் கொடுக்கப்படுமானால் அதாவது 1. பிணையத்தின் உரிமையாளர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள தகுதியுடையவராக இருந்த போதும், சட்ட விரோதமான நோக்கத்திற்காக அதை செய்திருந்தால் அல்லது 2. பிணைய பொருளின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லாதிருந்தால் அல்லது 3. பிணையம் பலவந்தமாகவோ முறைகேடாகவோ பெறப்பட்டிருக்குமானால் அந்த சந்தர்ப்பங்களில் பிணையத்திற்கான ஆவணமே சட்ட விரோதமானதாக இருக்கும் போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் அது குறித்து புகார் அளித்தால்  அரசர் (நீதிமன்றம்) அத்தகைய ஆவணத்தை அழிக்கவும், முறைகேடான பரிவர்த்தனையை மேற்கொண்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கவும் கடமைப்பட்டுள்ளார்.

பிணையப்பொருளுக்கான உரிமை பெறப்படாமல் இருக்கும்போது ஒப்பந்தம் செல்லாது:

கடனாளியும், சாட்சியும் இல்லாத போது கடனுக்கான ஆவணம் எப்படி பயனற்றதாக இருக்குமோ அதே போல், பிணையம் கடனளித்தவரால் அனுபவிக்கப்படாமல் இருக்கும் போதும் கடனளித்தவர் பிணையத்திற்கான உரிமையை பெற்றுக்கொள்ளாதபோதும், பிறருக்கும் அதை கொடுக்காத போதும் எழுதப்பட்ட ஆவணம் செல்லாது என பிரஹஸ்பதி பரிந்துரைத்துள்ளார்.

(தொடரும்)

 

 

 

 

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...