உத்தரவாதம் குறித்தக் கோட்பாடு:
உத்தரவாதம்
அளிக்கும் நபர் பிரதிபு என அழைக்கப்படுகிறார். உத்தரவாதத்திற்கான அல்லது உறுதிச்சான்றுக்கான
ஒப்பந்தம் கடன் குறித்த சட்டத்தின் பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குபவர்கள்
பிணையம் பெற்ற பிறகு அல்லது நம்பகமான உத்தரவாதத்தை பெற்றபிறகு மட்டுமே முன்பணத்தை வழங்கவேண்டும்
என பிரஹஸ்பதி எச்சரித்துள்ளார்.
ஒரு
நபருக்கு கடன் தேவைப்படும்போது, கடன் வழங்குபவர் உத்தரவாதம் அல்லது பிணையம் இல்லாமல்
கடன் வழங்கமறுத்தால் அத்தகைய சந்தர்ப்பத்தில் கடன் தேவைப்படுபவரிடம் கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான
பாதுகாப்பாக பிணையம் இல்லாதபோது, அவர் கடன் அளிப்பவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக
நம்பகத்தன்மையும், செல்வாக்கும் உள்ள ஒருவரை மூன்றாம் தரப்பினராக உத்தரவாதம் அளிக்கச்
செய்யவேண்டும். அதேபோல் கடனைத் திருப்பிசெலுத்தாதற்காக கடனாளியை கடன் கொடுத்தவர் சிறையில்
அடைத்தால், தேவைப்படும்போது கடனாளி நீதிமன்றத்திற்கு வருவார் என ஒருவரை உத்தரவாதம்
அளிக்கச்செய்து அதன்பிறகு சிறையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவ்வாறு உத்தரவாதம்
அளிக்கும் போது கடன் அளித்தவர் கடனாளியை விடுதலை செய்யவேண்டும் என்று காத்யாயனா கூறியுள்ளார்.
உத்தரவாதத்தை
பிரதிபவ்யத்தை நிலைநாட்டுவதற்கு, கடன் அளிப்பவர், கடனாளி, உத்தரவாதத்தை அளிப்பவர் ஆகிய
மூன்று தரப்பினரின் ஒப்புதலைப் பெறவேண்டும். உத்தரவாதத்தை நிலைநாட்டிய பிறகு, அதன்
விளைவாக இரண்டு நபர்கள் கடன் கொடுத்தவருக்குக் கடனைத் திரும்பசெலுத்த கடமைப்பட்டவர்கள்,
முதலாவது கடனாளி, அவர் கடனைத் திரும்பசெலுத்தாதபோது உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கக்
கடமைப்பட்டுள்ளார்.
கடன்
பரிவர்த்தனையின் போது உத்தரவாதம் தவிர ஸ்மிருதிகளில் அளிக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளின்
படி, தேவைப்படும்போது மூன்றுதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வருவதற்கும், வழக்கில் நீதிமன்றம்
வழங்கும் இறுதி ஆணையை நிறைவேற்றுவதற்கும் மூன்றுதரப்பினரும் நீதிமன்றத்தின் முன் உத்தரவாதம்
அளிக்கவேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.
வாதி,
பிரதிவாதி இருவரிடமிருந்துமே நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தைப்
பெறவேண்டும் என யாக்ஞவல்கியஸ்மிரிதியில் (II 10-2) தெளிவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் தீர்ப்பாணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் உள்ளது. அரசரின் ஆணையின்
மூலமாகவோ, அல்லது கடன் கொடுத்தவர் தானாக முன்வந்து கடனாளியை சிறையில் அடைக்கும்போது,
அவரை விடுவிக்க ஒருவர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பதும் வழக்கமாக இருந்துள்ளது.
ஸ்மிரிதிகளில்
கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை ஒழுங்குபடுத்தும் விதிகளின் சாரத்தை பின்வருமாறு கூறலாம்:
வெவ்வேறு விதமான உத்தரவாதங்கள்:
யாக்ஞவல்கியஸ்மிருதியின்
(II-53) படி கடன் கொடுக்கும்போது கடனாளியை கொண்டுவந்து நிறுத்தவும், நம்பகத்தன்மைக்கும்,
கடன் அடைக்காதபட்சத்தில் கடனை அடைப்பதற்கும் உத்தரவாதம் கோரப்படுகிறது. முதல் இருவகை
உத்தரவாதங்களில் கடன் அடைக்கப்படாமல் இருந்தால் உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கவேண்டும்.
மூன்றாவது வகை உத்தரவாதத்தில் உத்தரவாதம் அளித்தவரும், அவரது வாரிசுகளும் கடனை அடைக்கவேண்டும்.
(தொடரும்)
No comments:
Post a Comment