நாணயங்கள் சுற்றோட்ட ஊடகமாக பயன்படுத்தப்பட்டதற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றியும், நாணயங்களால் பதிலீடு செய்யப்பட்ட பொருள்களான ஆதிப்பணங்களை பற்றியும் ஒரு பொதுவான கணக்காய்வு செய்யப்படாமலே இருந்ததால கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் மானுடவியலாளரான அலிசன் ஹிங்ஸ்டன் குய்கின் (1874-1971) தானே அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு ‘ஆதிப்பணத்தின் கணக்காய்வு – சுற்றோட்ட ஊடகத்தின் தொடக்கம்’ (A survey of primitive money – The beginnings of currency’) என்ற முக்கியமான நூலை எழுதியிருக்காங்க. இதில் உலகெங்கும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஆதிப்பணங்கள் பற்றி விரிவாக தொகுப்பாய்வு செய்யப்பட்டுருக்கு.
சுற்றோட்ட
ஊடகம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்தைய காலகட்டத்தை விளக்கும் போது, பரிசு கொடுப்பதற்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கும்
இடைப்பட்ட காலகட்டத்துல உலகளவில் பரிசு பரிமாற்றங்கள், அமைதி வர்த்தகம் என இரு வழக்கங்கள்
பரவிக்காணப்பட்டதாக ஹிங்ஸ்டன் குய்கின் சொல்றாங்க.
அமைதி
வர்த்தகம் வடக்கு ஐரோப்பாவிலும், கிழக்கில் இந்தியா, சிலோன், கிழக்கிந்தியத்தீவுகள்லயும்,
நியூ கினியா, நியூ ஹெபிரிடிஸ் தீவுகள்லயும் செய்யப்பட்டுருக்கு. ஆனாலும் அது ஆஃப்ரிக்காவில்
பெரிய அளவில் பரவிக் காணப்பட்டுருந்துச்சாம்.
மானுடவியலாளர் எமில்
டோர்டே தன்னுடைய ‘Causeries Congolaises’ நூலில் கொடுத்துள்ள பின்வரும் சம்பவத்தையும் அவங்க
மேற்கோள் காட்டியிருக்காங்க.
சின்ன பிக்மி வேட்டைக்காரர்
தன் இரையைக் கொன்று பசியாற சாப்பிட்ட பிறகு மிச்சமுள்ள மாமிசத்தை இருண்ட இரவில் கிராமத்தின்
முகப்பில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் கட்டிவிடுவார். காலையில கிராமத்தினர் தங்களுக்கு
வேண்டிய மாமிசத்தை வெட்டி எடுத்துக்கொண்டபின்பு
அதற்கு பதிலாக, சம மதிப்புள்ள சோளம், மரவள்ளிக், கிழங்கு அல்லது சேனைக்கிழங்குகளை
மரத்தில் கட்டிவிடுவாங்க. இது நேர்மையான முறையில் தான் கணக்கிடப்படுது. ஏன்னா, இரவில்
சேரவேண்டியதை எடுக்க வரும் பிக்மி ஏமாறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவருடைய விசம் தடவிய
அம்புகள் நியாயமான விலையைக் கொடுக்காத கிராமத்தினரை பதம் பார்த்துவிடும்.
வடக்கு
ரொடிசீயாவிலிருந்தும் ஒரு உதாரணத்தைக் கொடுத்துருக்காங்க. உடைந்த மலையின் மேற்கே உள்ள
பெரிய லுகாங்கா சதுப்பு நிலத்தில் உள்ள அவத்வா இனத்தவர் (அபத்வா) அமைதி வர்த்தகத்தின் மூலம் தங்களோட மீனை தானியத்துக்கு மாத்திக்கிறாங்க.
மீன் தான் அந்த சதுப்பு நிலத்தோட
முக்கிய விளைபொருளா இருக்கு. அதற்கு கரையோரம் கடுமையான கிராக்கி இருக்கு. பகல் பொழுதுல
கடற்கரைக்கு அப்பாலுள்ள கிராமத்தை சேர்ந்தவங்க சோளத்தை சதுப்பு நிலத்தின் ஓரத்துல வெச்சுட்டு
அவங்க கிராமத்துக்கோ, தூரத்திலிருந்து வந்துருந்தா அவங்க தங்குமிடத்துக்கோ போயிடுவாங்க.
அவங்க வருகைய கேள்விப்பட்ட அவத்வா இனத்தவர் இரவு வேளையில் தங்கள் படகுகள்ல கருவாட எடுத்துக்கிட்டு
போய் சதுப்பு நிலத்தின் ஓரத்துல சோளத்துக்கு பதிலா வெச்சுடுவாங்க. அவங்க சோளத்தை எடுத்துக்கிட்டு
போயுடுவாங்க. கடற்கரைக்கு அப்பாலுள்ள கிராமத்தை சேர்ந்தவங்க திரும்ப வந்து கருவாட எடுத்துக்கிட்டு
போயுடுவாங்க. இந்த பரிமாற்றத்துல ஈடுபட்ட இரண்டு தரப்பினருமே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கல.
என்கிறார் மானுடவியலாளர்
மௌப்ரே, (1912)
குடியேற்றத்திற்கு
முந்தைய பழங்காலத்துல இந்த முறையில தான் வர்த்தகம் செய்யப்பட்டுருக்கு. ஆனால் பிறகு
சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பிறகு, படையெடுத்து சூரையாடும் பழக்கம் நின்றபிறகு
மிகவும் அமைதியான நம்பிக்கையின் அடிப்படையிலான வர்த்தகம் மக்களுக்கிடையே நடைபெற்றதாகவும்
மௌப்ரே குறிப்பிட்டுள்ளார்.
(தொடரும்)
No comments:
Post a Comment